தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

24 views
சொந்த புத்தக விளம்பரங்கள் > கிண்டிலில் இன்று மட்டுமே இலவசம் - எதிர்கால நினைவுகள்

Comments Showing 1-1 of 1 (1 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Balaraman (new)

Balaraman | 3 comments எதிர்கால நினைவுகள்


தமிழில் புனைவு நாவல்கள் வெளிவருவதே மிகவும் அருகிக்கொண்டு வருகிறது. அதிலும் அறிவியல் புனைவு, ஆவல்தாவிப்பு, புதிர், பரபரப்பு வகைமையைச் சேர்ந்த கதைகள் வருவது மிகவும் அரிது. இந்த நூல் இப்படிப்பட்ட அறிவியல் புனைவு கதையைக் கொண்டு புதுமையான மொழிநடையில் அமைக்கப்பட்டது. கதை தொடக்கம் முதல் முடிவு வரை விறுவிறுவென்று செல்லும். நிறைய புதிய தமிழ்ச் சொற்களும் கையாளப்பட்டிருக்கிறது. இந்தக் கதை 1980'ஆம் ஆண்டில் தொடங்கி 2060'ஆம் ஆண்டு வரை செல்வதால் கதையுடன் சேர்ந்து படிப்பவர்களும் பல காலக்கட்டங்களுக்கு பயணிக்கலாம்.

அமேசான் தளத்தில் இன்றும் நாளையும் மட்டும் இலவசமாக கிடைக்கிறது இந்த மின்னூல்.

எழுத்தாளரைப் பற்றி:

பலராமன் பல ஆண்டுகளாய் எறுழ்வலி என்ற பெயரில் ஒரு வலைப்பதிவில் சிறுகதைகள், கட்டுரைகள் மற்றும் கவிதைகள் எழுதி வருகிறார். அது போக சில தமிழ்க்குறும்படங்கள் இயக்கியும் நடித்தும் உள்ளார். வலைப்பதிவில் வெளியான சிறுகதைத் தொகுப்பை இலவச மின்னூலாக வெளியிட்டுள்ளார். இப்போது முதல் முறையாக ஒரு புனைவுப் பெருங்கதையை அமேசான் தலத்தில் மின்னூலாக வெளியிட்டுள்ளார்.

இணைப்பு: https://amzn.to/2YCsrZK


back to top

64602

தமிழ் புத்தகங்கள் (Tamil Books)

unread topics | mark unread


Books mentioned in this topic

எதிர்கால நினைவுகள் (other topics)