தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

100 சிறந்த சிறுகதைகள்
52 views
சிறுகதைகள்/தொகுப்புகள் > எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த நூறு சிறுகதைகள்!

Comments Showing 1-3 of 3 (3 new)    post a comment »
dateUp arrow    newest »

Prem | 230 comments Mod
சமீபத்தில் மற்றோரு குழுவில் இருந்த வாசக நண்பர்கள் சிலர் இணைந்து எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த நூறு சிறுகதைகள் வாசித்தது ஒரு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. ஒன்றிரண்டு கதைகளைப் பற்றி சிறு குறிப்புகளை அந்தக் குழுவில் பகிர்ந்துள்ளேன். அனைத்து நூறு கதைகளையும் இணையத்தில் வாசிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் வாசிக்க வசதியாக கதைகளுக்கான இணைப்புகள் இந்த ஆவணத்தில் இருக்கின்றன -- எஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த நூறு சிறுகதைகள். வாசித்துப் பாருங்கள்!

சில கதைகள் பற்றிய எனது குறிப்புகள் வாசிக்க பின்வரும் இணைப்புகள் உதவும்:
1. கவிதா அவர்கள் எழுதிய குறிப்பு: அக்னிபிரவேசம் - ஜெயகாந்தன், அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
2. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை
3. சிறுமி கொண்டு வந்த மலர் - விமலாதித்த மாமல்லன்
4. ராஜா வந்திருக்கிறார் - கு. அழகிரிசாமி
5. எஸ்தர் - வண்ணநிலவன்
6. காடன் கண்டது - பிரமிள்
7. காஞ்சனை - புதுமைப்பித்தன்
8. கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் - புதுமைப்பித்தன்
9. நாயனம் - ஆ.மாதவன்
10. செல்லம்மாள் - புதுமைப்பித்தன்
11. மூங்கில் குருத்து - திலீப் குமார்
12. தம்பி - கௌதம சித்தார்த்தன்
13. கதவு - கி. ராஜநாரயணன்
14. ஆண்களின் படித்துறை - ஜே பி சாணக்யா
15. தங்க ஒரு..- கிருஷ்ணன் நம்பி
16. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி
17. பாயாசம் - தி. ஜானகிராமன்
18. புலிக்கலைஞன் - அசோகமித்திரன்
19. கோமதி - கி. ராஜநாரயணன்
20. டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் - ஜி. நாகராஜன்
21. நீக்கல்கள் - ஐ. சாந்தன்


Canute Aravintharaj Denicius  (aravinth-dc) | 1 comments பகிர்ந்து கொண்டதற்கு நன்றி


Prem | 230 comments Mod
புதிதாய் திருமணம் முடித்த கணவன் மனைவி, அவனது நண்பன் இப்படி மூன்றே கதாபாத்திரங்கள் கொண்டு 1940 களின் பெரிய நகரத்தின் பின்னணியில் கு. ப. ராஜகோபாலன் எழுதிய கதை கனகாம்பரம். தங்களை முற்போக்குவாதிகள் என்று கருதும் இரு நண்பர்கள் பார்வையில், அந்தப் சிறு பெண் தனக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட நாகரீகத்தை விட ஒரு படி மேல் நடந்து கொண்டதால் ஏற்படும் விரிசலை மிக அழகாக கதையாக எழுதியுள்ளார். என்னதான் பட்டணத்து நாகரீகம் என்று பேசினாலும் தனது மனைவி என்று வரும் போது அந்த நாகரீகத்தின் எல்லை சுருங்கித்தான் போய் விடுகிறது போலும். அந்த எல்லைகள் காலத்துக்கேற்ற மாறி இருந்தாலும், முற்றிலுமாக இன்றும் அழிந்து விடவில்லை என்பதுதான் உண்மை. விட்டுக்கொடுப்பது என்பது பெரும்பாலும் பெண்களுக்கே விதிக்கப்பட்டது என்பது போல முடிகிறது கதை.

* விலையுயர்ந்த பெங்களூர்ப் பட்டுச் சேலையை நேர்த்தியாகக் ‘கொசாம்’ விட்டுக் கட்டிக் கொண்டிருந்தாள். அதற்கேற்ற வர்ணம் கொண்ட பழையமாதிரி ரவிக்கைதான் அணிந்திருந்தாள். தலைமயிரை நடுவே வகிரெடுத்துத்தான் பின்னிக் கொண்டிருந்தாள். பின்னல்கூட, நவநாகரிகப் போக்குப்படித் ‘தொள தொள’வென்று காதை மூடிக் கொண்டு இருக்கவில்லை.
* நெற்றியில் பூர்ணசந்திரன் போலப் பெரிய குங்குமப்பொட்டு இருந்தது. உடம்பின் மேலிருந்த வைரங்கள் பூத்துக்கொட்டிக் கொண்டிருந்தன.
* மனித சுபாவம் எது வேண்டுமானாலும் நினைக்கும்.
* ‘எல்லாம் பட்டணத்துலே செய்யறாப்பலே செய்யணும்னு யார் சொன்னது? அப்படி கட்டாயமா? பட்டணத்துப் பெண்கள் மாதிரிதான் இருக்கு, அவர்கள் வைத்துக் கொள்ளுகிற கனகாம்பரமும். வாசனையில்லாத பூவை எங்கேயாவது தலையில் வைத்துக்கொள்வதுண்டா? காக்கரட்டான் பூவைத் தலையில் வச்சுக்கற பெண்களுடைய வாழ்க்கை ரஸனையும் அப்படித்தான் இருக்கும்.


back to top

64602

தமிழ் புத்தகங்கள் (Tamil Books)

unread topics | mark unread


Authors mentioned in this topic

கு. ப. ராஜகோபாலன் (other topics)