எவனடா எங்களின் முகவரி கேட்டவன்

 



இருவரின் நேற்றைய (09.07.2025) செயல்கள் என்னைக் கட்டிப்போட்டிருக்கின்றனகோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றுதானே முன்னோர்கள் சொன்னார்கள். பள்ளி இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றா சொன்னார்கள்கோவில கட்டுங்கப்பான்னா கோவில் வருமானதில் ஸ்டாலின் கல்லூரிகளைக் கட்டுவது நியாயமா என்று முன்னாள் முதல்வர் மாண்பமை எடப்பாடி உளறஅறநிலையத்துறை விதிகளில் அதற்கு இடமிருக்கிறதுஅப்படித்தான்கல்லூரிகளாகத்தான் கட்டுவோம் என்று நிமிர்ந்து சொன்ன ஸ்டாலின் சாரின் செயல் ஒன்றுஇன்னொன்று நெசத்துக்குமே ரயிலை மறித்து நெருங்க நெருங்க ரயில் ஓட்டுநருக்கு மரண பயத்தைக் கொடுத்த குழந்தை அகல்யாவின் செயல்இவளது செயலை SFI அமைப்பின் முன்னாள் உறுப்பினன்CPM கட்சியின் ஒரு மாவட்டக்குழு உறுப்பினன் என்ற வகையிலும்அந்தக் குழந்தையின் தகப்பன் என்ற இடத்தில் இருந்தும் கொஞ்சம் அசைபோடுகிறேன்எப்படிப் பார்த்தாலும்சிலிர்க்கிறதுஇரண்டு நாட்களுக்கு முன்புதான் எடப்பாடி அவர்கள் “கம்யூனிஸ்டுகள் முகவரி இல்லாமல் நிற்கிறார்கள்” என்று கூறினார்
இந்த மறியல் போரின் வெற்றி தந்த திமிரால் நெஞ்சுப் புடைக்கிறது”எவனடா எவனடாஎவனடா எங்களின் முகவரி கேட்டவன்இவளடா இவளடாஇவளடாஎங்கள் உயிர்ப்பின்முகவரி”என்று கர்வத்தால் கண்கள் சிவந்து கொதிநிலை கொள்கின்றனவேறொன்றுமில்லைஅடையாளமாக இல்லாமல் ரயில் மறியலுக்கு உயிரை ஊட்டியிருக்கிறாள் பிள்ளை பார்க்கிறேன்உற்றுப் பார்க்கிறேன்பெத்தவன்ஈரக்குலை நடுங்குகிறதுவிபரீதம் நடந்திருப்பதற்கான வாய்ப்புகளைக் கொண்ட நிகழ்வு அதுகவனம் அவசியம்இப்படியா முறுக்குவ என்று கொட்டவும் செய்கிறேன்இயக்கம் எழுவதற்கான ஒரு காரியத்தை செய்திருக்கிறாய் என்று பிள்ளையை ஆரத் தழுவி முத்தமும் இடுகிறேன்10.07.2025
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 11, 2025 08:12
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.