வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி Quotes
வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
by
Su. Venkatesan1,396 ratings, 4.63 average rating, 186 reviews
வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி Quotes
Showing 1-30 of 39
“உங்களுக்குத் தேவையானதையும் அவர்களுக்குத் தேவையானதையும் பரிமாற்றிக் கொள்கிறோம். பகிர்ந்து உண்பதும் பரிமாறி வாழ்வதும் இயற்கை நமக்கு கற்றுக்கொடுத்தவை.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“யாருடைய கவனத்தையும் சிதைக்கும் ஆற்றல் புகழுக்கு உண்டு. அதற்கு அடிமையாகாதவர்களை அது சந்தித்தது இல்லை என்ற அகம்பாவம்தான் புகழின் ஆணிவேர்.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“எரிந்து மறைதலும், ஒளிர்ந்து அடங்குதலுமே வாழ்வு. இருளை விலக்கத்தான் முடியும்; அழிக்கமுடியாது. ஓளிகொண்டு கண்டறியப்படும் உண்மை அதுதான். மரணமும் அப்படித்தான்!”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“பாறையின் மேலேறிய உதிரனுக்கு கபிலர் ஏன் ஏறாமல் நிற்கிறார் என்ற காரணம் புரியவில்லை.
"நான் எங்கே நிற்கிறேன்?" என்று கேட்டார் கபிலர்.
"கீழே நிற்கிறீர்கள்" என்றான் உதிரன்.
"காரமலையின் உச்சியில் நின்றாலும் நான் கீழே நிற்பதாகத்தானே உனக்குத் தோன்றுகிறது" என்றார். கபிலர் சொல்லவருவது உதிரனுக்குப் புரியவில்லை.
கபிலர் விளக்கினார். "உண்மை என்பது இருக்குமிடம் சார்ந்தது. அதனால்தான் நான் கீழே இருப்பதாகக் கண நேரத்தில் நீ முடிவு செய்துவிட்டாய். நீ சொல்வது உன்னளவில் மட்டுமே உண்மை. அதுவே முழு உண்மையாகிவிடாது. எல்லோரும் ஓரிடத்தில் நிற்கப்போவதில்லை. எனவே, எல்லோருக்குமான பொது உண்மை இருக்கப்போவதில்லை.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
"நான் எங்கே நிற்கிறேன்?" என்று கேட்டார் கபிலர்.
"கீழே நிற்கிறீர்கள்" என்றான் உதிரன்.
"காரமலையின் உச்சியில் நின்றாலும் நான் கீழே நிற்பதாகத்தானே உனக்குத் தோன்றுகிறது" என்றார். கபிலர் சொல்லவருவது உதிரனுக்குப் புரியவில்லை.
கபிலர் விளக்கினார். "உண்மை என்பது இருக்குமிடம் சார்ந்தது. அதனால்தான் நான் கீழே இருப்பதாகக் கண நேரத்தில் நீ முடிவு செய்துவிட்டாய். நீ சொல்வது உன்னளவில் மட்டுமே உண்மை. அதுவே முழு உண்மையாகிவிடாது. எல்லோரும் ஓரிடத்தில் நிற்கப்போவதில்லை. எனவே, எல்லோருக்குமான பொது உண்மை இருக்கப்போவதில்லை.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“நெருப்பைவிட அதிகமாக சுடக்கூடியது கதை. நெருப்புக் கொண்டும் எரிக்கமுடியாதது கதை.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“கபிலர்: "அச்சம் இல்லை என்று சொல்ல நான் பொய்யன் அல்ல. ஆனால், அஞ்சமாட்டேன் எனச் சொல்ல பொய் தேவையில்லை."
பாரி: "அதுதான் புலவன். சொல் சுடும்போது சொல்லைச் சுடுவான் என்று சொல்லக் கேட்டுள்ளேன். இன்றுதான் சொல்லிக் கேட்கிறேன்.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
பாரி: "அதுதான் புலவன். சொல் சுடும்போது சொல்லைச் சுடுவான் என்று சொல்லக் கேட்டுள்ளேன். இன்றுதான் சொல்லிக் கேட்கிறேன்.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“விதிகளும் அறவுணர்வும் எப்போதும் பொருந்திப் போவதில்லை. விதிகள், சமமான தோற்றத்தை உருவாக்க நினைப்பவை. அறவுணர்வு, சமமற்றவற்றின் நியாயத்தைப் பற்றிநிற்பவை.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“அழிவுகளை மட்டுமே செய்யும் உயிரினம் காட்டில் நிலைத்து வாழ முடியாது. ஏனென்றால் அது இயற்கைக்கு எதிரானது. விதையை நாடாதவன் கிளையை ஒடிக்க இயற்கை அனுமதிக்காது. இயற்கையை அழிப்பவரை இயற்கை அழிக்கும்.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“அடங்காத வெறியோடு பொறுமையைக் கைக்கொள்வது மட்டுமே மனம் பக்குவப்பட்டதன் உச்ச அடையாளம்.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“எங்கிருந்தும் வானத்தைப் பார்க்கலாம். ஆனால் எங்கிருந்து பார்க்கிறோம் என்பது தானே முக்கியம். கடல் அதன் அலைகளின் வழியாக அறியப்படுவதைப்போல வானம், அதைக் காணும் கோணத்தின் வழியாகத்தான் காட்சிப்படுகிறது.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“அவர்கள் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள். எனவே, அனுபவத்தின் கண் கொண்டு பார்க்கின்றனர். அனுபவம், அடைவதிலிருந்து மட்டும் ஏற்படுவதில்லை; அடையாததிலிருந்தும் ஏற்படுகிறது. நான் அடைந்திராத அனுபவத்தின் கண் கொண்டு பார்த்தேன்.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“போர் என்பது, ஆயுதங்களின் வழியே இறுதியாகத்தான் நடக்கிறது. அதற்கு முன் மனதின் பல தளங்களில் அது நிகழ்த்திப் பார்க்கப்படுகிறது.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“ஒருவனின் செல்வத்தைக் கவர்ந்திட போரிட்டால் அந்தப் போரில் வெற்றி தோல்வி உண்டு. ஆனால், ஒருவனின் புகழை எதிர்த்து இன்னொருவனால் போரிடவே முடியாது. நீரைப் பாறைகொண்டு நசுக்க முடியாது.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“சொல்லின் வலி, உள்ளத்தின் உறுதியை தளர்த்தவல்லது.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“இயல்பாய் அமைவதைக்கூட இயல்பானதென ஏற்றுக்கொள்ள முடியாத காரணத்தோடு இயங்கும் ஆற்றல் காலத்திற்கு உண்டு.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“எழுதக் கற்கும் வரை சொற்களின் வழியாக உலகைப் பார்த்துப் பழகியவர்கள், எழுதக் கற்ற பின்தான் உலகை விழுங்கி நகரும் ஆற்றல் சொற்களுக்கு உண்டு என்பதை உணர்வார்கள்.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“பெரும் உண்மைகள், எளிய கேள்விகளுக்குள் தலை நுழைத்துதான் வெளிவருகின்றன.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“வலியையும் வேதனையையும் வெளிக்காட்டாமல் வாழ்வது கூட ஒருவிதமான கலைதான்.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“கதை, சொல்லும்போது பெருகக் கூடியது; நினைக்கும்போது திரளக் கூடியது; மறக்க எண்ணும்போது நம்மைக் கண்டு சிரிக்கக் கூடியது. வடிவமற்ற ஒன்றின் பேராற்றலைக் கதைகளிடம்தான் மனிதன் உணர்கிறான்.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“கதைகள்தான் நல்லவர்களின் கடைசி நம்பிக்கை. பறவைகள், விலங்குகள், மரம், செடி, கொடியென இயற்கை எல்லாம் நமக்கு துணை நிற்க, அழித்தொழிப்பவர்கள் வீழ்வார்கள்; அழிக்கப்பட்டவர்கள் எழுவார்கள் என்ற நம்பிக்கையை கதையன்றி வேறு யார் கொடுப்பது?”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“பகை மட்டும்தான் அளவற்ற வெறிகொண்டு மனதை இயக்கும் ஆற்றல் கொண்டது.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“ஆசையின் வழியே பயணப்படக் கூடாது. அறிதலின் வழிதான் பயணப்பட வேண்டும். இயற்கை ஆசைக்கான பொருளன்று.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“காட்டுக்குள் பிறவற்றிலிருந்து தப்பித்தலைப்போல, பிறருக்குத் தன்னை காட்டிக்கொள்வதும் சம முக்கியத்தும் உள்ள கலைதான். ஒவ்வொரு உயிரினமும் இந்த இரண்டு வித்தைகளையும் தெளிவாகத் தெரிந்திருக்கிறது.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“மனதின் ஓரத்தில் இருக்கும் அழுக்குக்கூட நம்மை வெட்கித்து தலைகுனிய செய்யும் அளவுக்கு உக்கிரம் ஏறிய பேரன்பு.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“ஆண் ஆதியில் இருந்தே வெல்வதற்குத்தான் முயன்றிருக்கிறான். பெண் ஆதியில் இருந்தே நம்புவதற்குத்தான் ஆசைப்பட்டிருக்கிறாள்.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“உறக்கம், விழிப்பு, ஆயுதமேந்தல், போரிடுதல் எல்லாமே போர்க்களத்தில் மரணத்தின் மறுசெயல்பாடுகள்தான்.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“கண்களைத் திறப்பதைவிடக் கடினமானது மூடுவது. மனதுக்குள் விழுந்துகிடக்கும் கொடூரங்களை எதைக்கோண்டு அப்புறப்படுத்த முடியும்?”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“பகைமை கொண்டு இயங்குபவன் விரைவில் வலிமை இழப்பான். பகை, சினத்தை மட்டுமே வளர்த்தெடுக்கும். போருக்கு தேவை சினமன்று. ஆனால், இதைத் தவிர மற்ற எல்லாவற்றையும் பகை பின்னுக்குத் தள்ளிவிடும்.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“மனித மனத்தை இயக்கும் விசையை அறிதலே கலையின் உச்சம்.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
“ஏமாற்றம் எதில் நடக்கிறது என்பதை பொருத்துதான் மனிதமனம் எப்படி அதை எடுத்துக் கொள்கிறது என்பது தெரியவருகிறது.”
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
― வீரயுக நாயகன் வேள்பாரி, முதல் தொகுதி
