அலை உறங்கும் கடல் Quotes

Rate this book
Clear rating
அலை உறங்கும் கடல் அலை உறங்கும் கடல் by Pa Raghavan
30 ratings, 3.77 average rating, 2 reviews
அலை உறங்கும் கடல் Quotes Showing 1-3 of 3
“தாயே இன்று புரிகிறது. என் அச்சங்களே என் சூர்ப்பனகை. என் குழப்பங்களே என் அசுரர்கள். என் பால்யத்தின் பரிசுத்தமே என்னைச் சபரியாகவும் அணிலாகவும் உணரச் செய்திருக்கிறது. நான் விழையும் ஒரு புருஷார்த்தம் ராமனாக உருக்கொண்டது. அதை யாரிடமும் காணாத ஏக்கம் தானோ என் சாபங்களானது? சபிக்க நான் யார்? என் தீச்சொற்களே அன்று என்னைச் சூழ்ந்த ஊழித்தீயென உணர்ந்து விட்டேன். என் வாய் திறந்து புறப்பட்ட ஒரு சுடர்ப்பொறி சீறிச்சென்று பற்றிக்கொண்ட உருவம் என் மகனென்று ஏன் தோன்றியது அப்போது. பைத்தியக்காரி. அது நானே அல்லவா? ஆ, இப்போது தெரிகிறது அவ்வுருவம்! வெகு தூரத்தில் இருளில் ஒரு புள்ளியாக பற்றிக் கொண்டு.. ஆகா என்ன ஜகஜ்ஜோதியாக நானே எரிகிறேன். நானே.. நானே..”
Pa Raghavan, அலை உறங்கும் கடல்
“என் கனவுகளில் நீ காட்டிய சங்கேதங்களின் அர்த்தம் உதிர்ந்து விட்டது. நான் கனவுகளில் வாழ்ந்து கொண்டிருந்ததாக நம்பிக் கொண்டிருந்தேன். என் கனவுகள் இதுகாறும் என்னைத் தின்று வந்திருப்பதை இப்போது உணருகிறேன்.”
Pa Raghavan, அலை உறங்கும் கடல்
“பாட்டியின் கனவுகளில் அடிக்கடி வருபவள் சூர்ப்பனகை. அவள் வந்த மறுதினம் ஏதாவதொரு அசம்பாவிதம் நிச்சயம் நடக்குமென்பாள் அவள்.
“உன் மேல நான் ஆசைப்படறேன்னு ஒரு பொண்ணு வெட்கத்தைவிட்டு வெளிப்படையா சொல்றது உயிரை வெளில எடுத்து சுண்டுவிரல் முனைல நிக்கவெச்சுண்டு பேசறதுக்குச் சமானம். போடீ சரிதான்னு அதுக்கு ஆம்பிளை பதில் சொல்லிவிட்டான்னா, அந்த க்ஷணம் பிராணன் போயிடும். மனுஷப் பிறவியாயிருந்தா என்ன? ராட்ஸஸப் பிறவியானத்தான் என்ன? பொண்ணு இல்லியோ அவ? அவளுக்கு அறுபட்டது மூக்கில்லே; மூச்சு! ஆறுமா அவ ஆத்மா? அதான், என் பிராணனை வாங்கறா. ஜென்மாந்திரத்தில நான் சபரியா இருந்தேனாம்! மானசீகமா ராமனைப் பிள்ளையா சுவீகரிச்சுண்டேனாம். அதான் வந்து வந்து, விட்டேனா பார் உன் பிள்ளையோட வம்சத்தைங்கிறா..”
சற்றும் தடங்கலோ, சங்கடமோ, நம்பகத்தன்மை பற்றிய சந்தேகமோ துளியுமற்றுத் தன் கனவை விவரித்துக்கொண்டே போவாள் நீலுப்பாட்டி.”
Pa Raghavan, அலை உறங்கும் கடல்