எழுத்துப் பயிற்சி வகுப்பு – நவம்பர் 1

Pa Raghavan

எழுத்துப் பயிற்சி வகுப்புகள்
நவம்பர் 1, 2025 ஆரம்பம்
தொடர்ச்சியாக நான்கு வாரங்கள்.
16 மணி நேரம்
சனி-ஞாயிறுகளில் மட்டும்
இந்திய நேரம் மாலை 7.00-9.00 மணி
பாடங்கள்: புனைவு (Fiction), அல்புனைவு (NonFiction), சமூக ஊடக எழுத்து, மொழிநடை (Style)

எழுத்தார்வம் மிக்க, கற்பதில் நாட்டமுள்ள புதியவர்களை வரவேற்கிறேன்.

எழுத வேண்டும் என்ற ஆர்வமுள்ளது. ஆனால் முடியவில்லை;எழுத வேண்டும் என்ற ஆர்வமுள்ளது. ஆனால் சரியாக வருவதில்லை;எழுத வேண்டும் என்ற ஆர்வமுள்ளது. தொடங்கும் எதையும் முடிக்க முடிவதில்லை;எழுதுகிறேன், ஆனால் யாரும் பொருட்படுத்துவதில்லை;பல சிறந்த புத்தகங்களைப் படித்து ரசிக்கிறேன், எதனால் அவை நன்றாக உள்ளன என்று புரிகிறது. ஆனால் நான் எழுதுவது அப்படி இருப்பதில்லை. அது ஏனென்று தெரியவில்லை;ஒன்றிரண்டு புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. ஆனால் அவை யாருடைய கவனத்துக்கும் செல்லவில்லை. எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை;எனக்கு வாசகர்கள் வேண்டும். எனக்கு ரசிகர்கள் வேண்டும். என் எழுத்து படிக்கப்பட வேண்டும். என் எழுத்து பரவலாக வேண்டும். என் எழுத்து புத்தகமாக வேண்டும். என் எழுத்து கொண்டாடப்பட வேண்டும்…

எத்தனையோ பேர் எத்தனை எத்தனையோ காரணங்களைச் சொல்லி வருகிறார்கள். ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சூரணம் எல்லாம் கிடையாது. எழுத்தில் இரண்டே ரகம்தான்.

நல்ல எழுத்து. நன்றாக இல்லாத எழுத்து. நல்லது வெல்லும். அல்லாதது வெல்லாது. முடிந்தது.

என் வகுப்புகளில் நல்ல எழுத்தை இனம் காட்டுவதை ஒரு பகுதியாகவும் நன்றாக இல்லாத எழுத்தின் அங்க லட்சணங்களை அலசி ஆராய்வதைப் பெரும்பகுதியாகவும் எப்போதும் அமைத்துக்கொள்கிறேன். இசையைப் போல, ஓவியம் போல எழுத்தும் கலைதான். கலையைக் கற்பிக்க இயலாது. ஆனால் நுட்பங்களைக் கற்றுத்தான் தேறித் தெளிய வேண்டும். நுட்பம் அறியாமல் எழுதும்போதுதான் சிறப்பு வெளிப்படாமல் குவியலில் ஒரு துகளாகிறது.

எழுத்துத் துறையில் எந்த தேவதையும் யார் தலையிலும் கைவைத்து ஆசி வழங்கி, ஓரிரவில் காவியம் பாட வைக்காது. அடிப்படை ஆர்வமும் கற்கும் வேட்கையும் இடைவிடாத பயிற்சியும் இருந்தால் மட்டுமே சாத்தியம். முட்டி மோதி நான் பெற்றதைத்தான் வகுப்புகளில் என் மாணவர்களுக்குத் தருகிறேன். ஆர்வம் உள்ளவர்கள் வரலாம்.

உங்கள் இடத்தை உறுதி செய்ய +91 8610284208 என்ற எண்ணுக்கு வாட்சப் செய்யலாம்.

வகுப்பு தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Share

All rights reserved. © 2004-2025 Pa Raghavan .

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2025 19:17
No comments have been added yet.