என் சகோதரியை நான் மெச்சுகிறேன்... -பரீட்சார்த்தப் பதிவு


 என் சகோதரி கவிதைகள் எழுதுவதில்லைஅவள் திடீரென்று கவிதைகள் எழுதத் தொடங்குவாள் என்றும்நான் நினைக்கவில்லைஅவள் கவிதைகள் எழுதாததென்பது அம்மா போலத்தான்அப்பாவையும் போலத்தான்அவரும் கவிதைகள் ஏதும் எழுதவதில்லைஎன் சகோதரியின் வீட்டுக் கூரையின் கீழ் நான்மிகப் பாதுகாப்பாக உணர்கிறேன்எனது சகோதரியின் கணவரும் கவிதை எழுதுவதை விடசெத்துப் போவதையே விரும்புவார்இது - ஏற்கெனவே நிலவும் ஒரு கவிதையைப் போலஎனக்குத் தோன்றுகிறது - எனது சொந்தக்காரர்கள்எவரும் கவிதை எழுதுவது இல்லை என்பது..
எனது சகோதரியின் காகிதக் கட்டுக்களினிடையில்ஏதும் பழைய கவிதைகள் காணப்படவில்லைஅவளது கைப்பையிலும் கூடபுதிதாக எழுதப்பட்ட கவிதைகள் ஏதும் இல்லைஎனது சகோதரி என்னை மதிய உணவுக்குக் கூப்பிட்டபோதுஅவள் கவிதைகளை எனக்கு வாசித்துக் காண்பிக்கிறதிட்டமேதுமில்லை என்பதையும் நான் அறிவேன்அவளது சு+ப்புகளில் அற்புதமாக ருசி கூடியிருக்கிறதுஅவளது கையெழுத்துப் பிரதிகளில்காபியின் சிதறின சொட்டுகள் ஏதுமில்லை
நிறைய குடும்பங்கள் இருக்கின்றன எவருமே கவிதைகள் எழுதாமல்அப்படியே எங்கேயேனும் எழுதுபவரிருப்பாரானால்அநேகமாக ஒரே ஒருவராகத்தான் இருப்பார்சிலவேளை கவிதை தலைமுறைகளினிடையே அருவியாகத் தெளித்துக் கொண்டிருக்கும்பரஸ்பர அனுபவத்தில் பெருநீர்ச்சுழிப்பாய்த் தங்கியிருக்கும்
எனது சகோதரி அற்புதமான பேச்சுநடை கொண்டவள்அவளது கருத்துகள் விடுமுறை காலத் தபால் கார்டுஎழுதுவதற்கு அப்பால் போனதில்லைஒவ்வொரு வருடமும் மாறாமல் அதே வாசகங்கள்தான்இருக்கும்ஆனால், அவள் திரும்பவும் என்னிடம் வரும்போதுஅவள் சொல்வாள்அனைத்தும் பற்றிஅனைத்தும் பற்றிஅந்த எழுத்துக்களிலிருக்கும் அனைத்தும் பற்றி.
-விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா
'ஹிட்லரின் முதல் புகைப்படம்' தொகுப்பிலிருந்து....தமிழில்: ஆர்.பாலகிருஷ்ணன், யமுனா ராஜேந்திரன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 11, 2012 20:03
No comments have been added yet.


தமிழ்நதி's Blog

தமிழ்நதி
தமிழ்நதி isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow தமிழ்நதி's blog with rss.