பாலஸ்தீனக்குழந்தைக்கு ஒரு தாலாட்டு@ஃபெய்ஸ் அஹம்மத்ஃபெய்ஸ...

 




பாலஸ்தீனக்குழந்தைக்கு ஒரு தாலாட்டு

@

ஃபெய்ஸ் அஹம்மத்ஃபெய்ஸ்

@

 

அழாதே, என்குழந்தையே,

உன் அம்மா இப்போதுதான்இமை மூடினாள்

அவள் உயிர்அலறி வெளியேறியது.

 

அழாதே, என்குழந்தையே,

உன் அப்பா

கொஞ்சம் முன்புதான்

அவரது துயரங்களைக்களைந்தார்.

 

அழாதே, என்குழந்தையே,

உன் சகோதரன்

எங்கோ தொலைவில்

அவனுடைய கனவுகளில்

வண்ணத்துப்பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தான்.

 

அழாதே, என்குழந்தையே,

உன் சகோதரியின்பல்லக்கு

அந்நிய நிலத்துக்குப்புறப்பட்டாயிற்று.

 

அழாதே, என்குழந்தையே,

அவர்கள் இறந்தசூரியனை நீராட்டினார்கள்

ஒரு வினாடிமுன்புதான்

உன் முற்றத்தில்

நிலவைப் புதைத்தார்கள்.

அழாதே, என்குழந்தையே,

நீ அழுதால்

உன் அப்பாவும்அம்மாவும் சகோதரியும் சகோதரனும்

நிலவும் நட்சத்திரங்களும்

உன்னை இன்னும்அழவைப்பார்கள்.

 

நீ சிரித்தால்

ஒரு நாள் மாறுவேடத்தில்வருவார்கள்

வந்து உன்னுடன்விளையாடுவார்கள்.

@

 

பெய்ஸ்அஹமத் ஃபெய்ஸ்  ( 1911 – 1984 )

உர்துக் கவிதையில்கற்பனைவாத மிகைகளை மாற்றி எதார்த்தவாத நோக்குக்கும் அரசியல் சார்புக்கும் வழியமைத்தமுன்னோடி. பிரிட்டிஷ் இந்தியாவைச் சேர்ந்த பஞ்சாபில் பிறந்தார். தேசப் பிரிவினைக்குப்பின்னர் பாகிஸ்தானில் குடியேறினார். பாகிஸ்தான் டைம்ஸ் இதழின் ஆகிரியராகப் பணியாற்றினார்.அரசுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றஞ் சாட்டப் பட்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.விடுதலை பெற்றும் லெபனானில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். பாகிஸ்தானில் தொழிலாளர்இயக்கத்தை உருவாக்கினார்.

ஃபெய்ஸின் இந்தக்கவிதை அனிசூர் ரஹ்மான் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து தொகுத்த ‘ஹஸார் ரங்க் ஷாயிரி’( ஆயிரம் நிறங்களுள்ள கவிதை – 2022 ) நூலில் இடம்பெற்றுள்ளது.

                                                              @@@@@@



ஒரு குழந்தையைஇரண்டு முறை கொல்ல முடியாது.

@

டாலியா ரவிகோவிட்ச்

 

@

 

ஸாப்ரா, ஷாட்டிலாகழிவு நீர்க் குட்டைகளுக்கு அருகில்

எண்ணிலடங்காமனிதர்களை

உயிர்ப்புள்ளஉலகிலிருந்து   ஒளிப்பிழம்புக்கு

எடுத்து வந்துபோட்டீர்கள்.

இரவோடு இரவாக.

 

முதலில் அவர்களைச்சுட்டீர்கள்

அவர்களைத் தூக்கிலிட்டீர்கள்

பின்னர்

வாள்களால் வெட்டினீர்கள்

 

வெருண்டுபோனபெண்கள்

மண்சாரத்தின்மீது ஏறினார்கள்

பேரச்சத்துடன்ஓலமிட்டார்கள்

‘ஷாட்டிலாவில்எங்களை வெட்டிக் கொல்கிறார்கள்’

 

முகாம்களின்மீது நிலவின் மென் பிறை

அந்த இடமே

பகல்போல ஒளிரும்வரை

தேடுவிளக்குகளைப்பாய்ச்சுகிறார்கள்

எங்கள் படைஞர்கள்.

 

புலம்பிக் கொண்டிருக்கும் 

ஸாப்ரா, ஷாட்டிலாப்பெண்களிடம்

கட்டளையிடுகிறான்ஒரு படைஞன்.

‘முகாமுக்குத்திரும்புங்கள்’.

 

ஆணைக்குப் பணிந்துகொண்டிருந்தான் அவன்.

 

ஏற்கெனவே

சகதிக் குட்டைகளில்கிடைக்கும் குழந்தைகள்

அமைதியாக

வாயால் மூச்சுவிட்டுத்திணறுகிறார்கள்

அவர்களை இனியாரும்

துன்புறுத்தமுடியாது

ஒரு குழந்தையைநீங்கள்

இரண்டுமுறைகொல்ல முடியாது

 

பொன் வட்ட ரொட்டியாகமாறுவரை

நிலவு முழுதாகிறது.முழுதாகிறது.

 

எங்கள் இனியபடைவீரர்கள்

தங்களுக்கென்றுஎதையும் விரும்பவில்லை

எப்போதும் அவர்கள்கேட்பது

பாதுகாப்பாகவீடு திரும்புவோமா?

@


டாலியா ரவிகோவிட்ச்  (1936 – 2005 )

ஹீப்ரு மொழியில்எழுதியவர். யூதர். எனினும் பாலஸ்தீன மக்களின் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் இடைவிடாதுகுரல் கொடுத்தவர். ஸாப்ரா, ஷாட்டிலா முகாம்கள் மீது 1982 ஆம் ஆண்டு இஸ்ரேலியத் துணைப்படையினர்நடத்திய கூட்டக் கொலையில் பெண்களும் சிறார்களும் இறந்தனர். அந்தச் சம்பவத்தின் எதிர்வினையேடாலியாவின் கவிதை. போஓர் எதிர்ப்புக் கவிதைகளில் குறிப்பிடத்தக்கதாகச் சொல்லப்படுகிறது.

  ஜே டி மக் க்ளாட்சி தொகுத்த THE VINTAGE BOOKOF CONTEMPORARY WORLD POETRY  ( 1996 ) நூலிலிருந்துஎடுக்கப்பட்ட கவிதை இது. ஆங்கிலத்தில்: சானா பிளாச், ஏரியல் பிளாச்.

 

 


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2024 08:44
No comments have been added yet.


Sukumaran's Blog

Sukumaran
Sukumaran isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Sukumaran's blog with rss.