திராட்க்ஷை ஜாரில் 243-ஆம்பக்கத்தில் தோன்றும் கிழவன்தான் இந்த அஷேரா நாவலின் தீர்க்கதரிசியாக வந்து மறைகிறான். இந்த ஈழ மண்ணின் குருதியுடன் பிசைந்து வடித்த இந்த பழஞ்ஜாடிக்குள் அஷேராவின் கதா உருக்களெல்லாம் ஜாடியின் சுவர் வழியே கசிந்து வந்து திரும்பவும் உள்ளே மறைந்து விடுகிறார்கள். எல்லாக் கொடுமைகளையும் தாங்கி உடைபடாத ஈழ ஜாடியை அருள்குமரன் நீல நிறக் குறிப்புகளால் இருட்டிலும் பின்னிரவுகளிலும் தாள்களில் யாருக்கும்தெரியாமல் எழுதியெழுதிப் பலியான ஈழ விக்ரகங்களுடன் மறைத்துவைத்திருக்கிறான். தேனில் ஊறிய பூச்சிகளின் தித்திக்காத மரணம் […]
Published on May 13, 2021 11:36