போர் முடிந்து…
@
சச்சிதானந்தன்( மலையாளம் )
@
தமிழில்: சுகுமாரன்
@
போர் முடிந்து
பிணங்களின்கணக்கெடுப்புத்
தொடங்கியபோது
கௌரவரும் பாண்டவரும்
ஒருமித்துத் தலையில் கைவைத்தனர்
எதற்காகப் போர்?
பாண்டவர் கேட்டனர்
எப்படியிருந்ததுமரணம்
கௌரவர் கேட்டனர்
யாரிந்தக் கொடுமையைச்செய்தது
பாண்டவர் விசாரித்தனர்
யாரிந்தக் கொடுமையைச்செய்வித்தது
கௌரவர் விசாரித்தனர்
நான் ஒரே குடும்பத்தினரல்லவா
பாண்டவர் வியந்தனர்
நாம் நல்ல அயலாரல்லவா
கௌரவர் வியந்தனர்
நம் ஆறுகள்ஒன்றே
பாண்டவர் சொல்லினர்
நமது மொழி ஒன்றே
கௌரவர் சொல்லினர்
எங்கள் வீடுஅக்கரையிலிருந்தது
பாண்டவர் நினைவுகூர்ந்தனர்
எங்கள் வீடும்அக்கரையிலிருந்தது
கௌரவர் நினைவுகூர்ந்தனர்
ஒரே ஆகாயம்ஒரே தண்ணீர் ஒரே உணவு
பாண்டவர் பாடினர்
ஒரே விருட்சம்ஒரே ரத்தம் ஒரே துக்கம்
கௌரவர் உடன்பாடினர்
பிறகு
துப்பாக்கிளைத்துடைத்துத் துப்புரவாக்கினர்
மீண்டும்
ஒருவரை ஒருவர்சுட்டுக்கொள்ளத் தொடங்கினர்.
Published on May 15, 2025 22:28