கள்ளக்குறிச்சிமாவட்டம். நிறைமதி கிராமம். ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளி.
பிற்பகல்உச்சா பெல் அடித்ததும் அடிக்காததுமாக ஓட்டமும் நடையுமாக அஞ்சாங்கிளாசிற்கு வருகிறார்ஒண்ணாங்கிளாஸ் டீச்சர். பெஞ்ச் கழுவ சோப்பு பவுடர் வாங்க தான் கடைக்குப் போவதாகவும்,வரும் வரைக்கும் தன் வகுப்பு பசங்களைப் பார்த்துக்கொள்ளுமாறும் சுதா டீச்சரிடம் சொல்லிவிட்டுஅதே வேகத்தில் வண்டியை எடுக்கத் திரும்புகிறார்.
”ஏய்,விஷாலினி பாப்பா, உள்ளவர பெல் அடிச்சதும் போய் ஒண்ணாங்கிளாஸ் புள்ளைங்கள இங்க கூட்டிட்டுவா” என்று அவளை ஒண்ணாங்கிளாசிற்கு அனுப்பிய சுதா டீச்சருக்கு அவள்தான் ஸ்பெஷல்.
அவள்ஏன் ஸ்பெஷல் என்றால் அவள் ஒருபோதும் பொய்சொல்ல மாட்டாள். கூடவே கொஞ்சம் துடுக்கும்என்பதால் இந்த விஷாலினி சுதா டீச்சருக்கு ஷ்பெஷல்.
கொஞ்சநேரத்திற்கு முன்பு விஷாலினி டயனாவோடு பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டார் சுதா.”என்னடி பண்ற விஷாலினி பன்னிக்குட்டி” என்று கேட்டதும் “ம்ம்.. பேசிட்டு இருக்கேன்”என்று சொன்னவள் அவள். என்ன இப்படி திமிரோடு பேசுகிறாளே என்று யாராவது கேட்டால் படிப்போடுகொஞ்சம் திமிரையும் சேர்த்துதான் நலப்பள்ளிகள் சொல்லித்தர வேண்டும் என்று அழுத்தமாகசொல்வார்.
வரிசையாய்வந்த ஒண்ணாங்கிளாஸ் பிள்ளைகள் டீச்சர் சொன்னது மாதிரியே அவரை சுற்றி தரையில் அமர்ந்துகொள்கிறார்கள்.யோகதாரிணி மட்டும் எழுந்து ”டீச்சர்” என்று அழைக்கவே என்ன என்பது மாதிரி அவளைப் பார்க்கிறார்டீச்சர்.
டீச்சருக்குஇடதுபக்கமாக வந்த யோகதாரணி “டீச்சர் உங்கள ஒண்ணு கேட்கணும்” என்கிறாள். “என்ன கேட்கனும்பாப்பாவிற்கு?” என்றதும் கொஞ்சம் சத்தமெடுத்து,
“நாங்கஎதுக்கு டீச்சர் அந்த பெஞ்சில உட்காரக் கூடாது?” என்று கேட்டதும் சத்தமாக சிரித்தவாறே”ஏய், எல்லோரும் கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து இந்த பெரிய மனுஷங்களுக்கு இடம் கொடுக்கப்பா”என்கிறார்.
அஞ்சாங்கிளாஸ்குழந்தைகள் ஒதுங்கி ஒண்ணாங்கிளாஸ் குழந்தைகள் கிடைத்த இடங்களில் அமர்ந்துகொண்டபிறகும்அவரது சிரிப்பு அடங்கவில்லை.
முந்தாநாள்வரைக்கும் அஞ்சாங்கிளாசிற்கும் பெஞ்சுகள் இல்லைதான். எல்லா குழந்தைகளும் தரையில்தான்அமர்ந்திருந்தார்கள். திடீரென்று முந்தாநாள் வெல்பர் அலுவலகத்தில் வேலை பார்க்கும்இவருக்கு தெரிந்த ஊழியர் ஒருவர் அழைக்கிறார். “அக்கா கொஞ்சம் பெஞ்சுக வந்திருக்கு,உங்களுக்கு ஏதும் வேணுமா?” என்று கேட்கவே கொஞ்சம் பொறு வரேன் என்று ஓடி 20 பெஞ்சுகளைஅள்ளிக்கொண்டு வந்துவிட்டார்.
பெரியபள்ளிக்கூடங்களுக்காக வந்த பெஞ்சுகள். மீந்து போச்சு என்று சொன்னவர் உங்க பிள்ளைகளக்குகொஞ்சம் உசரமாத்தான் இருக்கும். வேணும்னா யாரையாவது வுட்டு நறுக்கி வெல்டு வச்சுக்கங்கக்காஎன்கிறார்.
”உசரமானநாற்காலிகளதான் எங்க பசங்களுக்கு தரமாட்டேங்கறாங்க. பெஞ்சாவது கொஞ்சம் உசரமா இருக்கட்டுமே.போக, காலு தரையில படலைனா கால ஆட்டுங்கள்ள, விடு தம்பி”
“அக்கா…”அவரும் அண்ணலையும் பெரியாரையும் வாசிக்கிற தம்பிதான். சரியான இடத்திற்குதான் பெஞ்சுகள்போகின்றன என்பதில் அந்த தம்பிக்கும் ஒரு மகிழ்ச்சி.
வேன்பள்ளிக்குள் நுழைந்ததுதான் தாமதம் நித்யா, இன்னொரு சுதா, பானு என்று எல்லா டீச்சர்களும்வேனைச் சுற்றிக் கொள்கிறார்கள். சேலையைத் தூக்கிச் செறுகிக்கொண்டு அவர்களே பெஞ்சுகளைஇறக்க ஆரம்பித்து விட்டார்கள். இருங்க டீச்சர் என்று சொல்லியவாறே வேன் டிரைவர் உதவுகிறார்.
இத்தனைபெஞ்சுகளை ஒருசேர பார்த்ததும் பிள்ளைகளுக்கு ஆச்சரியம். வேனைச் சுற்றி கூடிவிட்டார்கள்.மூணாங்கிளாஸ் பியாழி “ஏதாச்சும் மீட்டிங்கா டீச்சர்?” என்று கேட்கிறாள்.
“எல்லாம்உங்களுக்குத்தான் புள்ளைங்களா” என்று நித்யா டீச்சர் சொன்னதும் “ஓ” என்று கத்த ஆரம்பித்துவிட்டார்கள். கத்தவில்லையே தவிர டீச்சருங்களது மனநிலையும் அப்படிதான் இருந்தது.
அஞ்சாங்கிளாஸ்சுதா டீச்சரிடம் வந்த ஒன்னாங்கிளாஸ் டீச்சர் பானு, “ ஏங்க டீச்சர், எங்க பசங்களுக்கும்உண்டுதான?. ரெண்டு கொடுத்தாகூட போதும். அட்ஜஸ்ட் செஞ்சுக்குவேன் என்கிறார்.
”உனக்குமூணு பெஞ்ச் புள்ள” என்றதும் மகிழ்ச்சியில் இரண்டு கைகளையும் வாயில் வைத்துக் கொள்கிறார்பானு. அது ஒரு வகையான நன்றி கூறல்.
”ஏன்டீச்சர் அவங்களுக்கெல்லாம் ஒண்ணாங்கிளாஸ்லயே பெஞ்ச்சு தரீங்க. எங்களுக்கு மட்டும் அஞ்சாங்கிளாஸ்வந்துதான் தரீங்க” என்று கேட்ட டயனாவிடம்,
“வேணும்னாநீ திரும்பவும் ஒங்கிளாண்ணாஸ்ல இருந்து வா” என்கிறார் சுதா.
“ம்ம்அஸ்கு புஸ்கு” என்றவாறே ஓடிவிட்டாள் டயானா.
பெஞ்ச்வந்த அன்றே சோப்பு பவுடர் வாங்கி தானே கழுவி தன் வகுப்பிற்கு கொண்டுவந்துவிட்டார் சுதா.அடுத்தடுத்து அனைத்து டீச்சர்களும் தங்கள் தங்கள் வகுப்பிற்கு பெஞ்ச்சுகளை கொண்டு சேர்த்துவிட்டார்கள்.
பெஞ்ச்வந்ததற்கும் அடுத்த நாள் பானு டீச்சர் பள்ளிக்கு வரவில்லை. அதனால்தான் இப்போது சோப்புபவுடர் வாங்கப் போகிறார்.
மாலைதங்களை அழைத்துப்போக வந்த பெற்றோர்களை தத்தமது வகுப்பறைகளுக்கு அழைத்து சென்று தங்களதுபெஞ்சுகளைக் காட்டுகிறார்கள் பிள்ளைகள்.
அதுவும்போகிறவழியில் பார்க்கிறவர்களிடமெல்லாம் தனக்கு பெஞ்ச் கிடைத்திருப்பதாக மகிழ்ச்சியோடுசொல்லிச் சென்றான் ரெண்டாங்கிளாஸ் சஞ்சய். அவங்க நாய் டாமியிடமும் இதை சொன்னான்.
முதல்நாள்மாலை வராத பெற்றோர்கள் அடுத்தநாள் காலையில் வந்து பெஞ்சுகளைப் பார்த்துவிட்டு போனார்கள்.எல்லோர் முகத்திலும் அப்படியொரு சந்தோசம்.
பக்கத்துதெருவில் இருக்கும் பெரிய பள்ளிக்கூடத்தில் படிக்கும் இந்தப் பள்ளியின் முன்னாள் குழந்தைகள்திருவிழா சாமி பார்க்க வருவதுபோல் வந்து பெஞ்சுகளைப் பார்த்துவிட்டு போகிறார்கள்.
ஆறாங்கிளாஸ்பிரார்த்தனா ஒருபடி மேலே போய்விட்டாள். தாங்கள் போனபிறகு பெஞ்ச் வாங்கிய எல்லா டீச்சரும்பேட் டீச்சர்கள்தான் என்று சொல்லிவிட்டு டீச்சர்களிடம் காய்விட்டுவிட்டு போகிறாள்.
”ஏங்கடீச்சர், பெஞ்செல்லாம் போட்டுட்டீங்களாமே?” என்று தெருக்காரர்கள் கேட்பதில் டீச்சர்கள்அனைவருக்கும் அப்படியொரு மகிழ்ச்சி.
மூன்றுநாட்களுக்குப் பிறகு வந்த ஆறாங்கிளாஸ் ரம்யா சொன்னதுதான் ஆள்பவர்களுக்கும் அதிகாரிகளுக்குமானதகவல்.
அவளும்எல்லா டீச்சர்களோடும் காய் விட்டுக்கொண்டாள்தான்.
“ஏன்டீச்சர் இந்த வருஷம் பள்ளிக்கூடம் ஆரம்பிக்கறப்பவே பெஞ்சுகள போட்டிருந்தீங்ன்னா ஏந்தம்பியAKT ல சேர்த்திருக்க மாட்டார்ல எங்கப்பா”
&********************************************************************
n புதியஆசிரியன்ஜனவரி