Rama Kumar > Rama's Quotes

Showing 1-6 of 6
sort by

  • #1
    Amitav Ghosh
    “the quiet was more like a fog or a mist, creeping in slowly, from a distance, wrapping itself around certain sounds while revealing others: the sawing of a cicada, a snatch of music from a distant radio, the cackle of an owl.”
    Amitav Ghosh, The Hungry Tide

  • #2
    Monisha Rajesh
    “designed for 1800 standing passengers can often carry up to 7000,”
    Monisha Rajesh, Around India in 80 Trains

  • #3
    Su. Venkatesan
    “நெருப்பைவிட அதிகமாக சுடக்கூடியது கதை. நெருப்புக் கொண்டும் எரிக்கமுடியாதது கதை.”
    Su. Venkatesan, வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

  • #4
    Su. Venkatesan
    “பாறையின் மேலேறிய உதிரனுக்கு கபிலர் ஏன் ஏறாமல் நிற்கிறார் என்ற காரணம் புரியவில்லை.

    "நான் எங்கே நிற்கிறேன்?" என்று கேட்டார் கபிலர்.

    "கீழே நிற்கிறீர்கள்" என்றான் உதிரன்.

    "காரமலையின் உச்சியில் நின்றாலும் நான் கீழே நிற்பதாகத்தானே உனக்குத் தோன்றுகிறது" என்றார். கபிலர் சொல்லவருவது உதிரனுக்குப் புரியவில்லை.

    கபிலர் விளக்கினார். "உண்மை என்பது இருக்குமிடம் சார்ந்தது. அதனால்தான் நான் கீழே இருப்பதாகக் கண நேரத்தில் நீ முடிவு செய்துவிட்டாய். நீ சொல்வது உன்னளவில் மட்டுமே உண்மை. அதுவே முழு உண்மையாகிவிடாது. எல்லோரும் ஓரிடத்தில் நிற்கப்போவதில்லை. எனவே, எல்லோருக்குமான பொது உண்மை இருக்கப்போவதில்லை.”
    Su. Venkatesan, வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

  • #5
    Su. Venkatesan
    “கபிலர்: "அச்சம் இல்லை என்று சொல்ல நான் பொய்யன் அல்ல. ஆனால், அஞ்சமாட்டேன் எனச் சொல்ல பொய் தேவையில்லை."

    பாரி: "அதுதான் புலவன். சொல் சுடும்போது சொல்லைச் சுடுவான் என்று சொல்லக் கேட்டுள்ளேன். இன்றுதான் சொல்லிக் கேட்கிறேன்.”
    Su. Venkatesan, வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி

  • #6
    Su. Venkatesan
    “விதிகளும் அறவுணர்வும் எப்போதும் பொருந்திப் போவதில்லை. விதிகள், சமமான தோற்றத்தை உருவாக்க நினைப்பவை. அறவுணர்வு, சமமற்றவற்றின் நியாயத்தைப் பற்றிநிற்பவை.”
    Su. Venkatesan, வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி



Rss