விஷ்ணுபுரம் Quotes

Rate this book
Clear rating
விஷ்ணுபுரம் விஷ்ணுபுரம் by Jeyamohan
487 ratings, 4.17 average rating, 37 reviews
விஷ்ணுபுரம் Quotes Showing 1-27 of 27
“எழுக! இதோ புதிய தினம்! முடிவின்மையின் எல்லையற்ற கருணையிலிருந்து இன்னொரு துளி! சலனமின்மையின் பெருங்கடலில் இருந்து இன்னோர் அலை. இதோ வெறுமையின் புன்னகை ஒளியெனத் திரண்ட கதிரவன் பிறந்து வருகிறான். இருளின் ஆழத்திலிருந்து மேகங்கள் நுரைத்து எழுகின்றன. கதிர்கள் தொட்ட இடங்களில் மரங்கள் பசுமையாக உருவாகின்றன. மேகங்களிலிருந்து வழியும் காற்று கிளைகளைத் தழுவுகிறது. பறவைகளை வாரி வானில் இறைக்கிறது. அவற்றின் குரல்களிலிருந்து ஒலி உருவாகிறது. பனியின் திரையை நழுவவிட்ட மலைகள் சிவக்கின்றன. புதிய அருவிகள் பொங்கிச் சரிகின்றன. எழுக! இன்று புதிதாய் பிறந்தெழுக! நெருப்பாக எழுக! காற்றாக எழுக! வானாக எழுக! இல்லாமையிலிருந்து இருப்புக்கு வருக! இருளிலிருந்த ஒளிக்கு வருக! மரணத்திலிருந்து அதீதத்திற்கு எழுக!”
Jeyamohan, விஷ்ணுபுரம்
“அகங்காரமிருந்தால் வாழ்க்கையின் அடிகள் ரொம்ப வலிக்கும்.”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“மனிதர்களை மனம் அச்சுறுத்துகிறது. அதனுடன் தனிமையில் ஒருகணம்கூட அவர்களால் இருக்க முடிவதில்லை. பொழுதுபோகவில்லை என்றும், தனிமை என்றும் எதைச் சொல்கிறான் மனிதன்? செயலற்ற கணத்தில் மனம் தெளிந்து ஆழம் தெரிகிறது. அது அவனை அச்சுறுத்துகிறது.”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“மகாகாவியங்கள் தொலைதூரத்து மலைகளைப் போல. நம் மனதின் வடிவக் கற்பனைகளுக்குள் அவற்றின் வடிவம் அடங்காது. ஒரு பகுதியைப் பார்க்கும்போது அதன் மறுபகுதி மறைந்திருக்கும். நாம் நிற்கும் இடத்திற்கு ஏற்பவும், நம் மனதின் கற்பனைக்கு ஏற்பவும், அவை மாறி மாறித் தோற்றம் தரும். எப்போது நமது மனஉருவகங்களை அவற்றின்மீது போட ஆரம்பிக்கிறோமோ, அந்தக் கணத்தில் காவிய தரிசனம் முடிவடைகிறது. பிறகு நாம் பெறுவது வெறும் அகங்கார தரிசனம்தான்.”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“மனிதன் ஞானத்தை உருவாக்குகிறான். அது கூன்போல அவன் முதுகில் உட்கார்ந்திருக்கிறது. தள்ளாடியபடி அதை சுமந்து திரிகிறான்”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“குருநாதரை வணங்குகிறேன்
தனிமை நிறைந்த தவத்தை முழுமை செய்ய
இந்த எளிய பிட்சுவிற்கு ஆசியளியுங்கள்.
எனது ஆனந்தத்தை
நண்பர்கள் அறியாமலிருக்கட்டும்!
எனது துயரத்தை
எதிரிகள் அறியாமலிருக்கட்டும்!
தனிமையில் இந்த உயிர் பிரியுமென்றால்
இந்தப் பிட்சுவின் ஆசை நிறைவேறும்.
எனக்கு முதுமை வருவதை
நண்பர்கள் அறியாமலிருக்கட்டும்!
நோய் வருவதை
சகோதரி அறியாமலிருக்கட்டும்!
தனிமையில் இந்த உயிர் பிரியுமென்றால்
இந்தப் பிட்சுவின் ஆசை நிறைவேறும்.
எனது மரணம் மனிதர்கள் அறியாமலிருக்கட்டும்!
எனது பிணத்தை கழுகுகள் காணாமலிருக்கட்டும்!
தனிமையில் இந்த உயிர் பிரியுமென்றால்
இந்தப் பிட்சுவின் ஆசை நிறைவேறும்.
எனது உடலைச் சுற்றி யாரும் கூடாமலிருக்கட்டும்!
எனது பிரிவை எண்ணி யாரும் அழாமலிருக்கட்டும்!
தனிமையில் இந்த உயிர் பிரியுமென்றால்
இந்தப் பிட்சுவின் ஆசை நிறைவேறும்.
நான் எங்கு போனேன் என்று
யாரும் கேட்காமலிருக்கட்டும்!
நான் எங்குள்ளேன் என்று
யாரும் சொல்லாமலிருக்கட்டும்!
தனிமையில் இந்த உயிர் பிரியுமென்றால்
இந்தப் பிட்சுவின் ஆசை நிறைவேறும்.
மலை மடிப்புகளின் இருண்ட குகையில்
பிட்சுவின் இந்த ஆசை
அனைத்து பூதங்களின் இச்சையை வெல்லட்டும்!
இந்தப் பிட்சுவின் ஆசை நிறைவேறட்டும்!”
Jeyamohan, விஷ்ணுபுரம்
“ஆனால் எந்தக் கணத்தில் மரணம் நிகழ்கிறது? எப்படி நிகழ்கிறது? அதை இதுவரை நான் கண்டதில்லை. அறிய வேண்டுமென்று நான் ஆவலோடு தவித்தலைந்த காலங்கள் உண்டு. இன்று தெரிகிறது. அதை அறியமுடியாது. அறிய முயல்வதே அபத்தம். ஏனெனில், மரணம் என்பது ஞானத்தின் அழிவு. அதை ஞானத்தால் எப்படி அறியமுடியும்? வைத்திய சாஸ்திரம் ஒரு ஞானம். எனக்கு இந்தப் பிறவியில் விதிக்கப்பட்ட கர்மம் இது. நான் மரணத்தை அறியவேண்டிய அவசியமில்லை என்று பின்பு உணர்ந்தேன். மரணத்தின் வருகையை அறிந்தால் போதும். உயிரின்மீது அது குவியும்போது என் கடமையை ஆற்றினால் போதும், என்னால் மரணத்தைத் தடுக்க முடியாது; மரணம் பிரம்மாண்டமானது. விஷ்ணு பள்ளிகொள்ளும் அனந்தகாலரூபன் மரணமேதான். இந்த மெய்ஞானமே எனக்கு அமைதி தந்தது.”
Jeyamohan, விஷ்ணுபுரம்
“உண்மையான வாழ்வின் ஈரமற்ற தீவிரத்தைத் தாங்கமுடியாமல் நான் தப்பித்து ஒளியும் குகைகளா இந்த இறந்தகாலங்கள்?”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“பிம்பங்கள் குமுறிக் கொப்பளிக்கும் இருண்ட ஆழம் ஒன்று. அதன் ஒவ்வோர் அலைக்குப் பின்பும், இடைவெளியின் நொடியில் அது தோன்றி மறைகிறது.” “அந்த ஆழமே ஸ்வப்பனம். அதில் உன்னை ஆழத்திக்கொண்டால் அடித்தரை வெளியாகத் திறக்கும். அதன் பெயர் சுஷûப்தி”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“புழுதியே அனைத்தையும் உண்ணும் பெரும்பசி கொண்ட மகாபிருத்வியின் சிறகு என்பார் தாத்தா.”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“மத்யமத்தில் ஒவ்வொரு சொல்லுக்கும் ஆயிரம் வைகரியின் எடை, ஆயிரம் மடங்கு அழுத்தம். பஸ்யந்தியோ ஆயிரம் மத்யமத்திற்குச் சமம். அங்கே கீழே...”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“பேச்சு நான்கு வகை என்று சாஸ்திரம். பிரம்ம வடிவமான ‘பரா‘வை ரிஷிகள் நாதப்பிரம்மம் என்கிறார்கள். பின்பு தொடக்கம், நடு, முடிவு இல்லாத பிரவாகமான ‘பஸ்யந்தி’. அதிலிருந்து எண்ணங்களாக மனதில் ஓடும் ‘மத்யமம்’. அந்த நதியிலிருந்து நாவும் தொண்டையும் மொண்டு எடுக்கும் ‘வைகரி’.”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“ஏனெனில், நீ உன் மனதைக் கூர்ந்து பார்க்கும்போது மனம் மனதைப் பார்க்கிறது. மனம் இரண்டாகப் பிளந்துவிடுகிறது. பரஸ்பரம் விழுங்கும் பாம்புகள் போல. ஒன்றின் நோக்கங்களுக்கு ஏற்ப பிறிது காட்சிதரும். யோகம் மனதை நோக்கங்களிலிருந்து விடுவிக்கிறது.”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“நமது ஞானம் எங்கோ முளைத்து மரங்களாகிய காடாகிறது. நாம் விதைக்கும் விஷயங்கள் மட்கிவிடுகின்றன. தவறுதலாக உதிர்ந்தவை பிற்பாடு பெரும் விருட்சமாகக் காட்சிதருகின்றன.”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“யோகம் மனதை அஞ்சுவதை நிறுத்து என்கிறது. செயல்களிலிருந்து துண்டித்துக்கொள் என்கிறது. நீ ஓடுவது நின்ற உடனே மனமும் நின்று விடும். அதன் பிறகு அது எண்ண அலைகளாக இருக்காது.”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“யானையின் உடலில் மனிதர்கள் உருவாக்கிய வீட்டுமிருகம். மணியோசையின் தருக்கத்தால் அழுத்தப்பட்ட அசைவுகள் அதனுடையவை. அதில் தெரிந்த அழகுகள் யானையின் அழகுகளல்ல, மனித அழகுகள் அவை.”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“காடு... மனித சஞ்சாரமில்லாதிருப்பதன் சுதந்திரத்தை தாவரங்கள் கொண்டாடுகின்றன.”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“காண்பதும், நூல்களிலிருந்து புரிந்துகொள்ளப்படுவதும் ஆன விஷயங்களில் விருப்பமற்றுப்போகும் வசீகரம் என்ற மேன்மையான போதமே வைராக்யம் என்பது’ பதஞ்சலி யோகசூத்திரம்”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“எண்ணங்களினாலானது மனம் என்றால் எண்ணங்களை எப்படிப் பார்க்க முடிகிறது?”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“ஆனால் அடியில் சொற்களற்ற ஒரு மவுனம் அவற்றை உற்றுக் கவனிக்கிறதே, அது என்ன?”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“கண்மணிகள் மனமெனும் பட்டத்திலகட்டப்பட்ட நூல்கள். கண்மணிகள் அசையாத நிலையே மனம் அமைதியடையும் நிலை.”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“வீட்டுப் பசுக்களுக்கு மரணமில்லை. குட்டிகளை அவை தங்களிடத்தில் நிறுத்திவிடுகின்றன. தொழுவில் மாறாத இளமையுடன், ஒரே பசு தலைமுறைகள்தோறும் நின்றபடி இருக்கிறது.”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“புலி பற்றிய ஞானமே புலியைப் பற்றிய அச்சத்தைப் போக்கும் வழி.”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“தியானம் என்பது இருபது விதமான சத்காய திருஷ்டிகளை நீக்கி மனம் முழுமையடைவது.”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“காமத்தில் அதிருப்தி கொள்ள ஆரம்பித்த பிறகுதான் மனிதன் கலைகளையும் இலக்கியத்தையும் படைத்தான் என்று. கவிஞனுக்கு பூமிமீது பெண்ணே இல்லை என்பார். பெண் அறிமுகமாவதற்கு முன்பே ஆயிரம் வருடங்களாக மனம் பெண் பற்றி உருவாக்கிய கனவுகள் அறிமுகமாகி விடுகின்றன.”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“காளிதாச காவியத்திலே சர்க்கத்துக்கு ஒரு தேவதை கட்டுண்டு இருப்பதாகக் கூறுவார்கள். முதல் வாசிப்புக்கு நமக்கு அதன் பொருள் மட்டுமே தெரியும். மீண்டும் வாசித்தால் லயம் கூடிவிடும். தேவதை சன்னதமாகும். பித்துப் பிடித்தது போல அந்த சர்க்கத்தையே படிப்போம்.”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]
“சங்கீதம் எப்போதும் பூரணத்திற்கு ஒரு மாத்திரை குறைவாகத்தான் இருக்க வேண்டும். நாதம் முழுமை பெற்றால் அதற்குரிய யட்சி கண்விழித்து விடும்.”
Jeyamohan, விஷ்ணுபுரம் [Vishnupuram]