Thleepan Quotes

Quotes tagged as "thleepan" Showing 1-1 of 1
“யார் மறப்பார்...?"

மூவென்பது ஆண்டின் முன்னே. நல்லூரின்
மூவிரண்டு முகத்தான் முன்றலிலே..
ஆறிரண்டு நாளாக -அன்னந் தண்ணிஇன்றி
நாவரண்டு நீபுரண்டு பாய்கிடந்து - உயிர்
போய்முடித்த சோகத்தினை தியாகத்தினை
யார் மறப்பார? யார்மறப்பார் ? சொல் திலீபா?

தாயிருந்து பார்த்திருந்தால் தாங்குவளோ? -இந்தியா
எம்தாயாக நினைந்திருந்தால் உன்னுயிர். வாங்குவரோ?
தோலுரித்து காட்டினாயே அவர் துரோகத்தை வெளிவேசத்தை
நாலாறு வயதே வாழ்ந்த திலீபனே!.

நாரறுந்து கிழிந்தவராய் போர்புரிந்து தோற்றவராய்
புறப்பட்டார் தம்பொதிகளோடு தொண்ணூறில்
வேறுக்க வேசம்போட்டு நாருரிக்கும் நரிகளாகி
நமையழிக்க வந்தாரே நந்திக் கடல்காண..இனியும் ..நம்புவதா....?


கவிஞர்:கவிவன்
பிரசுரித்த திகதி:19, SEPTEMBER 2014”
கவிவன