இயக்குனர் மிஷ்கினின் நேர்காணல்கள் பலவற்றில், எனக்கு அறிமுகமான ஒரு பெயர் ’பியோதர் தஸ்தயெவ்ஸ்கி’. அவரின் படைப்புகளை படிக்க வேண்டுமென்ற பேரார்வம் நீண்ட நாட்களாக இருந்த போதும், படிக்காமல் காலம் தாழ்த்த ஒரே காரணம், பக்கங்களின் எண்ணிக்கை. ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்டு ஒரு நாவலை படிப்பதற்கு, நான்கைந்து வேறு புத்தகங்களை படித்து விடலாமென்ற ஒரு சோம்பேறித்தனம். ஆனால், குற்றமும் தண்டனையும் நாவலின் நூறு பக்கங்களை தாண்டும் பொழுதே தோன்றிய எண்ணம், “நாம் முதலில் படித்திருக்க வேண்டியது இவர்களை தான்”. ஒரு புத்தகத...
Published on September 23, 2021 05:18