வாழ்க்கை முழுவதும் நாடோடிகளாக வாழ நிர்பந்தப்படுத்தப்பட்டவர்கள் சபிக்கப்பட்டவர்களே!… பயணங்கள் மனிதர்களை பக்குவப்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால், பயணப்பட நினைக்கும் மனங்கள் திரும்பி வந்துசேர ஒரு வீடோ நிலமோ நிச்சயம் இருக்கும் எனும் நம்பிக்கை தான் மகிழ்ச்சியை தருமே தவிர, நிராதரவை விடப்பட்ட மனங்கள் என்றும் நாடோடி தன்மையை விரும்புவதே இல்லை. நாடோடிகளாய் மாறிவிட நினைக்கும் மனிதர்களுக்கு தெரியும், அந்த வாழ்க்கை சிரமமென்றால், திரும்பவும் இயல்பு வாழ்க்கைக்கே வந்துவிடலாம் என்பது. ஆனால், நாடோடி குடும்பத்தி...
Published on September 30, 2021 02:31