அநிருத் கனிசெட்டி என்னும் இளைஞர், ஓரிரு ஆண்டுகளுக்குமுன் உருவாக்கிய
Echos of India என்னும் ஒலிப்பதிவுகளை முழுமையாகக் கேட்டேன். நன்றாகச் செய்திருக்கிறார். இந்தோ-கிரேக்கர்கள் தொடங்கி, இந்தோ-ஸ்கைத்தியர்கள் (சகர்கள்), மௌரியர்கள், குஷானர்கள், சாதவாகனர்கள் என்று சிறுசிறு துண்டுகளாக வரலாற்றைச் சுவைபடக் கொண்டுவந்திருக்கிறார். ஏனோ அடுத்தடுத்த சீசன்களுக்குச் செல்லாமல், இரண்டு சீசன்களோடு நிற்கிறது இந்த ஒலிப்பதிவு. நீங்களும் கேட்கலாம். உங்கள் குழந்தைகளையும் கேட்கச் சொல்லலாம். உங்கள் குழந்தைகள் இந்திய வரலாற்றின்மீது காதல்கொள்ள இந்த ஒலிப்பதிவுகள் உதவும்.
Published on May 24, 2020 06:19