சிறுமை கண்டு பொங்குவாய்
சிறுமை கண்டு பொங்குவாய்
வாடிய முகமும், தோல் மட்டும் போர்த்திய உடலும்.
பசியில் பிள்ளையும், பிணியில் கிழத்தியும்- அங்கு.
ஒப்பனை முகமும், காட்சியணி உடலும்,
செல்லப்பிள்ளையும், அமைதியில்லா செருக்கும்- இங்கு.
பசிக்கு உணவு - வறுமையின் தேடல்.
ருசிக்கு, பெருமைக்கு உணவு - வசதியின் வழிமுறை.
அரசு அளித்த பொத்தல் சீருடையும், மதிய உணவும் அங்கு.
அத்துணை வசதியும், அத்துணை வாய்ப்பும் இங்கு
சிறுமை கண்டு பொங்குவாய் –
ஏற்றத்தாழ்வு எனும் சிறுமை கண்டு பொங்குவாய்.
'நேர்மையை விற்கும் வறுமை!
வறுமைக்கு விலை பேசும் அதிகாரம்!'
'உடுத்த ஆடையில்லா பிள்ளை,
உடுத்திய ஆடை உடம்பில் நிற்காத குடிபோதை தந்தை!'
சிறுமை கண்டு பொங்குவாய்- இச்சிறுமை கண்டு பொங்குவாய்!
'தன்னலம் கொண்ட மனம்,பொய்மை நிறைந்த எண்ணம்,'
'வலிமையில்லா உள்ளம், நேர்மை தவறிய வழி',
கடுமொழி பேசும் உதடு, கடும்பார்வை கொண்ட விழிகள்,
அன்பு கொள்ளாத உறவு, காதல் இல்லாத உளவு',
எனும் சிறுமை கண்டு பொங்குவாய்
எத்தனை எத்தனை மாற்றங்கள் - நூறு வருட அறிவியல் வளர்ச்சியில்!
ஆயிரம் விசயம் மாறியும் - ஊரும், சேரியும் மாறியதுண்டோ?
பிறக்கையில் குழந்தை ஆண், பெண் பாகுபாடு மட்டும் கொள்கிறது.
பின் வளர்கையில் எத்தனை பாகுபாடு, அட இத்தனையும் தேவைதானோ?
ஆணும், பெண்ணும் , ஆணாகவும், பெண்ணாகவும் மட்டுமே இருக்கட்டுமே –
இருந்து காதல் செய்யட்டுமே!
ஐம்பது வருடமாய் தமிழன் அடக்கிய சாதியம் -
இன்று மீண்டும் சற்றே மீண்டு வருகிறதோ?
மனிதனை பிரித்தறியும் சாதி, மதம், கலாச்சாரம் எனும் போர்வை போத்திய 'சிறுமை' கண்டு பொங்குவாய்!
பெண்ணியம் பேசும் சமூகம் இது! ஆனால்
ஆணும் பெண்ணும் சமநிலை அடைவது எப்போது?
உடையில் விதி, வீதியில் விதி, பணியில் விதி, வீட்டிலும் விதி,
கற்பு, மானம், வெட்கம் - இவை பெண் மட்டுமே சுமக்க வேண்டுமா ?
எங்கும் தொடரும் அந்த ஆந்தை விழிகள்!
எங்கும் சூழும் அந்த தொட்டுப்பார்க்கும் கைகள்!
மாற்ற வேண்டியது, அடக்கவேண்டியது உண்மையில் பெண்ணியத்தையா?
மாற்ற வேண்டியது அந்த ஆந்தை கண்களையும், மீறும் கைகளையும் இல்லையோ?
சிறுமை கண்டு பொங்குவாய் - பெண்ணை பொருளாய், அரும்பொருளாய் கொண்டு
அடிமைப்படுத்தும் சிறுமை கண்டு பொங்குவாய்.
தன்னிலை மறந்து, இயற்கையை துறந்து,
ஆணவ செருக்கோடு ஆடி திரிகிறான் மனிதன்.
மண் புழுவிற்கும் வேலை உண்டு இவ்வுலகில்!
மனிதர்கள், நம்மின் வேலை என்னவோ?
அனைத்தயையும் அழித்து, வளர்ச்சி என்று பொய்த்து -
பிற உயிரினம் மாய்த்து, தனித்தே உலகை ஆள்வதோ?
மரமின்றி, ஊர்குருவியும், காக்கையுமின்றி,
காடின்றி, காட்டு விலங்கின்றி,
நீரின்றி, நீர்நிலையும் இன்றி - தனித்து வாழநினைக்கும்
மனித எண்ண சிறுமை கண்டு பொங்குவாய்.
ஏற்றமும், தாழ்வும் மறைந்து போகட்டும்
ஊரும், சேரியும் ஒன்றாய் சேரட்டும்,
சாதியம், மதமும் மறைந்து போகட்டும்,
வேற்றுமை என்பது அழிந்து போகட்டும்,
ஆணும் பெண்ணும் சமநிலை அடையட்டும்,
ஆறும், ஓடையும் நிரம்பி ஓடட்டும்,
காடுகள் எல்லாம் செழித்து பெருகட்டும்
காக்கையும், குருவியும் மீண்டும் நம்முடன் வாழட்டும்.
சமநிலை சமூகம், சமத்துவ சமூகம்
புதிதாய் தோன்றட்டும்.
- TheCritics.

Published on August 27, 2017 10:51
No comments have been added yet.