மலர்வதி (பிறப்பு: 1979) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிவரும் எழுத்தாளர். அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதுபவர். இளம் எழுத்தாளர்களுக்கான யுவபுரஸ்கார் சாகித்ய அக்காதமி விருது பெற்றவர்.
மலர்வதியின் இயற்பெயர் மேரி ஃப்ளோரா. 1979 ல் கன்யாகுமரி மாவட்டம் வெள்ளிகோடு என்னும் ஊரில் ஜி. எலியாஸ்- ரோணிக்கம் இணையருக்கு பிறந்தார். வெள்ளிகோடு ஆர்.சி. நடுநிலை பள்ளியில் எட்டாம் வகுப்புவரை படித்தார். முளகுமூடு குழந்தை இயேசு உயர் நிலையில் பள்ளிநிறைவை முடித்து தமிழ் நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டப்படிப்பு முடித்தார்.
மலர்வதி கிறிஸ்தவ பக்திநூல்களையே முதலில் எழுதத்தொடங்கினார். முதல் இலக்கியப் படைப்பு 2008 ஆம் ஆண்டு வெளியான காத்திருந்த கருப்பாயி என்னும் நாவல். தூப்புகாரி என்னும் நாவலுக்கு 2012 கேந்த்ரிய சாகித்ய அக்காதமியின் இளம்படைப்பாளிகளுக்கான யுமலர்வதி (பிறப்பு: 1979) தமிழில் கதைகளும் நாவல்களும் எழுதிவரும் எழுத்தாளர். அடித்தள மக்களின் வாழ்க்கையை எழுதுபவர். இளம் எழுத்தாளர்களுக்கான யுவபுரஸ்கார் சாகித்ய அக்காதமி விருது பெற்றவர்.
மலர்வதியின் இயற்பெயர் மேரி ஃப்ளோரா. 1979 ல் கன்யாகுமரி மாவட்டம் வெள்ளிகோடு என்னும் ஊரில் ஜி. எலியாஸ்- ரோணிக்கம் இணையருக்கு பிறந்தார். வெள்ளிகோடு ஆர்.சி. நடுநிலை பள்ளியில் எட்டாம் வகுப்புவரை படித்தார். முளகுமூடு குழந்தை இயேசு உயர் நிலையில் பள்ளிநிறைவை முடித்து தமிழ் நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் பி.லிட் பட்டப்படிப்பு முடித்தார்.
மலர்வதி கிறிஸ்தவ பக்திநூல்களையே முதலில் எழுதத்தொடங்கினார். முதல் இலக்கியப் படைப்பு 2008 ஆம் ஆண்டு வெளியான காத்திருந்த கருப்பாயி என்னும் நாவல். தூப்புகாரி என்னும் நாவலுக்கு 2012 கேந்த்ரிய சாகித்ய அக்காதமியின் இளம்படைப்பாளிகளுக்கான யுவபுரஸ்கார் விருது கிடைத்தது....more