முதலில் நீயெனக்குச் சொல்லித்தந்தபடி மூடப்பட்ட யோனிகள் பற்றின கிளர்வில் என்னைத் திரவமாக்கியபடியிருந்தேன்.
பின் விரிந்த யோனிகள் பற்றின கதைகளைச் சொன்னாய் அவற்றின் உதடுகள் பற்றியும் நுணுக்கங்கள் பற்றியும் கூட எனக்குச் சொல்லித் தந்தாய் ஒவ்வொரு பொழுதிலும் அதை நான் பார்த்து விடாதிருக்கும் கவனமும் உன் பயமுறுத்தலும் உரத்த பொலிஸ்காரத்தனமாய் என்மீதே குவிந்திருந்தன
அப்போதெல்லாம் என் குறியைப் பற்றிய பெருமிதத்திலேயே என்னை ஆழ்த்தியிருந்தாய்
நிறுத்தாத உன் கதை சொல்லுகையாலும் அதன் வன்மத்தினாலும் உன்னை வெறுக்கவும் உன்னுடைய கதைகளை மீறவுமாகத் தலைப்பட்ட நாளின் பின் யுகாந்திரத்து எல்லா யோனி வடிவங்களிலும் தேடியாயிற்று என் திரையில் நீ வரைந்து விட்ட வடிவத்திலான யோனி ஒன்றை
உன்னுடைய கதைகளால் இப்படியாய் ஏமாற்றப்பட்ட பின்னும் அவற்றின் உருவகத்தில் நான் திரவமாகுவதும் யோனிகளைத் திரும்பத் திரும்பப் பார்ப்பதும் தொடர்ந்தபடியேயிருக்கிறது ஏனென்று தெரியாமல்
முழுக்க ஈரலிப்புடன் என்னை வதைத்துக் கொண்டிருந்த ஒரு இரவின் குரல்தான் எனக்குள் இதை உணர்த்தியது
இப்படியாகத்தான் நீயென்னை குறியைக் கொண்டு செதுக்கப்பட்ட ஆணாகவும் யோனிகளைப் பார்க்குகிற மனநோயாளியாகவும் கடைசியில் அலையச்செய்திருக்கிறதாக
மூடப்பட்ட யோனிகள் பற்றின கிளர்வில்
என்னைத் திரவமாக்கியபடியிருந்தேன்.
பின் விரிந்த யோனிகள் பற்றின கதைகளைச் சொன்னாய்
அவற்றின் உதடுகள் பற்றியும் நுணுக்கங்கள் பற்றியும் கூட
எனக்குச் சொல்லித் தந்தாய்
ஒவ்வொரு பொழுதிலும்
அதை நான் பார்த்து விடாதிருக்கும் கவனமும்
உன் பயமுறுத்தலும் உரத்த பொலிஸ்காரத்தனமாய்
என்மீதே குவிந்திருந்தன
அப்போதெல்லாம் என் குறியைப் பற்றிய பெருமிதத்திலேயே
என்னை ஆழ்த்தியிருந்தாய்
நிறுத்தாத உன் கதை சொல்லுகையாலும்
அதன் வன்மத்தினாலும்
உன்னை வெறுக்கவும் உன்னுடைய கதைகளை
மீறவுமாகத் தலைப்பட்ட நாளின் பின்
யுகாந்திரத்து எல்லா யோனி வடிவங்களிலும் தேடியாயிற்று
என் திரையில் நீ வரைந்து விட்ட வடிவத்திலான யோனி ஒன்றை
உன்னுடைய கதைகளால் இப்படியாய் ஏமாற்றப்பட்ட பின்னும்
அவற்றின் உருவகத்தில் நான் திரவமாகுவதும்
யோனிகளைத் திரும்பத் திரும்பப் பார்ப்பதும் தொடர்ந்தபடியேயிருக்கிறது
ஏனென்று தெரியாமல்
முழுக்க ஈரலிப்புடன் என்னை வதைத்துக் கொண்டிருந்த ஒரு இரவின் குரல்தான்
எனக்குள் இதை உணர்த்தியது
இப்படியாகத்தான் நீயென்னை
குறியைக் கொண்டு செதுக்கப்பட்ட ஆணாகவும்
யோனிகளைப் பார்க்குகிற மனநோயாளியாகவும் கடைசியில் அலையச்செய்திருக்கிறதாக