Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Chidbhavananda.
Showing 1-18 of 18
“Life pertaining to this world is in no way different from the spiritual. There is continuity and homogeneity in life in all its stages. Man will be in the hereafter none other than what he is here and now. Change of body effects no more change in the personality than does change of clothings. Mode of action it is that makes a person what he is. But action by itself is neither sacred nor secular. The attitude with which it is performed brings about a magical change in it. All actions become sacred in the hands of a spiritual man. On the contrary a man with a material outlook drags down even a sacred act to the vulgar plane. Because of his earthbound outlook, the uninitiated one fouls sacred acts into secular, whereas the message of the Gita is to metamorphose all actions into liberating sacred ones. This distinctive feature makes the Gita a book of universal application. Will, emotion and cognition are the three aspects of the phenomenon of the mind.”
― The Bhagavad Gita
― The Bhagavad Gita
“எவன் எங்கும் பற்றிலனாய், நலம் தருவதை அடைந்து மகிழாதும், கேடு தருவதை அடைந்து நொந்துகொள்ளாதுமிருக்கிறானோ அவன் அறிவு உறுதிபெறுகிறது.”
― The Bhagavad Gita
― The Bhagavad Gita
“கனவில் இருக்கும்போது கனவில் காண்கிற பொருள்களுக்கு மதிப்புண்டு; ஆங்கு உண்டாகிற இன்ப துன்பங்களுக்கும் மதிப்புண்டு. அத்தகைய கனவைவிட பெருநிலையாகின்றது நனவு. நனவுக்கு வந்தவுடனே கனவைப் பற்றிய மயக்கம் போய்விடுகிறது. கனவில் வந்த இன்ப துன்பங்களுக்குப் பிறகு மதிப்பில்லை. அங்ஙனம் கனவுக்கும் நனவுக்கும் மேம்பட்ட நிலையொன்று உண்டு. அது பிரம்ம நிர்வாணம் என்று பகரப்படுகிறது. அதை அடையப் பெற்றவனுக்குக் கனவு, நனவு ஆகிய அவஸ்தைகளைப் பற்றிய மயக்கம் கிடையாது.
பிரம்ம நிர்வாணம் என்பது அபரோக்ஷ அனுபூதி. மனம் மொழிக்கு எட்டாத பேரானந்தப் பெருநிலை அது. அப்பெரு நிலையினின்று கீழே இறங்கிவந்தவன் ஜீவன். திரும்பவும் அப்பெருநிலையை அடையப்பெற்றவன் முக்தன். நதிகளெல்லாம் கடலைப் போய்ச் சேர்ந்து கடலில் இரண்டறக் கலத்தல் போன்று பிரம்ம நிர்வாணம் அடைதல் ஜீவர்களின் குறிக்கோளாம். சாகும் தறுவாயில் அது வந்து அமைவதாயினும் அது முக்தியேயாம். விடுதலையென்றும் வீடுபேறு என்றும் அதைப் பகர்வதுண்டு.”
― The Bhagavad Gita
பிரம்ம நிர்வாணம் என்பது அபரோக்ஷ அனுபூதி. மனம் மொழிக்கு எட்டாத பேரானந்தப் பெருநிலை அது. அப்பெரு நிலையினின்று கீழே இறங்கிவந்தவன் ஜீவன். திரும்பவும் அப்பெருநிலையை அடையப்பெற்றவன் முக்தன். நதிகளெல்லாம் கடலைப் போய்ச் சேர்ந்து கடலில் இரண்டறக் கலத்தல் போன்று பிரம்ம நிர்வாணம் அடைதல் ஜீவர்களின் குறிக்கோளாம். சாகும் தறுவாயில் அது வந்து அமைவதாயினும் அது முக்தியேயாம். விடுதலையென்றும் வீடுபேறு என்றும் அதைப் பகர்வதுண்டு.”
― The Bhagavad Gita
“நெறி நிற்கும் நல்லறிஞனுடைய மனதையும் கொந்தளிப்புள்ள இந்திரியங்கள் பலவந்தமாகப் பற்றியிழுக்கின்றன.”
― The Bhagavad Gita
― The Bhagavad Gita
“பழுதுபட்ட துணிகளைக் களைந்துவிட்டு மனிதன் புதியவைகளைப் போட்டுக்கொள்வது போன்று ஆத்மா பழைய உடலங்களை நீத்துப் புதியன புகுகிறது.”
― The Bhagavad Gita
― The Bhagavad Gita
“அக்கினி தானே உஷ்ண சொரூபம். வெப்பத்தை நாடி அது வேறு பொருளிடத்துப் போகவேண்டியதில்லை. அங்ஙனம் ஆத்மா ஆனந்த சொரூபம். தன்னிடத்துள்ள ஆனந்தத்தை அது பிறபொருள்கள்மீது ஏற்றுவித்து, மனதைக்கொண்டு அவைகளை நாடிச் செல்கிறது. அத்தகைய நாட்டத்துக்குக் காமம் என்று பெயர். நீரில் அலை உண்டாவதுபோன்று காமம் மனதில் வடிவெடுக்கிறது. அலைகள் வீசும்பொழுது நீரின் அடிப்பக்கம் தென்படுவதில்லை. மனதில் காம அலைகள் வீசும்பொழுது அதற்கு அடிப்படையாயுள்ள ஆத்மாவின் ஆனந்தசொரூபம் சிதறடைந்ததுபோன்று ஆகிறது. காம அலைகளற்று மனது தேங்கியிருக்கும்போது ஆத்மாவின் ஆனந்த சொரூபம் தனக்குத் தானே விளங்குகிறது. தான் உலகெல்லாம் தேடிய இன்பம் தன்னிடத்தே யாண்டும் இருக்கிறது என்று மனம் தெளிபவனே நிறைஞானி. ஆத்ம திருப்தன் நிறைஞானி.”
― The Bhagavad Gita
― The Bhagavad Gita
“இவ்வாத்மா ஒருபோதும் பிறப்பதுமில்லை, இறப்பதுமில்லை. இது இல்லாதிருந்து பிறகு பிறந்த தன்று. (இருந்து பிறகு இறந்து போவதன்று.) இது பிறவாதது, இறவாதது, தேயாதது, வளராதது. காயம் கொல்லப்படுமிடத்தும் ஆத்மா கொல்லப்படுவதில்லை.”
― The Bhagavad Gita
― The Bhagavad Gita
“குலம் அழிந்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்ம நாசத்தால் குலம் முழுவதையும் அதர்மம் சூழ்கிறது.
அதர்மம் மிகுதலால் குலப்பெண்கள் கற்பிழக்கின்றனர். கிருஷ்ணா! மாதர் கற்பிழக்குமிடத்து வர்ணக் கலப்பு உண்டாகிறது.
கலப்பினால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமே ஏற்படுகிறது. அவர்களுடைய பித்ருக்கள் பிண்டத்தையும் நீரையும் இழந்து வீழ்கிறார்கள்.
குலநாசகர்கள் செய்யும் வர்ணக் கலப்பை விளைவிக்கும் இக்கேடுகளால் நிலைத்துள்ள ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும் நிலைகுலைக்கப்படும்.”
― The Bhagavad Gita
அதர்மம் மிகுதலால் குலப்பெண்கள் கற்பிழக்கின்றனர். கிருஷ்ணா! மாதர் கற்பிழக்குமிடத்து வர்ணக் கலப்பு உண்டாகிறது.
கலப்பினால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமே ஏற்படுகிறது. அவர்களுடைய பித்ருக்கள் பிண்டத்தையும் நீரையும் இழந்து வீழ்கிறார்கள்.
குலநாசகர்கள் செய்யும் வர்ணக் கலப்பை விளைவிக்கும் இக்கேடுகளால் நிலைத்துள்ள ஜாதி தர்மங்களும் குல தர்மங்களும் நிலைகுலைக்கப்படும்.”
― The Bhagavad Gita
“பார்த்தா, இவ்வாத்மாவை அழியாதது, மாறாதது, பிறவாதது, குறையாதது என்று அறிபவன் எப்படி யாரைக் கொல்வான், யாரைக் கொல்விப்பான்?”
― The Bhagavad Gita
― The Bhagavad Gita
“நித்தியமாய், நாசமற்றதாய், அளப்பரியதாய் உள்ள ஆத்மாவின் இவ்வுடலங்கள் யாவும் அழியும் தன்மையனவாம். ஆதலால் பாரதா, போர் புரிக.”
― The Bhagavad Gita
― The Bhagavad Gita
“ஆத்மாவில் இன்புற்று, ஆத்மாவில் திருப்தியடைந்து, ஆத்மாவில் மகிழ்ந்திருப்பவனுக்கு வினையாற்றும் கடமையில்லை.”
― The Bhagavad Gita
― The Bhagavad Gita
“அர்ஜுனா, நான் அயர்வின்றி எப்பொழுதும் கர்மத்தில் ஈடுபடாவிடில், மனிதர்கள் என் வழியையே யாண்டும் பின்பற்றுவர்.
நான் கர்மம் செய்யாவிட்டால் இவ்வுலகங்கள் அழிந்துபோம். ஜாதிக் கலப்புக்கும் நானே கர்த்தாவாய் மக்களைக் கெடுத்தவன் ஆவேன்.”
― The Bhagavad Gita
நான் கர்மம் செய்யாவிட்டால் இவ்வுலகங்கள் அழிந்துபோம். ஜாதிக் கலப்புக்கும் நானே கர்த்தாவாய் மக்களைக் கெடுத்தவன் ஆவேன்.”
― The Bhagavad Gita
“இந்திரியங்களை வெல்லுமளவு மனிதன் மேலோன் ஆகிறான். தனி மனிதன் அல்லது ஒரு சமுதாயம் அடைந்துள்ள பண்பாட்டை ஆங்குத் தென்படும் புலனடக்கத்தைக் கொண்டு அளந்துவிடலாம். சீரிய புலனடக்கமே மேலான நாகரிகம் என்று கருதப்படுகிறது.”
― The Bhagavad Gita
― The Bhagavad Gita
“பாரதா, உடல்கள் அனைத்திலும் உறைகின்ற ஆத்மா என்றும் வதைக்கப்படாதவன். ஆகையால் உயிர்களின்பொருட்டு நீ வருந்துதல் வேண்டாம்.”
― The Bhagavad Gita
― The Bhagavad Gita
“தடைப்பட்ட ஆசை சினமாக வடிவெடுக்கிறது. சினத்தைக் காணுமிடத்தெல்லாம் அதைத் துருவி ஆராய்ந்தால் அது தடைப்பட்ட ஆசை என்பது தெளிவாகும். சினம் பைத்தியத்துக்கு ஒப்பானது. பைத்தியம் நிலைத்துள்ளது; சினம் தாற்காலிகமாயுள்ளது. அவ்வளவுதான் வித்தியாசம். சினம் கொண்டவனுக்கும் பித்தம் பிடித்தவனுக்கும் நடைமுறை ஒன்றே. குழம்பிய மனநிலை அதன் விளைவு.”
― The Bhagavad Gita
― The Bhagavad Gita
“பொருள்களை நினைப்பதால் பற்றுண்டாகிறது. பற்று ஆசையாகப் பரிணமிக்கிறது. ஆசை சினமாக வடிவெடுக்கிறது.”
― The Bhagavad Gita
― The Bhagavad Gita
“क्लैब्यं मा स्म गमः पार्थ नैतत्त्वय्युपपद्यते ।
क्षुद्रं हृदयदौर्बल्यं त्यक्त्वोत्तिष्ठ परन्तप ।।
பார்த்தா, அலியின் இயல்பை அடையாதே. அது உனக்குப் பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே, இழிவான உள்ளத்தளர்வைத் துறந்துவிட்டு எழுந்திராய்.”
― The Bhagavad Gita
क्षुद्रं हृदयदौर्बल्यं त्यक्त्वोत्तिष्ठ परन्तप ।।
பார்த்தா, அலியின் இயல்பை அடையாதே. அது உனக்குப் பொருந்தாது. எதிரியை வாட்டுபவனே, இழிவான உள்ளத்தளர்வைத் துறந்துவிட்டு எழுந்திராய்.”
― The Bhagavad Gita
“ஆமை தன் அவயவங்களை அடக்கிக்கொள்வது போல் பொருள்களிடத்திருந்து பொறிகளை முழுதும் உள்ளிழுக்க வல்லவனுக்கு நிறைஞானம் நிலை பெறுகிறது.”
― The Bhagavad Gita
― The Bhagavad Gita



