காதல் கதைகள் பெரும்பாலும் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. காதலர்கள் மாறலாமே தவிர, காதல் என்றுமே அப்படியேதான் இருக்கிறது. முதல் பார்வை, உரையாடல்கள், பரிமாற்றம், கருத்து வேறுபாடுகள், சிறு சண்டைகள், முதல் முத்தம், காமம், குடும்ப வாழ்வு, குழந்தைகள் என அதன் சாராம்சம் ஒன்றுதான். மனிதர்களும், சூழல்களுமே கதைகளை வித்யாசப்படுத்துகின்றன. சினிமாவில் நாம் பார்த்து வளர்ந்த காதல் கதைகள் வித்தியாசமாக எதையுமே சொல்லிவிடவில்லை. ’ஒருவனுக்கு ஒருத்தி’ போன்ற மனரீதியான ஒடுக்குமுறைகளை தாண்டி புதிதாக எதையும் காட்...
Published on October 09, 2021 05:10