Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Jeyamohan.

Jeyamohan Jeyamohan > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-30 of 559
“நோயாளியும், பித்தனும், ஞானியும், கலைஞனும் இரவில் தூங்குவதில்லை..”
Jeyamohan
“அறிவதொவ்வொன்றும் அறியாமையையே..”
Jeyamohan
“இலக்கணம் பின்னால் ஊர்ந்து ஊர்ந்து வரும், இலக்கியம் முன்னால் பறந்து சென்றுகொண்டிருக்கும்”
Jeyamohan
“முகமூடிக்கு எப்போதும் ஒரே உணர்ச்சிதான், முகம் அப்படிபட்டதல்ல..”
Jeyamohan
“மானுட மனத்தின் அதி நுண்மையான ஒரு இடத்தை 'தற்செயலாக’ ஆனால் தீவிரமாக தீண்டிச்செல்வதே மிகச் சிறந்த கதை”
Jeyamohan
“வானம் மனிதனை எப்போதுமே பெரும் கனவில் ஆழ்த்துகிறது. அவனது வாழ்க்கையின் வெற்றிதோல்விகள் சுக துக்கங்கள் அனைத்துமே மண்ணுடன் சம்பந்தப்பட்டவை. அதற்கு அப்பால் பிரமாண்டமான அலட்சியத்துடன் வெளித்து கிடக்கிறது வானம். நம் வாழ்க்கையும், இந்த பூமியும் எத்தனை அற்பமானவை என அது நம்மிடம் சொல்லிக் கொண்டிருக்கிறது”
Jeyamohan
“ஒரு முச்சந்தி வியாபாரிக்குத் தேவையில்லை. முழுமையாக விடுதலையடைந்த மனிதர்களுக்கும் தேவையில்லை இந்த இரண்டு எல்லைகளுக்கும் நடுவில் இருப்பவர்களுக்கு இலக்கியம் தேவை..”
Jeyamohan
“பறவையை நேர் முன்னால், அது நம்மை நோக்கி முகத்திற்கு நேராக பறந்து வருவதை பார்ப்பது கிளர்ச்சியான அனுபவம்.”
Jeyamohan
tags: nature
“காமத்தின் அனல்காற்று குளிர்ந்துதான் ஆகவேண்டும் ஆனால், குளிரும் கணத்திற்கு முன்னர் அது செடி கொடிகளுடன் நகரையே கொளுத்திவிடுகிறது”
Jeyamohan
tags: lust
“. தன் சிறந்த மாதிரியை முன்னுதாரணமாகக் கொண்டு தன் அடுத்த தலைமுறையை உருவாக்கும் சமூகங்களே வாழும் சமூகங்கள். வெல்லும் சமூகங்கள். சராசரியை முன்னிறுத்தும் சமூகங்கள் உறைந்துவிட்டவை. அடிமைப்பட்டவை.”
Jeyamohan
“பெரும்செயல்வீரர்கள் சோர்வை அறியாதவர்கள் அல்ல, சோர்வைக் குறைந்த கால அவகாசத்தில் சமாதானம் செய்துகொண்டு மீளத்தெரிந்தவர்கள்.”
Jeyamohan
“அறிவுத்திறனும் நுண்ணுணர்வும் சாத்தியங்கள் மட்டும்தான், சாதனைகள் அல்ல. சாதனைகள் செயல்மூலமே உருவாகின்றன. சாத்தியங்கள் நடைமுறையைச் சந்திக்கும்போதுதான் அவற்றின் உண்மையான மதிப்பு வெளியாகிறது.”
Jeyamohan
“அகம் நிறைந்தவனுக்கு புலன்கள் அமுதத்தை மட்டுமே அளிக்கும் என்பது யோகமரபின் ஞானம்”
Jeyamohan, இன்றைய காந்தி
tags: yoga
“செயலாற்றுவதால் கிடைப்பது ஒரு தன்னிறைவு. என்னுடைய சாத்தியங்களை நான் முழுமையாக நிகழ்த்தும்போதுதான் எனக்குள் இருந்து என்னை கவனித்துக்கொண்டிருக்கும் ஒன்று நிறைவடைகிறது”
Jeyamohan
“மனித மனம் என்பது பெரும்பாலும் சூழல்களின் சிருஷ்டி. உடல் என்ற மனிதனால் அறியமுடியாத அமைப்பின் ஒரு பகுதியே மனம் என்பது”
Jeyamohan, இன்றைய காந்தி
“மொழிவழிக்கல்விதான் மூளையின் இயல்பான செயல்பாடு. நாம் அறிந்தவற்றை நாம் நினைப்பது மொழியில்தான். ஒன்றை நாம் நம் மொழியில் சொல்லத்தெரிந்திருந்தால்தான் நாம் அதை அறிந்திருக்கிறோம் என்று பொருள்.”
Jeyamohan
“நாயில் நன்றியாக, பறவையில் வேகமாக, பாம்பில் விஷமாக, மரத்தில் உயிராற்றலாக, அலைகடலில் கொந்தளிப்பாக, அதிகாலையில் சிவப்பாக, இரவில் இருளாகத் தெரிவதெல்லாமே பிரம்மம்தான். எல்லாமே தெய்வம்தான்.”
Jeyamohan, இந்திய ஞானம்: தேடல்கள், புரிதல்கள் [India Gnanam: Thedalgal, Purithalgal]
“தொலைக்காட்சி நமக்குத் தெரிவுகளை அளிப்பதில்லை. அது அளிப்பதை மிதமிஞ்சி வலியுறுத்துகிறது. சிந்திக்கவிடாமல் கொட்டிக்கொண்டே இருக்கிறது. அது நம்மை அடித்துச்செல்லும் தன்மை கொண்டது”
Jeyamohan
“பயத்தையும் அருவருப்பையும் சந்தேகத்தையும் திரும்பி நின்னு கவனிச்சா போரும், அப்டியே உதுந்துடும்...”
Jeyamohan, யானை டாக்டர் / Yaanai Doctor
“என்னுடைய சாத்தியங்கள் முழுவெளிப்பாடு கொள்ளும் களமே தன்னறம் என்பது. அதில் இறங்கிச் செயலாற்ற நான் என் பிறப்பால் பணிக்கப்பட்டிருக்கிறேன்”
Jeyamohan
“புத்தகங்கள் முடிவில்லாதவை. உலக ஞானமே அவற்றில் உள்ளது. அவை அளிக்கும் தெரிவுக்கான சாத்தியங்க்ள் முடிவில்லாதவை.”
Jeyamohan
“கலைகளில் மிக அதிகமான தீவிரம் கொண்டது இசை. மிக அதிகமான உள் விரிவு (Complexity) கொண்டது இலக்கியம். இசை உணர்வுகளுடன் மட்டுமே பேசுகிறது. இலக்கியம், உணர்வுகளுடனும் தர்க்கத்துடனும் ஒரே சமயத்தில் பேசுகிறது.”
Jeyamohan, Naveena Thamizhilakkiya Arimugam
“எல்லா கலையும் அப்பு சொன்ன வரியையே மீண்டும், மீண்டும் சொல்கின்றன: ‘தெய்வம் உண்டு.”
Jeyamohan, அறம் [Aram]
tags: art, god
“காசியில் மரணம் அதன் பொருளை இழந்துவிட்டிருக்கிறது.”
Jeyamohan, இந்தியப் பயணம் [India Payanam]
“இன்பத்தை அடைவதே வாழ்வின் இலக்கு. மரணத்துடன் வாழ்வு முடிந்து போகிறது. மண்ணில் வாழும் சிறந்த வாழ்வே மோட்சமாகும்.”
Jeyamohan, Hindu Ganan Marabil Aaru Tharisanangal
“கற்பனாவாதம் ஒரு வயதில் நம்மை ஆட்கொள்கிறது. மண்ணில் கால்தொடாத உலகங்களில் வாழ்கிறோம். பின்னர் மெல்ல மெல்ல யதார்த்தங்களுக்குள் நுழைகிறோம். வெற்றுக்கற்பனைகள் என கற்பனாவாதத்தை இகழவும் விலகவும் தொடங்குகிறோம். கற்பனாவாதத்தை விட்டு விலகுவது முதிர்ச்சியின் ஓர் அடையாளம் என்று சொல்லப்படுகிறது. அது உண்மை அல்ல. கற்பனாவாதத்தை விட்டு விலகுவதென்பது நடைமுறைத் தர்க்கபுத்தி வலுவடைவதன் அடையாளம் மட்டுமே.அதன் நன்மைகள் பல உண்டு. ஆனால் இழப்புகளும் அதற்கிணையானவை. கற்பனாவாதம் மட்டுமே மொழியை அதன் உச்சங்கள் நோக்கி கொண்டு செல்கிறது. யதார்த்தவாதம் என்றுமே மொழியின் நடைமுறைத்தன்மையை மீறுவதில்லை. மொழி அதற்கு சிறகு அல்ல, ஒரு பயன்படுபொருள் மட்டுமே. ஆகவே மொழியில் ஓர் இயந்திரக்கச்சிதத்தை மட்டுமே யதார்த்தவாதம் அடைகிறது. அந்தக் கச்சிதமே மொழியின் சிறந்த நிலை என நம்புபவர்கள் மொழியை அறிவதே இல்லை. கச்சிதமான நடையே நல்ல நடை என நம்புவதுபோல இலக்கியத்தில் நுணுக்கமான வீழ்ச்சி பிறிதொன்றில்லை. ஏனென்றால் அப்படி கச்சிதம் என ஒன்றில்லை. கச்சிதம் என நாம் எண்ணுவது கொடுப்பவனும் பெறுபவனும் சந்திக்கும் அந்த தொடர்புறுத்தல்புள்ளியைச் சார்ந்தது. ஆனால் அது மிக எளிதில் மாறிவிடும்.”
Jeyamohan
“காமத்தை வெல்பவன் மட்டுமே அகங்காரத்தை வெல்லமுடியும். உலகம் மீது பரவி அதை மறைக்கும் அகங்காரத்தையும் வென்றவனாலேயே உலகை உண்மையில் அறியமுடியும். ’தன்னுடைய உண்மை’க்குப் பதிலாக ’உண்மை’யை அவனால்தான் அறிய முடியும். ஆகவேதான் காமத்தை வெல்லுதல் ஞானத்தின் முதலடியாக எல்லா மரபுகளிலும் சொல்லப்படுகிறது.”
Jeyamohan
“தன்னிரக்கம் விசித்திரமான ஒரு மனநிலை. அதைப்போல இனிய துக்கம் வேறில்லை. தன்னுடைய பலவீனங்கள் பிழைகள் செயலின்மை அனைத்தையும் அங்கே இனியவையாக ஆக்கிக்கொள்ளமுடியும். அனுபவிக்க அனுபவிக்க தன்னிரக்கம் பெருகும்”
Jeyamohan
“மொழியுடன் இருந்து கொண்டிருங்கள். மிக இளமைப்பருவத்தில் ஒளிமிக்க மணிமுடியுடன் உங்களுக்குக் காட்சியளித்த அந்த தேவதையை ஒவ்வொரு கணமும் கூடவே வைத்திருங்கள்.”
Jeyamohan
“பழி சூடாத எவர் புவியில் தெய்வத்தை நினைக்கப் போகிறார்கள்?”
Jeyamohan, வெண்முரசு – 25 – நூல் இருபத்திஐந்து – கல்பொருசிறுநுரை

« previous 1 3 4 5 6 7 8 9 18 19
All Quotes | Add A Quote
அறம் [Aram] அறம் [Aram]
2,039 ratings