Umakanth > Umakanth's Quotes

Showing 1-18 of 18
sort by

  • #1
    Kannadasan
    “முதல் முத்தத்தின் இனிய சுவையை உணர்ந்தவன் ஒரு பைத்தியகாரனைப் போலாகி விடுகிறான்.”
    Kannadasan, அவளுக்காக ஒரு பாடல்

  • #2
    Kannadasan
    “தன்னுடையது என்று கருதும் போது, தலை மயிருக்கும் மரியாதை வந்து விடுகிறது.”
    Kannadasan, வனவாசம் [Vanavaasam]

  • #3
    Kannadasan
    “அப்போதுதான் அவள் கூந்தலைப் பார்த்தேன். ஒரு கவிஞனுடைய ரசனைக்கு எவ்வளவு நீளமான கூந்தல் வேண்டுமோ அவ்வளவு நீளம் இருந்தது.”
    Kannadasan, அவளுக்காக ஒரு பாடல்

  • #4
    Kannadasan
    “தன்பாடு தீரும் வரைக்கும் தான் பண்பாடு.”
    Kannadasan, வனவாசம் [Vanavaasam]

  • #5
    Kannadasan
    “ஆடவர் பலருண்டு, அழகியர் மிக உண்டு. அவனியில், எனினும் ஒருவருக்கொருவர் என்கிற உறுதியை உயிர் போகும் வரையில் கடைபிடித்த எங்களை ஒவ்வொரு வினாடியும் நினைத்துக் கொண்டிருப்பீர்களாக”
    Kannadasan, வனவாசம் [Vanavaasam]

  • #6
    Kannadasan
    “Sollendrum Mozhi Endrum Porul Endrum Illai, Porul Endrum Illai
    Sollaatha Solluku Vilai Yethum Illai, Vilai Yethum Illai
    Ondrodu Ondraaga Uyir Serntha Pinne, Uyir Serntha Pinne Hmm..hmm hmmhmmm
    Ullagangal Nammayandri Vereythum Illai, Vereythum Illai”
    Kannadasan

  • #7
    Kannadasan
    “தொட்டிலுக்கு அன்னை கட்டிலுக்குக் கன்னி
    பட்டினிக்குத் தீனி கெட்ட பின்பு ஞானி

    A mother for the cradle, a damsel for the bed
    food for hunger, sinistrad realised saint.”
    Kannadhasan

  • #8
    Kannadasan
    “பிரம்மம் விருஷ்ணத்தில் லயித்து, விருஷ்ணம் சிவத்தி லயித்து , மூன்றும் மன்மதனிடம் லயித்த நிலை நாங்கள் இருந்த நிலை”
    Kannadasan, அவளுக்காக ஒரு பாடல்

  • #9
    Kannadasan
    “ஆடவர் பலருண்டு, அழகியர் மிக உண்டு. அவனியில், எனினும் ஒருவருக்கொருவர் என்கிற உறுதியை, உயிர் போகும் வரையில் கடைபிடித்த எங்களை, ஒவ்வொரு வினாடியும் நினைத்துக் கொண்டிருப்பீர்களாக”
    kannadasan, வனவாசம் [Vanavaasam]

  • #10
    Kannadasan
    “கானலை நீர் என்று நினைக்கும் மான்.”
    Kannadasan, வனவாசம் [Vanavaasam]

  • #11
    Kannadasan
    “எதிரே வந்த மாலைகளைப் பார்த்துப் பின்னாலே திரும்பிப் பார்த்தேன். அங்கேயும் மாலைகள் வந்து கொண்டிருந்தன. நான் நின்று விடவில்லை.”
    Kannadhasan, Arthamulla Indhu Madham Bind Volume

  • #12
    Kannadasan
    “என் பொருள் எங்கே என்று கேட்பவனும் கையைத்தான் நீட்டுகிறான்; யாசிப்பவனும் கையைத்தான் நீட்டுகிறான்.”
    Kannadhasan, Arthamulla Indhu Madham Bind Volume

  • #13
    Kannadasan
    “விரும்புவது என்ற வார்த்தையே நல்லதை விரும்புவதைத்தான் குறிக்கும். தவறு செய்ய நினைப்பது விரும்புவதாகாது; திட்டமிடுவதாகும்.”
    Kannadhasan, Arthamulla Indhu Madham Bind Volume

  • #14
    Kannadasan
    “மனிதனுடைய மனோதர்மம் சரியாக இருந்து விட்டால் ‘சமதர்மம்’ என்ற வார்த்தை அரசியலில் ஏன் அடிபடப் போகிறது?”
    Kannadhasan, Arthamulla Indhu Madham Bind Volume

  • #15
    Kannadasan
    “விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்குப் பெயர் போனது. எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு ‘அதைவிட உலகமே கிடையாது’ என்று வாதாடும். எதிர்த்தால் வேரொடு பிடுங்க முயலும். பக்குவமற்ற நிலை என்பது இரண்டு ‘எக்ஸ்ட்ரீம்’ நிலை. ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும், அல்லது அந்த மூலையில் இருந்து குதிக்கும். பக்குவ நிலைக்குப் பெயரே நடு நிலை.”
    Kannadhasan, Arthamulla Indhu Madham Bind Volume

  • #16
    Kannadasan
    “வறுமையைவிடச் சிறந்த பள்ளிக்கூடம் வேறெதுவும் கிடையாது.”
    Kannadhasan, Arthamulla Indhu Madham Bind Volume

  • #17
    Kannadasan
    “குடும்பத்தைக் கோவில் ஆக்கிக்கொள்ள முடியாதவர்கள் துயரங்களைக் கொட்டி அழுவதற்காக ஏற்படுத்திக் கொண்ட இடங்களே, கோயில்கள். மனத்தைக் குளிப்பாட்டி மகேஸ்வரனைக் காணச் சக்தியற்ற உள்ளங்கள், உடலைக் குளிப்பாட்டி உமாபதியைக் காண ஏற்படுத்தப்பட்டவையே பொதுக் குளங்கள். அடக்க ஒடுக்கத்தோடு ஆயிரக்கணக்கானவர்களைச் சந்திப்பதால், மனோதத்துவப்படி அந்த அடக்கம் பிறர்க்கும் வரும் என்பதைக் காட்டுவதற்காகவே, தேர்த்திருவிழாக்கள். தனிமையில் ஒருமுகப்படுத்த முடியாத மனது, சந்நிதானத்தில் ஒருமுகப்படுத்தப்படுகிறது. சிந்தனைக் குழப்பங்களில் ஆழ்ந்துவிடாமலிருக்கத் தேங்காய் உடைப்பதிலும், தீபாராதனை காட்டுவதிலும் சிந்தனை திருப்பி விடப்படுகிறது. குறைந்த பட்சம், மனிதனை மனிதனாக வைப்பதற்கே இந்துமதம் பெருமுயற்சி எடுத்தது.”
    Kannadhasan, Arthamulla Indhu Madham Bind Volume

  • #18
    Kannadasan
    “வசதியுள்ளவர்கள் பாரியாகலாம், பச்சையப்பராகலாம், அழகப்பராகலாம். மன நிலையில் தெளிவுள்ளவர்கள் தலைவர்களாகலாம். உடல் நிலையில் வலுவுள்ளவர்கள் தொண்டர்களாகலாம். ஒன்றும் முடியாதவர்கள், நான்கு சுவர்களுக்குள் அடங்கியுள்ள தங்கள் குடும்பத்தை நாணயமான முறையில் காப்பாற்றலாம்.”
    Kannadhasan, Arthamulla Indhu Madham Bind Volume



Rss
All Quotes



Tags From Umakanth’s Quotes