“எழுக! இதோ புதிய தினம்! முடிவின்மையின் எல்லையற்ற கருணையிலிருந்து இன்னொரு துளி! சலனமின்மையின் பெருங்கடலில் இருந்து இன்னோர் அலை. இதோ வெறுமையின் புன்னகை ஒளியெனத் திரண்ட கதிரவன் பிறந்து வருகிறான். இருளின் ஆழத்திலிருந்து மேகங்கள் நுரைத்து எழுகின்றன. கதிர்கள் தொட்ட இடங்களில் மரங்கள் பசுமையாக உருவாகின்றன. மேகங்களிலிருந்து வழியும் காற்று கிளைகளைத் தழுவுகிறது. பறவைகளை வாரி வானில் இறைக்கிறது. அவற்றின் குரல்களிலிருந்து ஒலி உருவாகிறது. பனியின் திரையை நழுவவிட்ட மலைகள் சிவக்கின்றன. புதிய அருவிகள் பொங்கிச் சரிகின்றன. எழுக! இன்று புதிதாய் பிறந்தெழுக! நெருப்பாக எழுக! காற்றாக எழுக! வானாக எழுக! இல்லாமையிலிருந்து இருப்புக்கு வருக! இருளிலிருந்த ஒளிக்கு வருக! மரணத்திலிருந்து அதீதத்திற்கு எழுக!”
―
Jeyamohan,
விஷ்ணுபுரம்