இந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்த தெற்கு நோக்கிய புலப்பெயர்வே இலங்கைத் தீவின் தமிழ் – சிங்களம் பேசும் மக்களின் நிலைத்த குடிசன வரலாறு. இனம், மதம், பண்பாடு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நிலங்களுக்கும் இடையே பெரும் ஒற்றுமையுண்டு. நிலையான தேசங்கள் தோன்றாத பண்டைய காலத்திலும் பின்னர் காலனியக் காலத்திலும் இலங்கைத் தீவின் வரலாறு எப்போதும் இந்தியப் பெருநிலத்துடன் இணைத்தே எழுதப்பட்டிருக்கிறது. கண்டி அரசின் கடைசி நான்கு மன்னர்களும் மதுரை நாயக்கர்கள் என்பதும், […]
Published on December 26, 2025 05:23