தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion
This topic is about
வெண்முரசு – 01 – நூல் ஒன்று – முதற்கனல்
புதினம்/நாவல்
>
தோழமை வாசிப்பு: வெண்முரசு 01 - முதற்கனல்
date
newest »
newest »
Started reading this book today with my husband. Read three chapters. The first two chapters are more of big-bang theory nature. First time reading this explanation of how the world came to be. Well...I am still trying to come to terms with this concept and the author's explanation :) The third chapter is about King Janamejaya's Yagna and his learning about his father's curse. So far good.
நற்றிணை வெளியீடாக வந்த "முதற்கனல்" நாவலுக்கான முன்னுரை "அணிவாயில்" என்ற தலைப்பில் எழுதி இருக்கிறார். (https://www.jeyamohan.in/47119/).
இந்த முன்னுரையில் அவர் கூறி இருக்கும் மகாபாரதம் குறித்து அவர் வாசித்த சில புத்தகங்கள்:
* பி.கே.பாலகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதிய நாவல் இனி நான் உறங்கட்டும் தமிழாக்கம் ஆ. மாதவன்
* வி.எஸ்.காண்டேகரின் மராட்டியநாவலான யயாதி -பாகம் 1, 2 தமிழாக்கம் கா.ஸ்ரீ.ஸ்ரீ.
* எஸ்.எல்.பைரப்பாவின் கன்னடநாவலான பருவம் தமிழாக்கம் பாவண்ணன்
* எம்.டி.வாசுதேவன் நாயரின் இரண்டாம் இடம் தமிழாக்கம் குறிஞ்சிவேலன்
* குட்டிகிருஷ்ண மாரார் மலையாளத்தில் எழுதிய பாரத பரியடனம் என்னும் மகாபாரத ஆய்வுநூல்
* கிசாரிமோகன் கங்குலியின் ஆங்கில மொழியாக்கம்
அவரே மகாபாரதம் தொட்டு எழுதிய சிறுகதைகள்:
* திசைகளின் நடுவே
* நதிக்கரையில் (https://www.jeyamohan.in/82/)
* பத்மவியூகம் (https://www.jeyamohan.in/43970/)
* விரித்த கரங்களில்
அவரது இரு நாடகங்கள்:
* பதுமை (https://www.jeyamohan.in/6999/)
* வடக்குமுகம் (https://www.jeyamohan.in/tag/%e0%ae%b...)
இந்த முதல் நாவலை ஜெயமோகன் அவர்கள் இசைஞானி இளையராஜா அவர்களுக்கும், ஜெமோ அவர்களின் குரு நித்ய சைதன்ய யதிக்கும் அவரது குருமரபுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

The author also says Venmurasu is not just from Veda Vyasa's Mahabharath but also from Bhagavatham and other adaptions of Mahabharatham by other regional language authors as noted by Prem.
ஆமாம். நீலம் நாவலும் சில கிருஷ்ணன் தொடர்பான பாகங்களும் , மற்ற சில கதாபாத்திரங்களின் கதைகளும் பாகவதத்தில் இருந்தும் எடுத்தாளப்பட்டிருக்கிறது. நண்பர் ஒருவர் வேள்விமுகம் வாசித்து விட்டு இது அசோக் பாங்கர் எழுதிய The Forest of Stories சாயல் இருப்பதாக கூறினார்.
அனலெழுகை (https://www.jeyamohan.in/170689/) என்ற தலைப்பில் ஜெயமோகன் அவர்கள் முதற்கனல் நாவலின் செம்பதிப்பிற்காக எழுதிய முன்னுரை. வெண்முரசு முழுவதும் எழுதிய பிறகு முதல் புத்தகத்திற்கு எழுதியது. 26,000 பக்கங்கள் எழுதியதை திரும்பிப் பார்க்கும் அவரது அனுபவப் பார்வை இந்த முன்னுரையில் உள்ளது.
அவர் வார்த்தைகளில் "எரிந்தடங்கல் என்பது இப்புவியில் நாம் காணும் மாபெரும் நிகழ்வுகளில் ஒன்று, எரிவது எதுவானாலும். இருப்பதொன்று இல்லாமலாவது அது. பருவடிவொன்று கருவடிவுக்குத் திரும்புவது."
இந்த நாவல் வழியாக அவர் கண்ட சில போக்குகள் பற்றியும் இப்படி கூறுகிறார். "ஆனால் இந்நாவலில் தொடக்கத்தில் பல சம்ஸ்கிருத வார்த்தைகள் உள்ளன. அவை மெல்ல மெல்ல களையப்பட்டு தூய தமிழ் நோக்கிச் செல்கின்றது இதன் வளர்ச்சிப் போக்கு."
"மகாபாரதம் மொத்தமும் ஒரு பெருவேள்வி" என்றும் "இந்நாவல் ஒரு விதை. இதைத்தொடர்ந்து வரும் பிற நாவல்கள் பெருமரங்கள்" என்றும் கொஞ்சம் கொஞ்சமாக விளக்கம் கொள்கின்றன.

Books mentioned in this topic
The Forest of Stories (other topics)யயாதி -பாகம் 1 ( YAYATI- PART 1): தமிழாக்கம் -கா.ஸ்ரீ.ஸ்ரீ. (other topics)
பருவம் [Paruvam] (other topics)
இரண்டாம் இடம் (other topics)
ഭാരതപര്യടനം | Bharatha Paryatanam (other topics)
More...
Authors mentioned in this topic
Ashok K. Banker (other topics)கா.ஸ்ரீ.ஸ்ரீ. (other topics)
A. Madhavan (other topics)
Paavannan (other topics)
குறிஞ்சிவேலன் (other topics)
More...

வெண்முரசு நாவல் தொடர் ஒரு பெருமுயற்சி. எழுதிய ஜெயமோகனுக்கும் அதை வாசிக்கும் வாசகர்களுக்கும். அதை வாசிக்கும் முயற்சியை இது நாள் வரை தள்ளிப்போட்டுக் கொண்டே வந்துள்ளேன். இப்போது நண்பர்களின் உந்துதலால் தோழமை வாசிப்பாக உட்புகலாம் என்ற பேராசை. வரும் வெள்ளி முதல் தொடங்க எண்ணம். விருப்பமுள்ள வாசகர்கள், வாசித்து தங்கள் கருத்துக்களைப் பதிவிடலாம். முன்னமே வாசித்தவர்கள் உங்கள் வாசிப்பு அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். பல மாதங்களாய் எதுவும் பதிவிடாமல் இருந்த இந்த குழுமத்தில் இந்த தொடர் வாசிப்பு மூலம் கொஞ்சமேனும் பதிவுகள் பகிரலாம் என்ற எண்ணமும் உள்ளது.
அதன் துவக்கமாக, "வியாசனின் பாதங்களில்…" (https://www.jeyamohan.in/43681) - ஜெயமோகன் அவர்களின் பதிவு. மேலேயும் கீழேயும் உள்ள வரிகள் இந்தப் பதிவில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளன. எத்தனை வியாசர்கள். அவர்களின் பாதம் தொட்டு கரம் பிடித்து வெண்முரசின் முதல் பகுதி "முதற்கனல்" வாசிக்க தொடங்கலாம். வெண்முரசு முழு தொகுப்பும் இணையத்தில் அனைவருக்கும் பொதுவாக கிடைக்கிறது.
முதற்கனல் நாவல் தொகுப்பு வாசிக்க! - https://venmurasu.in/mutharkanal/chap...
"நண்பர்களில் ஒரு சாரார் நான் தொடர்கள் எழுதும்போது ‘எடுத்து வச்சிருக்கேன். படிக்கணும்’ என்பார்கள். இது அவர்களுக்குரிய நாவல் அல்ல. அவர்கள் ஒருபோதும் வாசிக்கப்போவதில்லை. இது ஒவ்வொருநாளும் கொஞ்சமேனும் வாசிக்கக் கூடியவர்களுக்கான படைப்பு. ஒவ்வொருநாளும் வாசித்தவற்றைப் பற்றி தியானிக்கக் கூடியவர்களுக்கானது. அவர்களின் வாழ்க்கையை மேலும் சிலவருடங்கள் வியாசனின் மானுடநாடகம் ஒளியேற்றுவதாக! அவர்கள் தங்கள் வியாசனை எனது வியாசனிலிருந்து கண்டுகொள்ள நேர்வதாக!" - ஜெயமோகன்