தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion
2021: வாசிப்பு இலக்குகள்
date
newest »

1. J J Sila Kuripugal by Sundara Ramaswamy
2. Moga Mul by Thi. Janakiraman
3. Bava Chelladurai

Thought lockdown will only help reading more. But it is the opposite. Hopefully will overcome the hurdles and read more next year.
நானும் இந்த வருடம் இல்லாத சட்டையை மடித்துக் கொண்டு நிறைய வாசிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அந்த அளவிற்கு வாசிக்க முடியவில்லை. வரும் வருடத்தில் முடிந்த அளவு வாசிக்க வேண்டும்.
அடுத்த வருடம் வாசிக்க நினைத்திருக்கும் புத்தகங்கள்
அபுனைவு:
1. காந்தி பற்றிய புத்தகங்கள் - சத்திய சோதனை, தென்னாப்பிரிக்க சத்தியாக்கிரகம், காந்தி: சத்திய சோதனைக்குப் பின்
2. பெரியார் புத்தகங்கள் - பெண் ஏன் அடிமையானாள்?, தமிழும் தமிழுரும், மனித வாழ்வின் பெருமை எது?
3. அம்பேத்கர் புத்தகங்கள் - ஒரு விசாவுக்காகக் காத்திருத்தல், , அம்பேத்கரும் சாதி ஒழிப்பும்
புனைவு: (எல்லாமே கனமான புத்தகங்களாக இருக்கின்றனவே)
1. காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்
2. மோகமுள் - தி.ஜானகிராமன்
3. சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
4. யதி - பா.ராகவன்
5. குருதிப்புனல் - இந்திரா பார்த்தசாரதி
6. நிலம் பூத்து மலர்ந்த நாள் - மனோஜ் குரூர்
மற்றும் 100 சிறுகதைகள்!

@Harish - வேள்பாரி is not available in Kindle yet. You can read it online in vikatan website officially.. https://www.vikatan.com/news/celebrit...
காவல் கோட்டம் is available in Kindle for purchase - https://www.amazon.in/Kaaval-Kottam-T...
காவல் கோட்டம் is available in Kindle for purchase - https://www.amazon.in/Kaaval-Kottam-T...

Just curious. Is there any one trying to reduce the number of books being read?

Nice to hear that. So I am not the only one. I had updated my Goodreads reading challenge multiple time last year, increasing it every time.
Last couple of years I have kept 52 as my target for yearly reading challenge and towards the end have increased the numbers. This year I am yet to reach my target. I have participated/shared in many good discussions about books read this year compared to previous years though!

The Complete Persepolis
Chandrahasam: A War with No End
Burma Chronicles
But always prefer a normal book.

@உதயகுமார் - மிக்க நன்று. அடுத்த வருடமும் உங்களுக்கு சிறப்பான வாசிப்பு வருடமாக இருக்க வாழ்த்துக்கள்!
@Vivek- I have read some popular graphic novels (fiction and non-fiction). Local libraries in US carry a good collection of popular graphic novels. Since covid I haven't been to library and reading electronic version is not the same as reading physical graphic novels. I hope to read some of your recommendations in the near future.

Sure Vivek.. I am using hoopla digital & need to start using curbside pickup facility from library. For me photo books & graphic novels need to be seen in real than in devices 😆
2021 - முடிவுக்கு வருகிறது. நான் நினைத்த புத்தகங்களில் ஒன்றுதான் வாசித்து இருக்கிறேன். நீங்கள் 2021-ல் வாசித்ததில் உங்களுக்கு பிடித்த புத்தகங்கள் என்ன? எதனால்?
தமிழில் நான் வாசித்த புத்தகங்கள்:
1. வண்ணநிலவன் அவர்களின் கடல்புரத்தில்:
நெய்தல் நிலப்பரப்பில் இருந்து வந்த எனக்கு இந்த புத்தகம் பிடித்ததில் வியப்பேதும் இல்லை. உணர்வுபூர்வமான கதை. வண்ணநிலவன் அமைதியான எழுத்து. கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம்.
2. அ. முத்துலிங்கம் அவர்களின் அங்கே இப்ப என்ன நேரம்?:
முத்துலிங்கம் அவர்களின் பகடியான எழுத்து நடையில், அவரின் பரந்துபட்ட அனுபவங்கள் விரிந்திருக்கும் புத்தகம். சிறு சிறு பத்திகள், இன்னும் கொஞ்சம் இருக்கக்கூடாதா என்று வாசிக்க தூண்டும். முத்துலிங்கம் அவரின் எழுத்துக்களை வாசிக்க ஆகச் சிறந்த தொடக்கம் இந்த புத்தகம்.
3. Ernest Hemingway அவர்கள் எழுதி எம். சிவசுப்ரமணியன் அவர்களின் மொழிபெயர்ப்பில் கிழவனும் கடலும்:
"கதை சொல்கிறேன்" அவர்கள் எழுதிய பதிவின் உந்துதலில் உடனே வாங்கி வாசித்த புத்தகம். ஆங்கில மூலத்தை முன்னர் வாசித்து இருந்தும், தமிழில் வாசிக்கும் போதும் அதே அனுபவம் தந்தது. வாசித்து முடித்து சாந்தியாகோ மற்றும் ஹெமிங்வேயின் உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தேன். சிறிய வாசிக்க எளிமையான ஆனால் பல நினைவுகளை எண்ணங்களை தூண்டும் புத்தகம்.
4. சு.வெங்கடேசன் அவர்களின் காவல் கோட்டம்:
வருட தொடக்கத்தில் தோழமை வாசிப்பாகத் தொடங்கி நடுவில் நிறுத்தி பின் அக்டோபர் மாதத்தில் முழுவதும் வாசித்து முடித்தேன். மதுரையின் 600 கால வரலாற்றை அரசர்களிடம் தொடங்கி, குடிமக்களின் ஒரு குறிப்பிட்ட கள்ளர் பிரிவின் மூலம் சொல்லிச் செல்லும் ஒரு பெரும் படைப்பு. வேள்பாரி வாசித்த உந்துதலில் சு வெங்கடேசன் அவர்களின் இப்புத்தகத்தை தொடங்கினோம். ஆரம்பத்தில் நிறைய தகவல் திரட்டுகளால் அயற்சியாக இருந்த புத்தகம், போக போக வாசிக்க விறுவிறுப்பாக இருந்தது. மிகுந்த திருப்தி தரும் வாசிப்பு.
இவை தவிர மறுவாசிப்பாக, வாசிக்க இலகுவாக எடுத்துக் கொண்டு வாசித்தவை.
* சுஜாதா அவர்களின் ஏன்? எதற்கு? எப்படி? -1)
* சுஜாதா அவர்களின் ஶ்ரீரங்கத்து தேவதைகள்
* பிரேம், ரமேஷ் அவர்கள் எழுதிய இளையராஜா: இசையின் தத்துவமும் அழகியலும்36987825

Books mentioned in this topic
ஶ்ரீரங்கத்து தேவதைகள் [Srirangaththu Devadhaigal] (other topics)ஏன்? எதற்கு? எப்படி? [Enn? Etharku? Eppadi? (Part -1)] (other topics)
கிழவனும் கடலும் (other topics)
அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?] (other topics)
காவல் கோட்டம் (other topics)
More...
Authors mentioned in this topic
Ramesh Predan (other topics)Sujatha (other topics)
Ernest Hemingway (other topics)
A. Muttulingam (other topics)
Su. Venkatesan (other topics)
More...
1. கம்யூனிசம்
2. அம்பேத்கர் புத்தகங்கள் (The Buddha and his Dhamma, What Congress and Gandhi have done to the untouchables, Buddha or Karl Marx)
3. மன்னார் பொழுதுகள் - வேல்முருகன் இளங்கோ
4. கன்னி - பிரான்சிஸ் கிருபா
5. மோகமுள் - தி.ஜானகிராமன்
6. வண்ணதாசன் புத்தகங்கள்
7. ஷோபாசக்தி புத்தகங்கள்
8. ரஷ்யா இலக்கியங்கள்
9. One Hundred years of Solitude - Gabriel Garcia Marquez
10. பெருமாள் முருகன் புத்தகங்கள்
பண்படுதல் குழு வெங்கடாச்சலம் சமீபத்தில் ஜெயமோகன் அவர்களின் வாசிப்பு எனும் நோன்பு என்ற பதிவை பகிர்ந்திருந்தார். எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன், 1000 மணி நேர வாசிப்பு என்ற சவாலை நண்பர்களுடன் சேர்ந்து செய்து வருவது பற்றி. அதை வாசிக்க ஆரம்பித்து ஒரு சூழல் போல தொடர்புள்ள இணைப்புகளாக வாசித்து மலைத்து போயிருந்தேன்.
முக்கிய கருத்தாக இதை பார்க்கின்றேன்
* இப்படி ஒரு சவாலை நமக்குநாமே விடுத்துக்கொள்ளாவிட்டால் நாம் இன்றைய சூழலில் வாசிக்க மாட்டோம். ‘இயல்பாக’ வாசிக்கவேண்டும் என சிலர் சொல்லலாம். ஆனால் அவ்வாறு எதுவுமே ‘இயல்பாக’ நிகழ்வதில்லை. தீவிரமானவை எல்லாமே நோன்புகளாகக் கடைக்கொள்ளப்படவேண்டியவை. எழுதுவது வாசிப்பது மட்டும் அல்ல சிந்திப்பதுகூட. அதற்கென முடிவுகொள்ளவேண்டும். அதற்கென நேரம் ஒதுக்கவேண்டும். அதற்கான தடைகளைக் கண்டடைந்து நீக்கவேண்டும். அதன்மூலம் அடையும் பயிற்சியை ஒருங்கமைத்துக்கொள்ளவேண்டும்.
* இத்தகைய அறைகூவல்களை விட்டுக்கொள்வது நம் எல்லை என்ன, நம் சாத்தியங்கள் என்னென்ன என்பதைக் காட்ட உதவுவது. பலசமயம் நம்மால் நிறைய வாசிக்கமுடியும் என்பதை நாமே ஆச்சரியத்துடன் கண்டடைவோம். இவ்வாறு நண்பர்களுடன் சேர்ந்து வாசிப்பது மேலும் ஊக்கமூட்டுவது. ஒரு குருகுலத்தின் மாணவர்கள் சேர்ந்து கற்பதுபோலத்தான் இதுவும். இன்று குருகுலங்கள் இணையத்தால் கட்டமைக்கப்படுகின்றன என்று கொள்ளலாம்
எந்த வாசிப்புப் பட்டியல் பார்த்தாலும் அந்த புத்தகங்களை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்கிறது. 2020-ல் வாசிக்க தேர்ந்தெடுத்த புத்தகங்களே இன்னும் வாசித்து முடிக்கவில்லை அதை அப்படியே 2021 க்கு கடத்திவிட வேண்டும் என்றே தற்போதைக்கு நினைத்திருக்கின்றேன்.
நண்பர்கள் 2021-ல் என்ன என்ன புத்தகங்கள் வாசிக்க நினைத்திருக்கிறீர்கள் என்று இந்த இழையில் பகிர்ந்து கொள்ளுங்கள்..