தொல். திருமாவளவன்
Born
in Anganur, Tamil Nadu, India
August 17, 1962
Twitter
Genre
Influences
“1926, 1927, 1928ஆம் ஆண்டுகளிலே ஒரு ஜாதிக்காரன் இன்னொரு ஜாதிக்காரரோடு உட்காரக் கூடாது என்று இருந்த நேரத்திலேயே, தந்தை பெரியார் அவர்கள் நோட்டீஸ் போட்டு, சமபந்தி போஜனம் இருந்தாக வேண்டும் என்ற முறையை உருவாக்கினார்கள்.”
― மதமும் மதமாற்றமும்
― மதமும் மதமாற்றமும்
“திருநெல்வேலி மாவட்டம், தென்காசி வட்டம், மீனாட்சிபுரம் என்கிற கிராமத்தில் 1981ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 19-ஆம் நாள், ஒரே நாளில் 180 குடும்பத்தினர் இசுலாம் மதத்தைத் தழுவினார்கள். இந்நிகழ்வு இந்திய அளவில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போதைய அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், மதங்கள், மடங்கள் போன்ற நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் எனப் பலரும் அந்தக் கிராமத்தை நோக்கிப் படையெடுத்தார்கள்.
அகில இந்திய அளவில் மீனாட்சிபுரம் மதமாற்றம் நிகழ்வு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக, அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், அன்றைக்கு காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்த யோகேந்திர மக்வானா, தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் தலைவராக இருந்த எல். இளையபெருமாள் ஆகியோரும் அந்தக் கிராமத்திற்கு ஓடோடி வந்தனர். அத்தருணத்தில் தமிழகத்தின் முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தார்.
1956 அக்டோபர் 14-இல் நாக்பூரில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற பெருந்திரள் மதமாற்றம் இந்தியச் சமூகத்தையே உலுக்கியது. அதன்பின்னர், அம்பேத்கர் வழியில் சிறிதும் பெரிதுமான மதமாறங்கள் நிகழ்ந்தபோதும் இஸ்லாமிய மதமாற்றம் என்பது தமிழகத்தில் பெரும்பாலும் நடைபெறவில்லை. 1980-களுக்குப் பின்னர் இவற்றில் சிறிது மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கூரையூர் எனும் கிராமத்தில் 200 தலித்துகள் 1980இல் இஸ்லாத்திற்கு மாறினர். அதன்பின்னர் தென்காசி வட்டாரத்தைச் சுற்றி பரவலாக மதமாற்றம் நிகழ்ந்தபோதும் சாதிப் பிரச்சினைகள் மற்றும் அரச நெருக்கடிகளின் வாயிலாக ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒட்டுமொத்த தலித் மக்கள் தங்களுக்குள் விவாதித்து அவற்றில் 180 குடும்பங்கள் ஒரு குறிப்பிட்ட மதத்திலிருந்து இஸ்லாம் மதத்திற்கு மாறிய நிகழ்வு வரலாற்று அடிப்படையில் முக்கியத்துவம் கொண்டது.
மதமாற்றம் என்பது அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்ற ஒன்றேயாகும். இந்தியாவில் மட்டுமல்ல, அனைத்து நாடுகளிலும் நிகழ்கின்ற ஒன்றுதான். ஆனால், ஒரே நேரத்தில் கணிசமான எண்ணிக்கையுள்ள மக்கள், ஒரு கலாச்சார வாழ்க்கை முறையிலிருந்து திடீரென இன்னொரு வாழ்க்கை முறைக்கு, கலாச்சார முறைக்கு மாறுவது என்பது சாதாரணமான ஒன்றல்ல. அதன்படி சமூகத்தளத்தில், பண்பாட்டுத் தளத்தில், அரசியல் தளத்தில் என அனைத்துத் தளங்களிலும் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ஒன்றுதான் மீனாட்சிபுரத்தில் நிகழ்ந்த மதமாற்றம்.”

“உங்களுக்குப் பல சலுகைகள் செய்து தருகிறோம். இந்து மதத்திற்குத் திரும்பிவிடுங்கள்’ என்றார் வாஜ்பாய். ‘நீங்கள் பெரிய மனிதர். நீங்கள் இப்படியெல்லாம் எங்களுக்கு ஆலோசனைகூறத் தேவையில்லை. நீங்கள்தான் சொல்லுகிறீர்கள் நாங்கள் பணம் வாங்கிக் கொண்டு மதம் மாறிவிட்டோம் என்று. இப்பொழுது நீங்களே ஆசை வார்த்தைகள் கூறுகிறீர்களே? இதுவரை இஸ்லாம் கூட்டம் ஒருபோதும் எங்களிடம் அப்படிப் பேசியதில்லை’ என்று நான் அவரிடம் சொன்னேன்.”
― மதமும் மதமாற்றமும்
― மதமும் மதமாற்றமும்
Is this you? Let us know. If not, help out and invite தொல். to Goodreads.