தமிழ்ப்பிரபா's Blog
February 1, 2015
மீசை என்பது வெறும் மயிர்
மீசை என்பது வெறும் மயிர்
புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் எனக்கொரு ‘பழக்கதோஷம்’ இருந்தது. வசீகரமான தலைப்பு இருந்தால் இன்னார், இது எழுதியிருக்கிறார்கள் என்று எவ்விதமான தத்துவ விசாரணைகளுமின்றி அந்தப் புத்தகத்தை வாங்கிவிடுவேன். உதாரணத்திற்கு; “என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்” என்கிற தலைப்பைப் பார்த்ததும்.... ம்ம்ம்! அருமையான கள்ளக்காதல் சமாசார கதை புத்தகமாய் இருக்குமென்று, உடலில் உஷ்ணம் அதிகமாகி வாங்கினேன். அப்படித்தான் எனக்கு, அந்த கவிதை புத்தகமும், மனுஷ்யபுத்திரனும் அறிமுகமானார்கள். தமிழில் வந்த பிரமாதமான கவிதைத்தொகுப்பு “ஒன்றுண்டென்றால்” (மோளம் அடிப்பது போல இருக்கும், இன்னொருமுறை வாசிக்கவும்) ஒன்றுண்டென்றால், அவரின் அந்தத் தொகுப்பையே என்னால் சொல்ல முடியும். டி.வி விவாத நிகழ்ச்சிகளில் செட் ப்ராபர்ட்டி ஆன பிறகான, சமீபத்திய மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் எப்படியிருக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை.*
தலைப்பைக் கண்டு மதிமயங்கி, சில புத்தகங்களை தொடர்ந்து வாங்கி ஏமாந்ததால் சூதுவாது தெரிந்துக் கொண்டேன். தற்போது சென்னையில் முடிந்த புத்தக சந்தையில், “மீசை என்பது வெறும் மயிர்” என்று தலைப்பைப் பார்த்ததும் என் ஆசை மறுபடி துளிர்த்தது. பெயருக்கு ஏற்றார்போலயே ஆதிக்கத்தையும், அதிகார மனோபாவத்தையும் புனைவின் வழியே, நுட்பமாக கேலி, கிண்டல் செய்து, அவர்களை கழுவிலேற்றிய இம்மாதிரியான புத்தகத்தை, எனக்கு கருத்து தெரிந்த நாளிலிருந்து இப்போதுதான் படிக்கிறேன்.
தவிர, “மொழிப்பெயர்ப்பு” என்கிற பெயரில் எழுத்தாளர்களும், பதிப்பகங்களும் செய்யும் ராவடியை ‘மொழிப்பெயர்ப்பின் அரசியல்’ என்கிற பெயரில் இந்நூலாசிரியர் செய்த பரிகாசம், சிரித்து மாளவில்லை. ப (9-32).*“நந்தஜோதி பீம்தாஸ்” என்கிற கற்பனை எழுத்தாளரை உருவாக்கி அவரிடம் இந்நூலாசிரியரான ஆதவன் தீட்சண்யா, பேட்டியெடுக்க செல்லும் காரணமும், சம்பவங்களும், பேட்டியின் கேள்வி-பதிலும், பீம்தாஸ் எழுதிய “மீசை என்பது வெறும் மயிர்” என்கிற நாவலின் சுருக்கம் போன்றவை இப்புத்தகத்தின் சாரம்.பீம்தாஸ் கதாபாத்திரம் புனைவு என்றாலும் அவருக்கு நேர்ந்த அவமானங்கள், அவரின் பயணக்குறிப்புகள் எல்லாம் சான்றுகளோடு சொல்லப்படுகின்றன.*ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது பீம்தாஸ் பள்ளியிலிருந்து திரும்பும் வழியில், மேல்சாதிப்பய்யனை பெயர் சொல்லிக் கூப்பிட்டு விடுகிறார்.. அதைப் பார்த்த ஆண்டை “ எம்மகனே பேர் சொல்லி கூப்பிட துணிஞ்சியாடா நாயே, பள்ளிக் கூடத்துக்கு போயிட்டா நீங்களும் நாங்களும் ஒண்ணாயிடுவோமாடா? தினம் நாலுவாட்டி எங்களுத மண்டிப்போட்டு சப்பினாலும் எங்களுக்குச் சமமாயிட மாட்டீங்கடா ஈனசாதிப்பயலே.... என்று சாட்டக்குச்சியால் வெளுத்தெடுக்கிறான். ஆத்திரம் தாளமுடியாத பீம்தாஸ் “ எங்கப்பன் ஆத்தா வேர்வைய நக்கி ரத்தத்தை உறிஞ்சி ஒடம்ப வளக்குறது நீங்க...உங்களுத எதுக்குடா நாங்க சப்பணும்?” என்று கத்திக் கொண்டே அவன் குறியை கொட்டையோடு சேர்த்துத் திருகி அவனை ஒருவழிப்பண்ணி, பிறகு தன் பெற்றோரைவிட்டு அந்த ஊரிலிரிருந்துபோய் தனுஷ்கோடி ரயில்நிலையத்தில் படுத்துக்கொள்கிறார். அன்றிரவுதான் தனுஷ்கோடி, கடல் சீற்றத்தில் அழிந்து போகிறது. கடல் உயிரோடு விட்டுவைத்த வெகுசிலரில் பீம்தாஸும் ஒருவர்.*அவர் இலங்கைக்குச் செல்ல நேரிடுகிறது, தேயிலைக்காடுகளில் வேலை செய்வதற்கும், பட்டை லவங்கம் உறிப்பதற்கும் ப்ரிட்டிஷாரால் கொத்தடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டு பின்னாட்களில் “மலையகத்தமிழர்கள்” என்றழைக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும், சிலோன் பூர்வீகத் தமிழர்களுக்கும் சாதி காரணங்களால் ஏற்பட்ட பிணக்கங்களையும் புலம்பெயர்ந்த தமிழர்களை; தமிழக இந்திய & இலங்கை அரசியல்வாதிகள் குடியுரிமை தராமல் எப்படியெல்லாம் அலைக்கழிக்கப்பட்டார்கள், அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் ஆகிய அனைத்தையும் அரசியல்வாதிகளின் பெயரோடு இந்நாவல் விரிவாக ஆய்கிறது.
கலவரம் நடக்கும் பதட்டமான சூழலிலும்; “இங்கு அரசியல் பேசவும்” என்று தன் சலூன் கடையில் போர்டு வைத்து, மக்களிடம் விழிப்புணர்வு உண்டுபண்ணிய “ஆனந்தம்பிள்ளை”யின் பார்பர் ஷாப் எரிக்கபட்டு அவரை கொலை செய்தது போன்ற, இலங்கை அரசின் ஆரம்பாகால இனவாத அட்டூழியங்கள் கதை மாந்தர்களை வைத்து, சுற்றி வளைக்காமல் பேட்டிக்கு பதில் தருவதாய் நேரடியாக சொல்லப்பட்டிருக்கிறது.*தனக்கு ஏற்பட்ட துவேஷங்கள் மனதிற்குள் பொதிந்து போன, பீம்தாஸ் “ மீசை என்பது வெறும் மயிர்” என்றொரு நாவல் எழுதி, அதில் தன் சிறுவயதிலிருந்து கண்டுணர்ந்த சாதி, இன வெறியர்களை “இன்னமும் பெயரிடப்படாத நாடு” என்கிற ஒரு நாட்டை புனைவில் உருவாக்கி அங்கு அவர்களை நடமாடவிட்டு செவுளில் அரைகிறார். இடையிடையே சாதி, இன வெறியர்களை புனைவின் வழி பகடி செய்தபடியே இருந்தாலும் இப்புத்தகத்தின் கடைசி 35 பக்கங்கள் மரண அடி! அதிலிருந்து, சிலவற்றை மட்டும் இங்கே எடுத்து இயம்புவது மற்றவரிகளை அவமானப்படுத்துவதுவதற்கு ஒப்பானது, தவிர, “மீசை என்பது வெறும் மயிர்” ஏன்? என்பதற்கான விளக்கம் அந்த கடைசி கதையின் வழியில் தெளிவாக அறியமுடிவதால் அவற்றை சொல்லிவிடுவது இந்நூலாசிரியர் “ஆதவன் தீட்சண்யா”வுக்கு நான் செய்யும் துரோகமாகிவிடும்.
புத்தக திருவிழாக்களில் புழங்க வேண்டுமென்பதற்காக, அவசரமாக எழுதி வெளியிடப்பட்ட நூல்களை புரட்டிய ஆயாசத்திற்கு இடையில் “மீசை என்பது வெறும் மயிர்” ரகளையான இளைப்பாறுதல்.

Published on February 01, 2015 17:17
June 19, 2014
செம்மொழியான தமிழ் மொழியாம்

தமிழுக்கு கலைஞர் என்று பெயர்:
‘தமிழ்’ என்று ஒரு வெள்ளைத்தாளில் எழுதி அதை பீரோ கண்ணாடியில் காட்டினால் “கலைஞர்” என்று தெரியும். தோராயமாக தமிழுக்கு என்ன வயது இருக்குமென்று ஆதிச்சநல்லூர் கல்வெட்டிலிருந்து கூட இன்னும் கண்டுபிடிக்க முடியாததால் கலைஞருடைய வயதுதான் தமிழுக்கும் இருக்கும். கலைஞர் வேறு தமிழ் வேறு அல்ல, அவர் வாழும் வள்ளுவர், முத்தமிழ் அறிஞர் என்று நம் உடன்பிறப்புகள் அவ்வப்போது தபேலா வாசிப்பார்கள். யார் சொன்னா தேவராஜே சொன்னான் என்பது போல கலைஞரும் வாய்ப்பும் கிடைக்கும் போதெல்லாம் தமிழுக்கு அவர் செய்த தொண்டினை சொல்லி மல்குவார். குறிப்பாக இந்தி திணிப்புலிருந்து ஒட்டு மொத்த தமிழ்நாட்டையே தன் மொழி உணர்வால் தீயிலிருந்து காப்பற்றியது போல புளகாங்கிதம் அடைவார். நேற்று நடந்த இந்தி திணிப்பு சமாச்சாரத்தை முன்னிட்டு தன்னுடைய அறிக்கையில் //எங்களுடைய மொழி போர்க் களங்கள் இன்னும் உலர்ந்து போய்விடவில்லை// என்று டெல்லியை அச்சமூட்டினார். அவர் சொன்னதுக்கு ஏற்றார்போல தாள நயத்தோடு தோழர் மனுஷ்யபுத்திரனும் //மொழிப்போரில் தி.மு.கவின் போராட்டமும் தியாகமும் எந்த வரலாற்றுப் புரட்டினாலும் மறைக்க முடியாதது// என்று சுருதி சேர்த்தார். இவர்கள் சொல்வது வாஸ்தவம் ஆனால் தி.மு.க அன்று கையில் எடுத்த இந்தி (திணிப்பு) எதிர்ப்பின் பின்னணியில் ஒரு அரசியல் இருந்திருக்கிறது. போலவே தமிழ் மொழியையே திராவிட கட்சிகள்தான் குறிப்பாக தி.மு.க தான் அனைத்து தளங்களிலும் எடுத்துச் சென்றது என்பது போல ஒரு பிம்பம் அவர்களுடைய சாதுர்யத்தால் அரண்மனை சுவர்போல கட்டி எழுப்பபட்டிருக்கிறது. ஆனால் எனக்குத் தெரிந்த சில தரவுகளைத் திரட்டி அதை உடைத்து சொல்ல விழைகிறேன். குறிப்பாக Work From Home’ல் இருந்துகொண்டு இதை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றால் இதனுடைய வீரியத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். :)
கொஞ்சம் வரலாறு:
குப்தர்கள், கில்ஜி வம்சம், மொகலாயர்கள் என்று இந்தியாவை பலர் ஆண்டார்கள் அவர்களில் யாரும் தங்களுடைய மொழியை இந்திய மக்கள் கட்டாயமாக பேச வேண்டும் நம் மீது திணிக்கவில்லை. ஆனால் பின்பு வந்த வெள்ளைக்காரன் தன் 300 வருட ஆட்சியில் அவன் மொழியை நம்முடையதாக மாற்றினான். குறிப்பாக ‘மெக்காலே’ என்கிறவன் நம்முடைய தாய்மொழிக் கல்வி முறையான அடிமடியில் கைவைத்து அபாஷன் செய்தான். பிறகு அவர்கள் மூட்டை முடிச்சை கட்டிக்கொண்டு போன பிறகு ஒவ்வொரு மாநிலத்தாரும் தங்களுடைய தாய் மொழியை மற்ற தளங்களில் முக்கியமாக கல்வியில் கொண்டு வருவதற்கு படாத பாடு பட்டார்கள். நம் மாநிலத்திலும் இதற்காக நிறைய தமிழ் அறிஞர்கள் போராடியதெல்லாம் வேறொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன். அவர்களுடைய காலகட்டத்திற்கு பிறகு முதலமைச்சராக வந்த காமராசர் நாடெங்கிலும் தமிழ் வழிப் பள்ளிகளைத் திறந்தார். வாய்ப்புள்ள இடங்களில் கல்லூரிகளும் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டு கல்லூரிகளில் முதன்முறையாக அறிவியல் பட்டப்படிப்பும், பட்ட மேற்படிப்பும் தொடங்க முயற்சி எடுத்தார் அன்றைய கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம். மருத்துவம், தொழில்நுட்பம், சட்டம் என்று எல்லாக் கல்விகளும் தமிழ் தர முயற்சிகள் தொடங்கப்பட்டன. பெ.நா அப்புஸ்வாமி, நா.வானமலை, தவத்திரு குன்றக்குடி அடிகளார் முதலியோர் தமிழகமெங்கும் சுற்றித்திரிந்து கருத்தரங்கு நடத்தி தமிழால் இயலும் என்று நம்பிக்கை ஊட்ட முயன்றிருக்கிறார்கள். டாக்டர். சி.எ பெருமாள், டாக்டர் அ.வா தேவசேனாபதி, பேராசிரியர் பி.செல்லப்பா எஸ். தோதாத்ரி, வித்வான் ந.சுப்பிரமணியம், அ. நடராஜன், எஸ் மூர்த்தி முதலிய ஆசிரியப் பெருந்தகைகள் தங்கள் வகுப்பறை அனுபவங்களை அடிப்படையாக் கொண்டு தமிழால் எல்லாம் முடியுமென்று விளக்கிப் பேசினார்கள், கட்டுரை எழுதினார்கள், நூல்கள் வெளியிடப்பட்டன. தமிழ் எழுச்சி கைக்கு எட்டும்படியான சூழல் உருவாயிருக்கிறது.
இந்தி பிரவேசம்:
இந்த சூழ்நிலையில் இந்தி திணிப்பு என்கிற பிரச்சனையை முதலில் கிண்டியிருக்கிறார் அன்றைய உள்துறை அமைச்சர் குல்சாரிலால் நந்தா. மேலே குறிப்பிட்ட அரசியல்வாதிகளும் தமிழ் ஆர்வலர்களும் நம் மொழிக்காக அடித்தளம் போட்டுக் கொண்டிருக்க, உருவாகியிருக்கும் இந்தி திணிப்பு பிரச்சனையை ஆட்சியைப் பிடிப்பதற்கு ஒரு ஆயுதமாக 1965ல் தி.மு.க கப்பென்று பயன்படுத்திக் கொண்டது. இப்போராட்டத்தின் சாராம்சம் இந்தி நெவர் (ஒருபோதும் வேண்டாம்) இங்க்லீஷ் எவர் (எப்போதும் வேண்டும்) என்ற ஆங்கில முழக்கமே. நான்கு மொழிகள் கொண்ட திராவிட நாட்டில் தமிழை மட்டும் ஆட்சி மொழியாக்க முடியாதென்பதால் ஆங்கிலத்தை முன்னிலைப்படுத்தினர். ஆனால் “இந்தி நெவர் இங்கிலீஷ் எவர்” என்ற முழக்கத்தை ஊடறுக்கும் வகையில் ஒரு வலுவான கேள்வி எழுப்பப்பட்டது.
அன்றைய கம்யூனிஸ்ட்டுகள்:
“அப்படியானால் தமிழ்நாட்டின் தமிழின் இடமெங்கே? ஆட்சி மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும், கோயில் மொழியாகவும், எல்லாவற்றுக்கும் அடிப்படையாக தொடக்க நிலையிலிருந்து இறுதிநிலை வரை கல்வி நிலையங்களில் பயிற்று மொழியாகவும் ஆக வேண்டிய தமிழின் இடமெங்கே? என்று கேட்டது அன்றைய கம்யூனிஷ்ட் கட்சி. இந்த இடத்தில் இன்னொரு விஷயமும் சொல்லியாக வேண்டும். தா.பா போன்ற சந்தர்ப்பவாதிகளால் ஒட்டுமொத்த கம்யூனிஸ்ட் கட்சியே தமிழ்நாட்டில் இப்போது காமெடி பீஸாக இருக்கலாம் ஆனால் மொழிவழி மாநிலத்திற்காக அன்று போராடியவர்கள், சட்ட மன்றத்திலும், பாராளுமன்றத்திலும் முதன்முதலாக தமிழில் பேசியவவர்கள், நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் வைக்கச் சொல்லி 63 நாட்கள் பட்டினிப்போராட்டம் இருந்து கடைசிவரை எந்த கட்சியிலும் சேராமல் இறந்து போன சங்கரலிங்கனார் தன் சடலத்தை கடைசியில் கொடுக்கச் சொன்னது, தமிழ்நாடு என்று பெயர் வைக்கச் சொல்லி பாராளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்தது இவ்வனைத்தும் அன்றைய கம்யூனிஸ்ட்டுகளே என்று வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன! அன்றைய காங்கிரஸும், கம்யூனிஸ்ட்டும் தமிழ் நாட்டில் தமிழ்மொழி வளர்வதற்கு பெரிய பங்காற்றின!!
தி.மு.க’னா சும்மாவா:
ஆனால், தன் பேச்சுத் திறமையால் தி.மு.க அனைத்தையும் தன்வசப்படுத்தியது, அதற்கேற்றாற்போல் 1967ன் தேர்தல் முடிவுகள் வரலாற்றையே திசை திருப்பி விட்டன. முந்தைய அரசின் கல்வி அமைச்சர் சி. சுப்ரமணியத்தின் தாய்மொழிவழிக் கல்வியை பெருக்கி ஓரம் தள்ளியிருக்கிறார்கள். தமிழ் தமிழ் தமிழ் என்று வார்த்தைகளால் ஜல்லியடித்து அம்மொழியை அறிவியல், அறவியல் வளர்ச்சிக்கான திறவுகோல் என்ற நிலையிலிருந்து தி.மு.க தங்களுடைய அரசியல் வளர்ச்சிக்கான வெற்று முழக்கமாய் மேடை தோறும் சதிராடியிருக்கிறது. தமிழ் மக்களிடயே தமிழ் மொழி பற்றிய கிளர்ச்சியை அறிவுப்பூர்வமாக தூண்டாமல் உணர்வுப்பூர்வமாக தூண்டும் வகையில் பேசி அவர்களை மந்தை ஆடுகளாக்கி இருக்கிறார்கள். போலவே அதை வாய்ப்பாய் பயன்படுத்தி அப்போதிருந்த கல்வி வியாபாரிகள் அசட்டு தைரியத்துடன் தமிழ்வழிக் கல்விக்கு போட்டியாக ஆங்கில வழிக் கல்வியை கொண்டுவந்தார்கள். மெட்ரிக் பள்ளிகள் தொடங்க அனுமதிக்கப்பட்டது. தமிழ் மொழி ICUவில் அட்மிட் ஆனது அப்போதிருந்துதான். ஒருபுறம் தங்களுடய ஆதாயத்திற்காக மொழியை பலி செய்தவர்கள் மறுபுறம் மேடை தோறும் “தமிழ் எங்கள் மூச்சு தமிழ் எங்கள் பேச்சு” என்று ஜிகினா வார்த்தைகள் பேசி மக்களை நம்ப வைத்து தன் பிடியிலிருந்து நழுவாமல் பத்திரமாக பார்த்துக் கொண்டார்கள். தமிழறிஞர் கலைஞர் இதை மிக சாதுர்யமாக இன்றுவரை செய்துக் கொண்டிருக்கிறார். இதெதுவும் தெரியாமல், தெரிந்து கொள்ள விருப்பமில்லாமல் அல்லது தெரிந்தும் வழுவமைதி காத்து தமிழ் என்றால் கலைஞர். அம்மொழியை வளர்த்தது தி.மு.க என்றெல்லாம் கதை வசனம் பேசிக் கொண்டிருப்பது அன்று நிஜமாகவே இம்மொழிக்காக பெரிதும் பாடுபட்டு உயிர் நீர்த்தவர்களின் சமாதியை எட்டி உதைப்பதற்கு சமானம்.
ஆக்கம்தமிழ்ப்பிரபா.
Published on June 19, 2014 23:59
March 23, 2014
ம்க்க்கும் - குக்கூ

"கண்ணுஇருக்கிறவன் எல்லா எடத்துலயும் இருக்கான்ஆனா மனசு இருக்கிறவன் எல்லாஎடத்துலயும் இருக்க மாட்டான்டி"
"மொபைல்ஃபோன் இல்லாத காலத்தில் காதலித்தவர்களெல்லாம்ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்"
'பொண்ணுங்களதிட்றதையே ஃபேஷனா வெச்சுக்கிட்டு அலையறானுங்க"
இன்னும்இதுபோன்று சில ஒன் லைனர்களைசுட்டிக்காட்டி இப்படத்தைப் பற்றி அமர்க்களமான விமர்சனத்தைவரும் வார பத்திரிக்கைகளில் படித்துதெரிந்து கொள்ளுங்கள்.
இது நம்ம ஏரியா J
பார்த்துக்கொண்டிருப்பது சினிமா என்று தெரிந்தும்காட்சிகளோடு ஒன்றிப்போய் கண்களில் உங்களுக்கு நீர் கோர்த்திருக்கிறதா? பக்கத்திலிருப்பவர்கள்குழந்தைத்தனமாக ஏதாவது நினைத்து விடப்போகிறார்களென்று உடனே ஒரு நீண்ட பெருமூச்சுஅல்லது கொட்டாவி விடுவது போல ஏதோசெய்து அந்த உணர்வை மறைத்திருக்கிறீர்களா? நான் அப்படி செய்திருக்கிறேன். சினிமாவாகஇருந்தாலும் மனதைக் குடைவது போன்றகாட்சிகள் திரையில் வந்தால் என் விழிகள்பிசிபிசுக்க ஆரம்பித்து விடும். இப்படித்தான் ஒருமுறை “ஆரம்பம்”படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது கூட அஜீத் மடியிலேயேஅவர் நண்பன் உயிர் விடும்காட்சியைப் பார்த்து தாளாது தியேட்டரிலேயே கேவிகேவி அழ ஆரம்பித்து விட்டேன்உடனே என் நண்பன் ஓடிப்போய்எனக்கு ஒரு முட்டை பப்ஸ்வாங்கித் தந்து என் தலையைதடவிக் கொடுத்து என்னை ஆற்றுப்படுத்தினான்.அந்தஅளவுக்கு நான் மனதளவில் பலவீனமானஆள்.
ஆகவே, குக்கூ படத்தின் ட்ரெய்லரைமுதன்முதலில் பார்க்கும்போதே முடிவு செய்துவிட்டேன். படத்தைதியேட்டருக்கு சென்று பார்க்கும் இரண்டுநாட்களுக்கு முன்னதாக காசி, என் மனவானில், நான் கடவுள் போன்றதிரைப்படங்களை ஒருமுறை மீள்பார்வை செய்துவிட்டுத்தான்இந்த படத்தை பார்க்க செல்லவேண்டுமென்று, முறையே அவ்வாறே செய்துராஜ்கிரணே வந்து என் மார்பில்ஓங்கி ஒரு குத்து விட்டாலும்அசையாத கல்நெஞ்சுக்காரனாக மாறி படம் பார்க்கசென்றேன்.
மாற்றுத்திறனாளிகள்பற்றிய படமென்றால் படத்தை பார்க்க அமரும்முன்பே ரெடிமேடாக 300கிராம் கருணை, பரிவு, பரிதாபம், பச்சாதாபம், இத்யாதி நம்முடைய மேல்பாக்கெட்டில் வந்து ரொம்பிவிடும். மீதிவிஷயங்களை படம் பார்த்துக் கொள்ளும். மொத்த படத்தையும் பார்த்து முடித்து விட்டு எழுந்திருக்கும்போது பெரிதாய்ஒன்றும் பாதிக்கவில்லை என்றாலும் படம் சுமார்தான், காவியம், ஓவியம் என்று வாயெடுத்து சொல்லமுடியாமல் தர்ம சங்கடமாக இருக்கும். அப்படியொரு த.சங்கடத்தை ஏற்படுத்தியபடம்தான் குக்கூ.
தமிழ்-சுதந்திரக் கொடி இவ்விருவருக்குமிடையில் மோதல், காதல், பிரச்சனை, க்ளைமாக்ஸ், என்று தமிழ்சினிமா சம்பிரதாயத்துக்குஉட்பட்டு வந்திருக்கும் சாதா படம் என்றாலும்கதை நடப்பது பார்வைத் திறன்அற்றவர்களுக்கு என்பதால் சாதா அப்படியே ஸ்பெஷல்சாதாவாக மாறுகிறது. இப்படத்தின் இயக்குநர் ராஜுமுருகன், தான் விகடனில் பத்திரிக்கையாளராகஇருந்தபோது ஒரு காதலர் தினபேட்டிக்காக தமிழ் என்கிற பார்வையற்றமனிதரைப் பற்றி கேள்விப்பட்டு அவரை தேடிப் போய் சந்திக்கஅவர் தன்னுடைய நினைவுகளை மீட்டெடுக்கும் விதமாக படம் விரிகிறது.
எளிதில்அனுமானிக்கக் கூடிய கதையில் அடுத்தடுத்துவரும் காட்சிகள் வலுவாக, சுவாரசியமாக இல்லாமல்கொஞ்சம் பிசிறினாலும் படம் பார்ப்பவன் பக்கத்துக்குசீட்டுக்காரனிடம் பேச அல்லது செல்போனைஎடுத்து தடவ ஆரம்பித்து விடுவான். கதை நடக்கும் களமானது நாம் அன்றாடம்பார்த்துவிட்டு மாத்திரத்தில் முகத்தை திருப்பிக் கொள்பவர்களின்வாழ்க்கையின் இன்னொரு பக்கம் என்பதால்சொல்வதற்கு நிறைய ஸ்பேஸ் இருந்தும்இயக்குநர் இருவரின் காதல் வட்டதிற்க்குள்ளேயே சுழன்றதோடு நீட்டி முழக்கியிருக்கிறார் போதிலும்எப்போதாவது சொல்லப்படுகின்ற மனிதர்களின் கதை, ஃப்ரெஷ்ஷான ஒளிப்பதிவுமற்றும் இசைஅத்தோடு முன்பே சொன்ன சிலஉளவியல் காரணங்களால் ரசிகனால் ஓரளவு தாக்குப் பிடிக்கமுடிகிறது. இங்கு தான் "குக்கூ" அனைத்து தரப்பினரிடமிருந்தும் Neutral Feedback பெற்ற படமாக மாறியிருக்கிறது.
இந்த திரைப்படத்தில் என்னை வெகுவாய் கவர்ந்தது "கதாபாத்திரங்கள்". இயக்குநர் தன்னுடய வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களையெல்லாம் அங்கங்கே கதைக்கு ஏற்றாற்போல் இடைச்செருகல் செய்து நடமாட விட்டிருக்கிறார் என்பது அவர் இதற்கு முன்பு எழுதிய "வட்டியும் முதலும்" என்கிற கட்டுரைத் தொடரின் மொத்த சாராம்சத்தை வைத்து தீர்மானிக்க முடிகிறது. உதாரணத்திற்கு ரயிலில் அன்றாடம் பயணிக்கும் மேல்தட்டு வர்க்கத்தினரின் மனித நேயம், பார்வையற்றவர்களுக்கு சர்வீஸ் செய்து அதில் பெருமை தேடிக் கொள்ளும் கார்ப்பரேட் கூட்டம், இப்படி பல கதாபாத்திரங்கள் கவர்ந்திருக்கிறது. குறிப்பாக, பணத்தை திருடிச் சென்று ஓடும் போலீஸ்காரன், ட்ரங்க் & டிரைவ் செய்து வண்டி ஓட்டுகிறவன், வேணாம்னே கேஸ்ல ஏதாவது சிக்கிடுவோம்னு உதவி செய்ய பம்மும் சாமானியன், மனசாட்சியே இல்லையாடா வாடா எனக்கூறி காப்பாற்றும் அசாதாரணன் என்று சமூகத்தின் அத்தனை முகங்களையும் ஒரே காட்சியில் கண்முன்னே நிறுத்தியிருக்கும் குக்கூ டீமிற்கு சபாஷ்!!
தனக்கு இருக்கும் குறையை தானே கிண்டல் செய்து கொள்ளும் சுய எள்ளல் வசனங்கள் படத்தில் நிறைய இடத்தில் வந்தாலும் இந்த வகையறா காமெடி துணுக்குகளை ஏற்கனவே "காதலா காதலா, "123" போன்ற படங்களில் பிரபுதேவா செய்து விட்டதால் கதாநாயகன் மற்றும் அவனுடைய நண்பர்கள் குழாம் பேசிக் கொள்ளும் போது கொஞ்சம் அலுப்பு தட்டுகிறது.
அஜீத், விஜய் இருவர் மீதும் என்னைப் போன்றே ராஜு முருகனும் மரண காண்டு கொண்டிருப்பதை அவர் தன் படத்தின் மூலம் பகுமானமாக காட்டியிருப்பதால் மகிழ்ச்சியாக இருக்கும் அதே சமயம் ஒரு ஒயின் ஷாப் காட்சியில் லோக்கல் அரசியல்வாதி தன் சகாக்களோடு குடித்துக் கொண்டிருக்கும்போது அவர் கட்சிக்காரன் வந்து " அண்ணேன் Election'லாம் வருது பெரியண்ணன் கிட்ட சொல்லி ஏதாவது பாத்து செய்யுங்கண்ண" என்று கேட்கிறார். அதற்க்கு அவர் "டேய் பெரிய அண்ணனுக்கு எல்லாம் இப்போ பவரு இல்லடா எல்லாம் சின்ன அண்ணனுக்குத்தாண்டா அப்டேட்டடாக இருங்கடா" என்று சமகால தி.மு.க அரசியல் வசனத்தை வைத்து அழகிரி ஆதரவாளனான என்னை கொதித்தெழ வைத்திருக்கிறார்.
படத்தின் நீளத்தையும், ரிப்பீட்டட் காட்சிகளையும் குறைக்காமல் வலுவான திரைக்கதையையும் அமைக்காததால் குக்கூவைப் பற்றி பெரிதாய் ஒன்றும் வெளியில் பீத்திக் கொள்ள முடியாமல் "ம்க்க்கும்" என்று சொல்லத்தான் வாய் வருகிறது. அதற்காக இப்படத்தை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க முடியாது. இதுபோன்ற க்ரவுண்ட் ஜீரோ படங்கள் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வரவேண்டும், வணிகத்திற்காக எதையும் சமரசம் செய்துகொள்ளாமல் தன் முதல் படத்திலேயே தான் நினைத்ததை எடுக்க விரும்பும் ராஜு முருகன் போன்ற பிடிவாதக்காரர்கள் ஜெயிக்க வேண்டும். ஜெயிப்பார்கள்!
ஆக்கம் - தமிழ்ப் பிரபா
Published on March 23, 2014 00:10
February 12, 2014
உருகுதே மருகுதே - காதல் காட்சிகள்
உருகுதே மருகுதே - காதல் காட்சிகள்
காதலில்மகா உன்னதமான ஒரு உணர்வு இருக்கிறதென்பதைநம் மக்களுக்கு முன்மொழிந்ததில் தமிழ் சினிமாவுக்கு கடலளவுபங்கு இருக்கிறது. சினிமா என்ற ஒன்றுஇல்லையென்றால் காதலைப் பற்றி அறிந்துகொள்ளாமல் காட்டுத்தனமான காமுகர்களாகவே இருந்திருப்பதற்கும் வாய்ப்பு அதிகம். செவ்வியல் படைப்புகளில் என்னதான் ரசம் சொட்டச் சொட்ட காதலைப்பற்றி சொல்லியிருந்தாலும் சினிமா என்கிற மகத்தானஊடகத்தின் மூலம்தான் அதன் வீரியம் எல்லோரையும்போய் சேர்ந்தது. இன்னும் எழுநூறு வருடத்திற்குகாதலை மட்டுமே வைத்து இங்குஎத்தனை திரைப்படம் வேண்டுமென்றாலும் எடுக்கலாம்.
தமிழ் சினிமாவும், காதலும்இரண்டறக் கலந்து நமக்குள் அப்படியொருரஸவாதத்தை நிகழ்த்தியிருக்கிறது. என்னதான் தற்போது உலகசினிமா உள்ளங்கையில்வந்து, பிரித்து மேய்ந்தாலும் ஒருகாலத்தில் உருகி மருகி பார்த்ததமிழ் சினிமா காதல் காட்சிகள்நம் நினைவுக் குப்பைகளை சாதரணமாக கிளறக் கூடியவை. அந்தகாட்சிகளோடு நம்மை பொருத்திப் பார்த்துசிரித்திருக்கிறோம், அழுதிருக்கிறோம், ஏங்கியிருக்கிறோம், சுய அனுபவங்கள் இல்லாதஎவரொருவரும் கூட கதாபாத்திரங்களோடு ஒன்றிகாட்சிகளில் லயித்திருக்கிறோம். அப்படியாய் நான் பார்த்து இன்னும்என் நாவுக்கடியில் கற்கண்டாய் தித்திக்கும், குழாய் வெந்நீராய் உள்ளுக்குள்சொட்டிக் கொண்டிருக்கும் காதல் காட்சிகளையும் வசனங்களையும்படிப்பவர்களின் பொறுமையை சோதிக்காதவாறு பகிர்ந்து கொள்வதில் காதல் கொள்கிறேன்..
ஜானி படத்தில் ஸ்ரீதேவி தன்னுடைய நாணத்தை உடைத்துக் கொண்டுநேரடியாக ரஜினியிடம்காதலைச் சொல்லும் காட்சி. குறிப்பாக அந்தகாட்சியின்கடைசியில் "அதுக்குள்ள அவசரப்பட்டு என்னென்னமோ பேசிட்டீங்க" என்று அவர் கேட்டதும்"நான் அ-ப்-ப-டி-த்-தா- ன்பேசுவேன் என்று குழந்தையைப்போல ஸ்ரீதேவி சிணுங்க ஒருவரையொருவர் வெட்கம் பிடுங்க பார்த்து சிரித்துக் கொள்வது மொட்டவிழ்தலைப் போல மெதுவாக காதல் அரும்பும் அற்புத தருணம்
"உன்மேலபைத்தியமா என்னால இருக்க முடியாது, உனக்கே தெரிஞ்சிடும்"
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சமந்தாவிடம்சிலம்பரசன் சொல்லும் டயலாக் இது. காதலென்பதுஒருமுறைதான் வரும் என்பதெல்லாம் சுத்தப்பொய். ஆனால் எத்தனை பேரைகாதலித்தாலும் யாரோ ஒருவரின் மீதுதான் நமக்கு சைக்கோசிஸ் இருக்கும்/இருந்திருக்கும். அந்த கிறுக்குத்தனம் பின்பு எவர்மீதும் வராது. அதை நாகரீகமாக சரியான இடத்தில் இயக்குநர் கெளதம் மேனன் இன்செர்ட் செய்திருப்பார். கெளதம் ராக்ஸ்.
மௌனராகம் படத்தில் மோகன் ரேவதிக்கு ஒரு கிஃப்ட் வாங்கி அதைதிறக்கச் சொல்லுவார், "இதுல நானா ஆசைப்பட்டு வாங்கினது ஒன்னு இருக்கு, நீயா என்கிட்டே ஆசைபட்டு கேட்டது ஒன்னு இருக்கு, உனக்கு எது வேணும்னாலும் எனக்கு சம்மதம்தான் என்று அவர் சொல்ல கொலுசை ஏறெடுத்துக் கூட பார்க்கமால் விவாகரத்துப் பத்திரத்தில் ரேவதி கையெழுத்துப் போட அவர் முகத்தில் எந்த அசைவுமிருக்காது இதனுடைய follow-up காட்சி படத்தின் இறுதியில் வரும். ரேவதி மெட்ராசுக்கு செல்வதற்காக ஸ்டேஷனில் இருக்க மோகன் அங்கு வந்து இந்தா நீ என்கிட்டே ஆசைப்பட்டு கேட்ட விவாகரத்து வெச்சிக்க என்று பேப்பரை கையில் கொடுத்ததும் செய்வதறியாது திகைத்து ரேவதி கடையில் பரிதவித்து வசனம் பேசும் காட்சிகள் உருகி மருக்கக்கூடியவை..
"கண்ட நாள் முதல்" படத்தின் க்ளைமேக்ஸ்.
ஒரு சின்ன ஈகோவினால் இருவரும் அடக்கி வைத்திருந்த காதல் பிரவாகமாய் ஊற்றெடுக்கும் அழகான காட்சி. அதுவும் கடைசியில் லைலாவிடம் பிரசன்னா கன்னத்தில் வாங்கும் ப்பளார் எல்லா ஈகோயிஸ்ட்டுகளும் வாங்க வேண்டிய அரை.
ராஜபார்வை படத்தில் ஒரு பாதகமான சூழலில் கமலஹாசனை விட்டு மாதவி பிரிந்திருக்க நேரிடும். ஆற்றாமையினால் புலம்பும் கமல் தன் நண்பன் ஒய்.ஜி மகேந்திரனிடம் "டேய் எனக்கு எதுவுமே தெரியலடா எல்லாம் இருட்டா இருக்குடா" என்பார். பல ஆண்டுகளாக கண் பார்வையே இல்லாமல் வாழ்ந்துக் கொண்டிருக்கும் வயலினிஸ்ட் ரகு முதன்முறையாக தான் ஒரு குருடன் என்று உணர்கின்ற காவிய சோகமான காட்சி அது.
சினிமாவில் தன்னை நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயம், டென்ஷன், கிசுகிசு இதற்கிடையில் தன் காதலியை சுத்தமாய் மறந்தே போனவன் ஒரு படம் எடுத்து சாதித்ததும் அவள் வீட்டிற்கு ஓடிவந்து சொல்லும்போது "நீயும் என்னை அதிர்ஷ்டம் இல்லாதவனு நெனச்சிட்டல" என்று அவனை நிராகரிப்பாள். ப்ளீஸ் சௌமியா என்ன புரிஞ்சிக்கோ என்று எவ்வளவு கெஞ்சியும் கதவை சாத்திவிடுவாள். ரோட்டு வாசலுக்கு வந்தவன் அவள் வீட்டை திரும்பி பார்க்கும் போது பால்கனியில் நின்று இவனையே பார்ப்பாள். “என்ன சொல்ல போகிறாய்” என்கிற பாடல் நாதஸ்வர இசையோடு பின்னணியில் ஒலிக்க அஜீத்ஏக்கமாய் தபுவை நோக்கி பார்க்கும் காட்சியை இதற்கு மேல் எழுதில் சொல்வது என்னளவில் சிரமம்.
தன் மடியிலேயே காதலி அபிராமியின் உயிர் போனதை நம்ப முடியாமல் அவள் மூச்சு விடுகிறாளா என்று அவள் முகத்தை தன் காதோடு ஒத்தி ஒத்திப் பார்த்து பின்பு இறந்து விட்டாளென்று தெரிந்ததும் பீறிட்டு வந்த அழுகையை அடக்கிக் கொண்டு "புண்ணியம் செய்தனமே மனமே....என்று அபிராமி அந்தாதியை பாடியபடி அபிராமியை காட்டுக்குள் தூக்கி நடந்து போகும் காட்சி. இன்னும் எத்தனை பெரிய திறமைசாலிகள் வந்தாலும் இதுபோன்றொரு காதல் காட்சியை எடுக்க முடியாதென்று திடமாக நம்புகிறேன்.
லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்..
"காதலிக்கிறப்போ உன் பின்னாடி சுத்தினது காதலில்லை, இப்போ உன்ன தொலைச்சிட்டு தெரு தெருவா தேடினேனே இதான்.. ப்ளீஸ் ஷக்தி முழிச்சுக்க நீ இல்லாம என்னால வாழ முடியாது" என்று அவன் கெஞ்ச கெஞ்ச அவள் கண்ணிமைகள் மெல்ல திறக்க ஆரம்பிக்கும்.. அவனை அருகில் அழைத்து பயந்துட்டியா? என்று கேட்பாள்..”உயிரே போய்ச்சு” என்று அவளிடம் சொல்லி உடனே கேட்பான், “எனக்காக எதுவேண்ணா செய்வியா?
I Love You.
எனக்காக ட்ரைன்ல இருந்து குதிப்பியா?
I Love you.
அப்டினா என்ன mean பண்ற?
தெரியல ஆனா I Love you.
அப்படியே திரை இருள I Love you. I Love you. I Love you. என்கிற வார்த்தை மட்டும் காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கும்.
எதேதோ படத்திலிருந்து இன்னும் சொல்ல நினைக்கின்ற காட்சிகள் ஏராளமாய் இருக்கின்ற போதிலும் கடற்கரையிலிருந்து கிளம்ப மறுக்கும் குழந்தை போலவே இங்கிருந்து விடை பெறுகிறேன்.. ஆக்கம்: தமிழ்ப் பிரபா Happy valentine’s Day

Published on February 12, 2014 07:00
February 3, 2014
எழுதக் கூடாத கதை
கீழ் வயிற்றுப் பசியை தீர்த்துக் கொள்ள தேடிவரும் ஆண்களுக்கு அடைக்கலமாய் மெரினா பீச்சில் பிழைப்பு நடத்திக் கொண்டிருப்பவர்களில் சுங்குவும் ஒருத்தி -அவளின் இயற்பெயர் பாக்கியலெட்சுமி- நிராதரவாய் ஆனபிறகு வாழ வழி இல்லாமல் பிழைப்புக்காக நேரடியாக இந்த தொழிலுக்கு வந்தவளில்லை. தன் 9 வயது மகனுக்கும், கணவனுக்கும் மதியம் சாப்பாடு கூட செய்து வைக்காமல் சபலம் தலைக்கேறி எதிர் வீட்டு தன்ராஜுடன் பதினைந்து வருடங்களுக்கு முன்பு மறையனூரில் இருந்து சென்னைக்கு ஓடி வந்தவள் பின்பு ஓட்டு போடுவதற்கு என்று கூட ஒருமுறையேனும் ஊர்ப்பக்கம் எட்டிப் பார்க்கவில்லை. தன்ராஜை நம்பி வந்தவளின் வாழ்க்கையில் விதி சிக்குக் கோலம் போட்டது போல விளையாடி கடைசியில் கண்ணகி சிலையின் பின்புறம் அவளின் கைங்கரியத்தை ஆரம்பிக்க வைத்தது.
ஒருமுறை இவளுடன் சல்லாபித்துக் கொண்டிருந்த ஒருவன், என் காதலிக்கு நான் வைத்த செல்லப்பெயர் சுங்கு. உன் முகவெட்டும் அவளைப் போலத்தான் இருக்கிறது என்று சொல்லி பாக்கியலெட்சுமியின் அடித்தொண்டையை தன் முகத்தால் கன்னுக்குட்டி நீவுவது போல நீவினான். அவளுக்கும் அந்தப் பெயர் பிடித்துப் போக அன்று முதல் சுங்கு!!
சுங்குவுக்கு 47 வயது ஆகிறது. இப்போதும் அவள் யாருக்கும் சளைத்தவளில்லை என தன் சக தோழியான ரவுசம்மாவிடம் அடிக்கடி பொறமை கலந்த பாராட்டைப் பெறுவாள் - ரவுசம்மா நாயுடுப் பேட்டையிலிருந்து ப்ரொபஷ்னலாக இறக்குமதி ஆனவள்- மவுண்ட் ரோட் அண்ணா தியேட்டரில் "முத்துக்கு முத்தாக" படத்தை எச்சக்குடி பெஞ்சமினுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போதுதான் முதன்முதலில் சுங்குவுக்கு அறிமுகமானாள். அன்று முதல் சேர்ந்து தொழில் செய்ய ஆரம்பித்தார்கள். வயது அதிகமாகி விட்டது என்று தன்னிலை உணர்ந்த இருவரும் கையில் குடையை வைத்துக் கொண்டு மெரினா பீச்சில் ஆளுக்கொரு பக்கம் சென்று உரும வெயிலிலும் பின்மாலைப் பொழுதிலும் தேடி வரும் இளைஞர்களுக்கும் காது முடி நரைத்துப் போன கிழடுகளுக்கும் பெய்ட் சர்வீஸ் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்கள்..
இன்று…..மதியம் 1 மணி இருக்கும். வெயில் மனிதர்களின் முதுகிலேறி தன் உக்கிரத்தை காட்டிக் கொண்டிருந்தது. தீவுத்திடல் மைதானத்தின் இடப்பக்கமுள்ள குடிசைப் பகுதியில் வசித்துக் கொண்டிருக்கும் ரவுசம்மாவின் வீட்டிற்க்கு போலிஸும், ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலிஸ் உலகாவும் ஆட்டோவில் சென்று அவளை அவசரமாக ஜி.எச்'க்கு அதே ஆட்டோவில் அழைத்துச் சென்றார்கள். மூவரும் போகிற வழியில் போலீஸ்கார் தன் பெண்ணின் திருமண முகூர்த்த நாளைக் குறித்து அய்யரிடம் போனில் பேசிக் கொண்டே வந்ததால் எதற்கு அழைத்துச் செல்கிறீர்கள் என்று இவளால் கேட்க முடியவில்லை உடன்வந்த உலகாவை கேட்டாலும் சார் சொல்லுவார் கம்முனு வா என்றான். ஐந்து நிமிடத்தில் ஜி.எச் வந்தடைந்தார்கள்.
உள்ளே நுழைந்ததும் அங்கு பிணவறையின் வாசலுக்கு ஓரமாய் ஸ்ட்ரக்ச்சரில் கரை படிந்த வெள்ளைத் துணியால் மூடி வைக்கப்பட்டிருந்த உடலை காண்பித்து "இது உன் கூட இருக்குமே அந்த பொம்பள தானே பாரு” என்று உலகா கேட்டதும் ரவுசம்மா தாமதிக்காது அழ ஆரம்பித்தாள். தண்ணீரில் மூழ்கி உப்பலாகி இறந்துப் போன மோட்டெலியை காகம் தன் இஸ்டத்திற்கு கொத்தி விட்டுச் சென்றது போல இருந்தது சுங்குவின் முகம். சடலம் உடனடியாக போஸ்ட்மார்ட்டத்துக்காக உள்ளே எடுத்துச் செல்லப்பட்டது.
"மவ்ட்ரு மாரி தெர்ல சூசைட் தான் போலக்து, கூவாத்துல உயிந்து சாவுற அளவுக்கு இதுக்கு இன்னா கேடு, எங்க உயிந்துதோ தெர்ல, ஸ்கை வாக் பக்கத்துலகிற கூவாத்துல மெதந்துனு இந்திது. ஒன்னா தானே தொய்லுக்கு போவீங் இன்னா மேட்டருனு சுகுரா சொல்ட்ட்டு, காயில்லயெ போன் அச்சி அனுப்பி உட்டானுங்கனு அவ்ரு வேற செம்ம காண்டுலக்றாரு" என கொஞ்சம் தள்ளி நின்றபடி வார்ட் பாய் ஒருவருடன் சிரித்து சிரித்து குசலம் விசாரித்துக் கொண்டிருக்கும் போலீஸை காட்டி ரவுசம்மாவிடம் விசாரணை செய்து கொண்டிருந்தான் உலகா என்கிற உலகநாதன்.
(உலகாவைப் பற்றி சின்ன பிளாஷ்பேக்...
அமைந்தகரை போலிஸ் ஸ்டேசனுக்கு காலையில் அடையாளம் காண்பிப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்ட சுங்குவின் புகைப்படம் அங்கிருந்த எஸ்.ஐயின் மேசை மீது இருந்தது. பொட்லம் கேஸில் கைதாகி ரிலீஸ் ஆவதற்காக கையெழுத்து போட அவருக்கு முன்பு நின்று கொண்டிருந்த உலகா, சுங்குவின் புகைப்படத்தைப் பார்த்து " சார் இது எனுக்கு தெரியும் சார், பீச் கிராக்கி இது தோஸ்த் ரவுசும் தெரியும் என்று ரிலீஸ் ஆகப்போகிற ஜாலியில் தெரியாத்தனமாக வாயைக் குடுத்து டெம்ப்ரவரி ப்ரெண்ட்ஸ் ஆஃப் போலிஸாக தன்னை உட்படுத்திக் கொண்டவன்.)
ரவுசம்மாவின் அழுகை இப்போது விசும்பலாக மாறி இருந்தது. போலிஸ் வந்து தனது கட்டையான குரலில் ரவுசை அதட்ட ஆரம்பித்தார். "பாபு நாக்கு ஏமி தெளிது அதி ரெண்ட் நாளைக்கு முந்திப் பாத்துது" என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே சூசைட் தான் என்கிற போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட், தனக்குத் தெரிந்த வார்ட் பாய் மூலம் துரிதமாய் இரண்டு மணி நேரத்தில் கையில் கிடைக்க, உன் போன் நம்பரை ஒரு துண்டு பேப்பர்ல எழுதி குடுத்துட்டு இப்போதைக்கு போ என்றார் போலீஸ்காரர்.
ரவுசம்மா ஏற்கனவே எச்சக்குடி பெஞ்சமினுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லியிருந்ததால் அவனும் சரியாய் அங்கு வந்தான், இருவரும் மருத்துவமனை வளாகத்திலிருந்து வெளியே வந்து எதுக்கு சுங்கு இப்படி பண்ணிச்சு என்று பேசிக்கொண்டே சாலையை கடந்து எதிரிலிருக்கும் டீ கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருக்கும் போது " பெற்ற தாயிடமே விலை பேச நேர்ந்த அவமானத்தால் உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை" என்கிற தினத்தந்தி பெட்டிச் செய்தியை அவர்களுக்கு அருகில் அமர்ந்து வெங்காய போண்டாவை தின்றபடியே ஒரு பெரியவர் எழுத்துக் கூட்டி படித்துக் கொண்டிருந்தார்

Published on February 03, 2014 19:07
தமிழ்ப்பிரபா's Blog
- தமிழ்ப்பிரபா's profile
- 46 followers
தமிழ்ப்பிரபா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.