பிரச்சினை முளைத்துவளர்ந்துஎன்னைக் கொன்றுவிட முனைந்தஅந்த முப்பத்தேழு நாட்களிலும்பிரச்சினையை முறித்துநான் வெளிவந்த பிறகானஇந்த அறுபத்தியோரு நாட்களிலும்எங்கிருந்தாய் நீஆனாலும்நன்றியோடு இப்போது நானுன்னைத் தேடுவதுபிரச்சினைஆரம்பித்த அந்தப் புள்ளியில்நீ ஓடிப்போவதற்கு முன்உனதிரு கைகளுக்குள்என் வலது கைபிடித்துநீ கொடுத்துப்போன'இருக்கேன்’ என்ற அந்த சொல்தான்தினமும் முத்தமிட்டு நான்பத்திரப்படுத்தி வைத்திருக்கும்அந்த ஒற்றை சொல்லைஇறுதி முத்தமிட்டுஉன்னிடம் தரவேண்டும்யாருக்கேனும்பயன்படட்டும் அந்த ஒற்றை சொல்போக அதுவுமில்லையெனில்வேறென்ன இருக்கப்போகிறது உன்னிடம்
Published on January 20, 2026 22:16