திரைக்கதைக்குரிய விறுவிறுப்பும், ஓட்டையில்லாத கதையும் ஓர் அறிவியற் புதினத்தில் அமைவது அரிது. இந்த நூல் அப்படியொன்று. மாறுபட்ட கதையை நல்ல தமிழில் கலைச்சொற்களோடு எழுதியிருக்கிறார். ஆங்காங்கே பெயர்களிலும் சொல்லாட்சியிலும் குறியீடுகளைத் தெளித்திருப்பது நன்று. மணி என்ற பாத்திரத்தின் பெயரும் அப்படி வந்ததே. தமிழில் இதுபோன்ற முயற்சிகள் வரவேற்க வேண்டியவை. இதைத் திரைப்படமாகவும் எடுக்கலாம். கதை முடிந்தபின்னும் அதன் நீட்சியொன்றைத் தனியாக வெளியிட்டுள்ளார். அதுவும் ஒரு மாறுபட்ட அணுகுமுறை. அந்தப்பகுதியில் நாயகனின் பார்வையையும் சேர்த்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஆங்காங்கே சில ஒற்றுப்பிழைகள் மட்டும் இருந்தன, ஆசிரியருக்கு அனுப்பியுள்ளேன்.
பி.கு. இந்தக்கதையை எழுதியது என் தம்பி என்பதாலும் நல்ல தமிழ்ச்சொற்களின் பயன்பாடு என்னை ஈர்க்கும் என்பதாலும் எனது மதிப்பீடு சாய்வுடையதுதான். இருப்பினும் இந்த நூல் எந்த வகையிலும் படிக்கக்கூடிய நல்ல நூலே. https://www.goodreads.com/review/show...
பி.கு. இந்தக்கதையை எழுதியது என் தம்பி என்பதாலும் நல்ல தமிழ்ச்சொற்களின் பயன்பாடு என்னை ஈர்க்கும் என்பதாலும் எனது மதிப்பீடு சாய்வுடையதுதான். இருப்பினும் இந்த நூல் எந்த வகையிலும் படிக்கக்கூடிய நல்ல நூலே.
https://www.goodreads.com/review/show...