NiMmi Deena > NiMmi's Quotes

Showing 1-14 of 14
sort by

  • #1
    Na. Muthukumar
    “உண்மையில் ஆண்களின் கண்ணீரும் உயர்வானது. அது பெண்களுக்காகச் சிந்தப்படும் எனில், அதி உயர்வானது.”
    நா. முத்துக்குமார், வேடிக்கைப் பார்ப்பவன்

  • #2
    Na. Muthukumar
    “என் தகப்பன் எனக்கு எப்படி வாழ வேண்டும் என்று நேரடியாகச் சொல்லித்தரவில்லை. அவன் வாழ்ந்தான். அதை உடனிருந்து நான் பார்த்துக்கொண்டிருந்தேன்!' - கேப்ரியேல் கார்ஸியா மார்க்வெஸ்”
    நா. முத்துக்குமார், வேடிக்கைப் பார்ப்பவன்

  • #3
    Na. Muthukumar
    “இவன் தனிமையின் வெற்றிடத்தை புத்தகங்கள் நிரப்பின.”
    நா. முத்துக்குமார், வேடிக்கைப் பார்ப்பவன்

  • #4
    Na. Muthukumar
    “இவன் அப்பா அழைத்து, இவன் வாழ்வின் மிகப் பெரும் ஜன்னல் ஒன்றைத் திறந்துவைத்தார். அன்று அவர், இவன் கையில் கொடுத்தது... அந்த விடுமுறையில் அவசியம் படிக்க வேண்டிய 10 புத்தகங்களுக்கான பட்டியல்.”
    Naa.Muthukumar, வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]

  • #5
    Na. Muthukumar
    “உ.வே.சா. எழுதிய ‘என் சரித்திரம்’ 2. பகத்சிங் எழுதிய ‘நான் ஏன் நாத்திகன் ஆனேன்?’ 3. மகாத்மா காந்தியின் ‘சத்திய சோதனை’ 4. லியோ டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’ 5. தஸ்தாவஸ்கியின் ‘குற்றமும் தண்டணையும்’ 6. ‘உலகம் சுற்றிய தமிழர்’ ஏ.கே. செட்டியாரின் ‘பயணக் கட்டுரைகள்’ 7. ஜான் ரீட் எழுதிய ‘உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்’ 8. சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்த்த ‘ஏழை படும் பாடு’ 9. ராபின்சன் குருசோவின் ‘தன் வரலாறு’ 10. ஹெமிங்வேயின் ‘கடலும் கிழவனும்”
    Naa.Muthukumar, வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]

  • #6
    Na. Muthukumar
    “உன் கவிதையை நீ எழுது எழுது உன் காதல்கள் பற்றி கோபங்கள் பற்றி எழுது உன் ரகசிய ஆசைகள் பற்றி நீ அர்ப்பணித்துக்கொள்ள விரும்பும் புரட்சி பற்றி எழுது உன்னை ஏமாற்றும் போலிப் புரட்சியாளர்கள் பற்றி எழுது சொல்லும் செயலும் முயங்கி நிற்கும் அழகு பற்றி எழுது நீ போடும் இரட்டை வேடம் பற்றி எழுது எல்லோரிடமும் காட்ட விரும்பும் அன்பைப் பற்றி எழுது எவரிடமும் அதைக் காட்ட முடியாமலிருக்கும் தத்தளிப்பைப் பற்றி எழுது”
    Naa.Muthukumar, வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]

  • #7
    Na. Muthukumar
    “பார்ப்பதற்கு நிறையக் காட்சிகளும், படிப்பதற்கு கொஞ்சம் புத்தகங்களும், பழகுவதற்கும் பேசுவதற்கும் எதிரில் அன்பான மனிதர்களும் வாய்த்தால் வாழ்க்கை முழுவதும், இந்த ஜன்னல் ஓரத்து இருக்கையிலேயே வசித்துவிட இவனுக்குச் சம்மதம்.”
    நா. முத்துக்குமார், வேடிக்கைப் பார்ப்பவன்

  • #8
    Na. Muthukumar
    “இவன் கடவுளாக இருந்தபோது இவனுக்குள் இருந்த சாத்தான் உரித்த பாம்புச் சட்டை.”
    Naa.Muthukumar, வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]

  • #9
    Na. Muthukumar
    “கவலைப்படாத. காசுங்கிறது காகிதம் மாதிரி. வரும்... போகும். இதையெல்லாம் ஒரு அனுபவமா எடுத்துக்கோ.”
    Naa.Muthukumar, வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]

  • #10
    Na. Muthukumar
    “சில பார்வையாளர்கள் புத்தகங் களைப் படிப்பதைப் போல பாவனைசெய்து, திருடிச் சென்றுவிடுவார்கள். ‘விடுப்பா... அந்தப் புத்தகம் அவனைப் பாதிச்சா, அடுத்த மாசம் திரும்ப வந்து காசு தருவான்’ என்பார் நாரயணன்.”
    Naa.Muthukumar, வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]

  • #11
    Na. Muthukumar
    “மடையா... உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். இந்த உலகத்துல மனுஷங்க யாரும் சாகறதே இல்ல. காலம்தான் செத்துப்போகுது. நீ இருக்கிற வரைக்கும் நான் உயிரோட தான் இருப்பேன். அப்புறம் நீயும் நானும் உன் பையனா, பேரனா வாழ்ந்திட்டு இருப்போம். ஜனனமும் மரணமும் முடிவே இல்லாத ஒரு தொடர்ச்சிடா.. புரியுதா?”
    Naa.Muthukumar, வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]

  • #12
    Na. Muthukumar
    “உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கிற எல்லா சுதந்திரமும் உனக்கு இருக்கு. பின்னாட்கள்ல அதற்கான சந்தோஷத்தையும் துக்கத்தையும் அனுபவிக்கும்போது மட்டும், என்னை நினைச்சுப் பார்த்துக்கோ. அதுக்கு முன்னாடி ஒரு புத்தகம் தர்றேன். அதை முழுசாப் படி. அப்புறம் முடிவு எடு” என்று சொல்லிவிட்டு புத்தக அலமாரிகளில் தேடித் தேர்ந்தெடுத்து ஒரு புத்தகத்தை இவனிடம் கொடுத்தார். அது நடிகர் சிவகுமார் எழுதிய ‘இது ராஜபாட்டை அல்ல’ என்ற புத்தகம்.”
    Naa.Muthukumar, வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]

  • #13
    Na. Muthukumar
    “வேலையற்றவனின் பகலும், நோயாளியின் இரவும் நீளமானவை”
    Naa.Muthukumar, வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]

  • #14
    Na. Muthukumar
    “வேலை இல்லாதவனின் பகலைச் சுட்டெரிக்கும் வெயில், இவன் வானத்தில் தினமும் எரிந்துகொண்டேயிருந்தது. புத்தகங்களின் நிழலில் ஒதுங்குவது மட்டுமே இவனுக்கு ஆறுதலை அளித்தது.”
    Naa.Muthukumar, வேடிக்கை பார்ப்பவன் [Vedikkai Paarpavan]

Rss