(?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Satinath Bhaduri

“மேல் வகுப்பு வார்டு விசாலமான ஹால். இதில் முப்பத்துநாலு கைதிகள் இருக்கின்றனர். பத்தொன்பது பேர் ஸெக்யூரிட்டி கைதிகள், பதினைந்து பேர் அரசியல் கைதிகள். இவர்களில் சிலர் தண்டனை விதிக்கப்பட்டவர்கள். மற்றவர்கள் மேலே வழக்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. வார்டு நடுவில் கதவுக்கு அருகில் என் இடம். அறையின் நடுவில் போவோர் வருவோருக்காக வழி. இரு பக்கத்திலும் சுவர்களை ஒட்டிக் கட்டில்கள். ஒவ்வொரு கட்டிலின் மேலும் ஒரு கொசுவலை, பக்கத்தில் ஒரு மேசை நாற்காலி, புத்தகங்கள் வைக்கும் ஷெல்ஃப். முக்கால்வாசிக் கட்டில்களுக்குப் பக்கத்தில் தரையில் ஒரு கம்பளி விரிப்பு, மேசைகள் மேல் ஒரே மாதிரியான மேசை விரிப்பு. அதன் மேல் கண்ணாடி, சீப்பு, இத்தியாதி. இருப்புக் கம்பிகள், பூட்டுச் சாவி, வார்டர்களின் முகங்கள் கண்ணில் படாவிட்டால் இதைச் சிறைச்சாலையாகவே எண்ணமுடியாது. ஏதோ காலேஜ் மாணவர்கள் ஹாஸ்டல் மாதிரி தோன்றும்.

சென்ற ஆகஸ்டு மாதத்தில் ஹரிஹர்ஜியும் அவன் தந்தை குடுகுடுக் கிழவனும் அண்டர்ட்ரயல் கைதிகளாக இங்கே கொண்டு வரப்பட்டார்கள். ஹரிஹர்ஜியின் தந்தை இது எதுவோ தர்ம சத்திரம் என்று நினைத்துக்கொண்டு விட்டார். ஜெயில் என்பது வேறெங்கோ இருப்பதாகவும், போலீசார் இங்கிருந்து பிறகுதான் அங்கு அழைத்துச் செல்வார்கள் என்றும் எண்ணிக் கொண்டிருந்தார். கிழவர் ஒரு தரம், "எப்போ ஜெயிலுக்கு அழைத்துச் செல்வார்கள்?" என்று கேட்டேவிட்டார். இதற்குப் பிறகு சில தினங்களுக்குள்ளேயே இவரை விடுதலை செய்துவிட்டனர்.

1921-22இல் நான் வந்திருந்த ஜெயிலுக்கும் இப்போதைய ஜெயிலுக்கும் ஆகாசத்துக்கும் பாதாளத்துக்கும் உள்ள வித்தியாசம். அப்போது நான் இருந்த சாதரணக் கைதிகளின் வகுப்பில் எல்லாக் கைதிகளும் வேலை செய்தாக வேண்டும். 'சர்காருக்கு ஸலாம் போட வேண்டும்' என்ற விதியின் காரணமாக எவ்வளவு அமர்க்களம்! எங்கே போனாலும் 'மேட்'டின் கா, கா என்ற குரல் காதில் விழும், "இரட்டை வரிசையில் போ". கக்கூஸிற்குப் போனாலும் இந்த வரிசைதான். எல்லார் கையிலும் ஒரே மாதிரியான இரும்புக் குவளை. சாப்பாடு கீப்பாடு எல்லாவற்றுக்கும் இந்தக் குவளையைத்தான் உபயோதித்துக் கொள்ள வேண்டும். எடுத்ததெற்கெல்லாம் சங்கிலிப் பிணைப்பு, கைவிலங்கு, சாக்குத்துணி உடுப்பு (sack cloth) போன்ற தண்டனைகள். இவற்றையெல்லாம் இன்றைய நிலையுடன் ஒப்பிட முடியுமா? ஜெயிலில் நடந்து திரிதல், சாப்பாடு, தங்குதல் ஆகிய பலவற்றில் வசதிகள் அதிகரித்திருப்பதன் பின்னால் எத்தனை வீரர்களின் ஆச்சரியமூட்டும் தியாகங்கள் பொதிந்து கிடக்கின்றன! இந்த அதிகாரிகளின் மனப்போக்குத்தான் என்ன விசித்திரம்! எனக்கு உயர் வகுப்பு, என் மனைவிக்கு உயர் வகுப்பு, ஆனால் என் மகன் பீலுவுக்கு மூன்றாம் வகுப்பு.”

Satinath Bhaduri, জাগরী
Read more quotes from Satinath Bhaduri


Share this quote:
Share on Twitter

Friends Who Liked This Quote

To see what your friends thought of this quote, please sign up!

0 likes
All Members Who Liked This Quote

None yet!


This Quote Is From

জাগরী জাগরী by Satinath Bhaduri
240 ratings, average rating, 51 reviews

Browse By Tag