TAMIL ISAI > Quotes > Quote > Srinivasan liked it

“உன்னை விரும்புகிறேன்

முதல் முதலில் பார்த்த பார்வையிலேயே என்னை கவர்ந்துவிட்டாய்

வாழ்க்கை உன்னிடத்தே என முடிவு செய்துவிட்டேன்
நம்மிடம் நாமே கேட்டுக்கொள்ளும் ஒரே கேள்வி

நாமா இப்படி மாறி போனோம் என்று

கோபம், தாபம், வெட்கம், மௌனம் இவையனைத்தும் நம் வாழ்வில் வந்த வண்ணமே உள்ளன

நம்பிக்கை வேரூன்றி கொண்டது இருவரிடமும்

நாம் காதலித்த முதல் நாள் முதல் இன்று வரை ஊடலும் கூடலும் ஒருங்கே ஒட்டிக்கொண்டன

காமம் என்பதே மறந்து காதல் மட்டுமே குடிகொண்டு விட்டது
.
"காமம் இல்லாமல் காதல் இல்லை.. ஆனால் காமம் மட்டுமே காதல் ஆகாது"
இதை நம் காதலே நமக்கு உணர்த்தியது..


உன்னை போல் என்னால் யாரையும் காதலிக்க இயலாது
காதல் என்பதையே நாம் நம்மிடம் தானே கண்டு கொண்டோம்

உன்னில் உன் உள்ளத்தில் வாழ விழைகிறேன்
உன்னை விரும்புகிறேன்!!”
TAMIL ISAI

No comments have been added yet.