தமிழ் புத்தகங்கள் (Tamil Books) discussion

39 views
படிப்போம், பாராட்டுவோம், விமர்சிப்போம்!

Comments Showing 1-2 of 2 (2 new)    post a comment »
dateUp arrow    newest »

message 1: by Prem (last edited May 02, 2023 10:42AM) (new)

Prem | 245 comments Mod
மிக்க நன்று.. நான் புத்தகங்கள் வாசிப்பதும் பெரும்பாலும் கிண்டில் வழியாகத்தான். ஜெயமோகன் அவர்களின் வெண்முரசு நாவல் தொடர் வாசித்துக் கொண்டு இருக்கின்றேன். நான்காம் பாகமான நீலம் ஆரம்பிக்க உள்ளேன். வெண்முரசு ஒரு பெருஞ்சுழலாக உள்ளிழுத்துக் கொண்டிருக்கிறது.

சி. சு. செல்லப்பா அவர்கள் தொகுத்து நடத்திய எழுத்து சிற்றிதழின் எழுத்து 61: இதழ் (ஜனவரி 1964ல் வெளிவந்தது) மே 3 வரை கிண்டிலில் இலவசமாக கிடைக்கின்றது. இணைப்பு: https://www.amazon.in/dp/B0C3WQSBLD?&.... இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இது போன்ற உரையாடல்களை தொடர முயற்சி செய்வோம். உங்களுக்கு பிடித்த எழுத்து வகை என்ன? பிடித்த எழுத்தாளர்கள் யார்?


message 2: by C.V. (last edited May 04, 2023 10:57AM) (new)

C.V. Rajan | 6 comments Prashanthini wrote: "Prem wrote: "மிக்க நன்று.. நான் புத்தகங்கள் வாசிப்பதும் பெரும்பாலும் கிண்டில் வழியாகத்தான். ஜெயமோகன் அவர்களின் வெண்முரசு நாவல் தொடர் வாசித்துக் கொண்டு இருக்கின்றேன்..."

தங்களது அன்பான பாராட்டுதல்களுக்கு என் நன்றி! எனது எழுத்துகளுக்கு, லா ச ராவின் கதைகள் ஒரு உந்துதலாக இருந்தது உண்மையே! அவர் பாணியே தனி! என்னால் அதை எட்ட முடியாது.

அன்னாரை ஒரு முறை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.


back to top