நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் Quotes

Rate this book
Clear rating
நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் by Jeyamohan
86 ratings, 4.38 average rating, 9 reviews
நவீனத் தமிழிலக்கிய அறிமுகம் Quotes Showing 1-8 of 8
“ஒரு நண்பர் சொன்னார்: ‘மேலே யமலோகத்தில் சித்திரகுப்தன் நம் பாவங்களைப் பதிவு செய்தபடி இருக்கிறான். கீழே இலக்கியவாதிகள் பதிவு செய்கிறார்கள்.”
Jeyamohan, Naveena Thamizhilakkiya Arimugam
“கலைகளில் மிக அதிகமான தீவிரம் கொண்டது இசை. மிக அதிகமான உள் விரிவு (Complexity) கொண்டது இலக்கியம். இசை உணர்வுகளுடன் மட்டுமே பேசுகிறது. இலக்கியம், உணர்வுகளுடனும் தர்க்கத்துடனும் ஒரே சமயத்தில் பேசுகிறது.”
Jeyamohan, Naveena Thamizhilakkiya Arimugam
“இலக்கியவாதி எப்போதுமே அகங்காரம் கொண்டவன். மிக எளிய படைப்பாளிகூட பெரும் படிப்பாளியான விமரிசகனை உள்ளூறப் பொருட்படுத்த மாட்டான். காரணம், படைப்பு என்பது அறிவுச் செயல்பாட்டில் இருந்து முற்றிலும் வேறான ஒரு கலைநிகழ்வு என்பதை அவன் அறிவான்.”
Jeyamohan, Naveena Thamizhilakkiya Arimugam
“சுந்தர ராமசாமியின் முதல் நாவல் ஒரு புளிய மரத்தின் கதை தமிழில் மிக முக்கியமான ஒரு நாவல். ஒரே சமயம் இலக்கிய அங்கீகாரமும் வாசக வரவேற்பும் பெற்ற நாவல். ஒரு புளிய மரத்தை மையமாகக் கொண்டு சுதந்தரத்துக்குப் பிந்தைய இந்தியாவின் சமூக மாற்றத்தை, தார்மீகச் சரிவைச் சித்திரிக்கிறது. ஒரு தூரத்துப் பார்வையில் மனிதனுக்கும் இயற்கைக்குமான உறவின் பல்வேறு மாறும் தளங்களைக் கூறுகிறது.”
Jeyamohan, Naveena Thamizhilakkiya Arimugam
“என்னுடன் ஓர் இலக்கிய விமரிசகர் பேசிக்கொண்டிருந்தார். அவர் சென்றபின் அப்பேச்சைக் கூர்ந்து கேட்டுக்கொண்டிருந்த என் மகள் கேட்டாள்: ‘யாரெல்லாம் கெட்டவங்கன்னு கண்டுபிடிக்கிற மாமாவா இவங்க?”
Jeyamohan, Naveena Thamizhilakkiya Arimugam
“உலக இலக்கியம் என்ற சொல்லாட்சியை அதிகமாக நக்கல் செய்தவர் மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர். ‘விஸ்வ ஸாகித்யம்’ என்பார். ‘காலையில் பேங்குக்குப் போக வேண்டும். கால் வலி. ஆகவே போகவில்லை. வெயிலானதனால், யாரும் தேடிவரவும் இல்லை. பொழுதை எப்படிப் போக்குவது? சரி, பேசாமல் ஒரு உலக இலக்கியம் தட்டி விடுவோம்.’ இது பஷீர் வரி.”
Jeyamohan, Naveena Thamizhilakkiya Arimugam
“ஸ்ரீ வைஷ்ணவ சுதர்சனம்’ என்ற இதழைப் பார்த்திருக்கிறீர்களா? அந்த அளவுக்கு ஆக்ரோஷமான ஒரு ‘சண்டைப் பத்திரிகை’யை தமிழில் வேறு பார்க்க முடியாது.”
Jeyamohan, Naveena Thamizhilakkiya Arimugam
“மனிதன் எத்தனை மகத்தான ஒரு சொல்!’ என்ற மாக்ஸீம் கார்க்கியின் வசனமும் மகத்தானதுதான். ‘மனிதன், அவன் உருவாக்கிய சக்திகளால் கைவிடப்பட்ட மிருகம்!’ என்ற சார்த்தரின் வசனமும் மகத்தானதே.”
Jeyamohan, Naveena Thamizhilakkiya Arimugam