குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Charithiram] Quotes

Rate this book
Clear rating
குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Charithiram] குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Charithiram] by Yuvan Chandrasekar
68 ratings, 4.19 average rating, 8 reviews
குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Charithiram] Quotes Showing 1-30 of 47
“ஒரு குழந்தையைக் காட்சியிலிருந்து மறைக்கவேண்டும் என்பது அவள் ஆசை. அவளுடைய பூர்வ ஜென்மப் பலன் அது. கருவாக வந்து அவள் மகளின் உதரத்தில் புகுந்திருக்கிறது. தன் கண்ணிலிருந்து மட்டும் அல்ல. ஊரார் கண்ணிலிருந்தும் மறைக்க ஆசைப்படுகிறாள். நடத்திக் கொடுத்தோம். குழந்தையையும், அவள் வீட்டில் வந்து அது ஜனித்ததற்கான தடயங்களையும் ஒருங்கே மறைத்துவிட்டோம். ஆனால், பாவம், சாகிற நாள்வரை அந்தக் குழந்தையை நினைத்துப் புழுங்கித்தான் ஆகவேண்டும் அவள். ஜென்மாந்திரக் கணக்கை வாழ்ந்துதான் தீர்க்கவேண்டும். வேறு விமோசனமில்லை.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“வான்திரையில் வர்ணங்கள் குதித்துக் கும்மாளமிடுவதைப் பாருங்கள். அத்தனை வர்ணங்களும் வெறும் தோற்ற மயக்கங்கள். உண்மையில் வானத்துக்கென்று சுயமான நிறம் உண்டா என்ன?”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“மரணம், வெளியில் இல்லை. பிறந்து, வளர்சிதை மாற்றத்துக்கு ஆளானபடியிருக்கும் மனித சரீரத்தில் இருக்கிறது. அது பற்றிய அச்சம் மனத்தில் இருக்கிறது. மரணத்திடமிருந்து தப்பிக்கவேண்டு மானால், உள்ளுக்குள் அதனிடமிருந்து விடுபடவேண்டும்.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கிவிடக் கூடியவர்கள். இவர்கள் ஒன்றுக்குப் பத்தாகச் சொல்லப் போய்த்தான் இந்த மண்ணில் நாஸ்திகம் தலையெடுக்க ஏதுவாகிவிட்டது.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“குடை பிடித்துப் பார்க்கலாம். வீட்டைவிட்டு வெளியேறாமல் இருக்கலாம். மழையை நிறுத்த முடியுமா ஓய்!”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்குப் பொறுமையே கிடையாது. அனுபவம் பேசும்போது கேக்கக் கூடப் பொறுமை இல்லே. எல்லாமே வேகம்தான்.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“ரெண்டு வழி உண்டு. ஒண்ணு, கறுப்பு வழி. மற்றது, வெளுப்பு வழி. கறுப்பு வழி கொஞ்சம் சுத்து வழி. கரடுமுரடானது. நம்மளை மாதிரி சுதேசிகள் வர்றதுக்கு. வெளுப்பு வழியிலே தூரம் குறைவு. நல்ல பாதை. வெள்ளைக்காரப் பரதேசிகள் வர்றதுக்கு. உயிருக்குத் தப்பி ஓடுற நாய்கள்லே உசந்த நாய், தாழ்ந்த நாய் வேறே.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“சிக்கனத்துக்கும் கஞ்சத்தனத்துக்கும் இடையிலே சின்னக் கோடுதாங்க இருக்கு. எல்லாருக்கும் தெரியுறதில்லே அந்தக் கோடு.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“நம்ம கண்ணுக்கு எல்லாமே பாறையாத்தான் தெரியிது. ஆனா ஒரு பாறைக்குள்ளே அம்மி இருக்கு. இன்னொண்ணுக்குள்ளே பிள்ளையார் இருக்காரு. அந்த வித்தியாசமெல்லாம் ஸ்தபதிக்கித்தானே தெரியும்.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“அடிமையாய் இல்லாமே இருக்கிறதிலே வேற ஒரு சுகம் இருக்கு. அதைத் தேடிப் போறவன் நான்.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“ஜனங்களைப் பயமுறுத்தித்தான் நீதியை நிலைநாட்ட முடியுமென்றால் அதில் ஜனங்களால் விரும்பி ஏற்க முடியாத ஏதோ ஒன்று இருப்பதாகத்தானே அர்த்தம்? அப்புறம் என்ன நீதி, பெரிய நீதி. உடுப்புக்குத் தனியாகக் குணாம்சம் ஏதும் இருக்கிறதோ? உடுத்துகிறவனைத் தொற்றுகிறதோ?”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“தன்னிச்சையாய் வளரும் பாதையில் பிரவேசித்துவிட்ட தாவரம் புதிய வேர்களைக் கண்டுபிடித்த சந்தோஷத்தில் காற்றுடன் இசைந்து ஆடுகிறது.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“நீ இருப்பதை உணர்வதற்கு உனக்கு வேறு எதுவும் அவசியமில்லை. நீ இருக்கிறாய் என்ற உணர்வு மட்டுமே போதும். இருப்பது என்பதுதான் அடிப்படையான உணர்வு. எங்கே இருக்கிறோம், எப்போதில் இருக்கிறோம் என்ற விசாரணை மேலோட்டமானதுதான்.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“உன்னைத் தவிர வேறு எதையும் நீ ருசிப்பதற்கில்லை.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“நான் வந்த நோக்கமென்ன? திரும்பிப் போகும்போது கொண்டு போகிறவற்றின் தன்மையென்ன? விசித்திரம்தான்.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“அலைகள் அதிகமற்று சாவகாசமாகக் கிடக்கிறது சமுத்திரம். நான் இருப்பது மரங்களைச் சார்ந்து அல்ல என்று அறிவித்துத் தன்னிச்சையாகக் கடற்பரப்பில் மிதக்கும் காற்று,”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“உணர்ச்சி உச்சமா முட்டும்போது அதை அறிவாலே சமனப்படுத்திக்கிறதும்; அறிவோட பார்வை எல்லாத்தையும் அபத்தம், அர்த்தமில்லாததுன்னு காட்ட ஆரமிச்சதும் உணர்ச்சியாலே அதை மூடப் பாக்குறதும் எல்லாரும் செய்யுறதுதான்.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“புலனுக்குத் தட்டுப்படாத எதையோ நம்பி எவ்வளவு நிம்மதியாயிடுறா.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“நாம் சரித்திரம் என்று படிப்பதெல்லாம், சரித்திரா சிரியனின் பார்வையையும் அபிப்பிராயத்தையும்தானே. எழுதப் படாத சரித்திரங்களிலிருந்து ஒருவன் தன்னிஷ்டப்படி உருவி எடுத்ததுதான் எழுதப்பட்ட சரித்திரம். விடுபட்ட சரித்திரத்தை அறிவதற்கு உள்ளுணர்வைத்தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“மனுஷ்யனை மையமாக வைத்து யோசித்துப் பழகிவிட்டோம். பூமியின் ஆண்டைகள் நாம்தான் என்கிற மாதிரி. தெருவில் தேங்கிய சாக்கடைக் குட்டையிலிருந்தும் சரி, இந்த மகாசமுத்திரத்தின் பரப்பிலிருந்தும் சரி, மேகமாகி உயர்ந்து, தாரையாகப் பொழியும் ஒவ்வொரு துளி நீருக்கும் ஒரு தனி சரித்திரம் இருக்கிறது.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“உபயோகம் கருதி மட்டுமே சிந்திக்கக்கூடியவர்களாய் மனுஷ இனம் மாறிவிட்டபடியால், இதையெல்லாம் யோசித்துப் பார்க்க நேரமில்லாமல் போய்விட்டது.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“தானாய்ப் பழுக்கும் பழத்துக்கும் புகை போட்டுப் பழுத்த பழத்துக்கும் ருசிபேதம் எவ்வளவு இருக்கிறது.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“கணவன் மனைவி, ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் வெறும் ஏற்பாடுகள்தாமே. திறப்பது, பெண்ணுடம்பின் இயல்பு. யோனியை விளையாட்டுத் திடலாகக் கொள்வது, புருஷேந்திரியத்தின் இயல்பு. தனக்கான முகூர்த்தத்தில் அது அது நடந்து முடிகிறது. இதில் சரியென்ன, தவறென்ன. செயற்கையான வரப்புகளுக்குள், எத்தனை மனோவதைகள்.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“தேவரகசியங்களைப் பேசிக்கொண்டிருக்கிறோம் உம்மிடம். லோகாயதமான விபரங்களைக் கேட்காதீர். அவசியம் வரும் போது நீரே தெரிந்துகொள்வீர்.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“தனித்தனிச் சொட்டுகள் ஒன்று கூடித் தாரையாவது போல, பல்லாயிரம் உதிரிச் சம்பவங்களின் தொகுப்புதான் வாழ்க்கை.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“பொதுவாக மனிதர்களிடம் அவ்வளவாக வைத்துக் கொள்வதில்லை. அவர்களுக்கு நான் இரையில்லை. எனக்கு அவர்கள் இரையில்லை.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“கன்றைப் பறிகொடுத்த பசுவின் கண்களில் நீர்க்கோடு இறங்கிய வாறிருப்பதைப் பார்த்ததில்லையா நீர். அல்லது, தம் சகபாடியின் மரணத்தை ஊர்முழுக்கக் கதறி அறிவிக்கும் காக்கைகளைப் பார்த்ததில்லையா.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“கழுகு என்ற பிறவிக்குச் சாலையாகிவிடுகிற காற்று, மனிதனுக்கு ஆகாயமாகத் தெரிகிறது. ஆனால் சுவாசம் என்று வரும்போது, சகல ஜீவராசிகளுக்கும் வாயு பிராணனாகி விடுகிறது.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“அவரைக் கொடி, தன்னுடைய ஒட்டுமொத்த பிம்பத்தின் செய்தியை அவரைவிதை என்ற சிமிழுக்குள் பொதிந்து வைக்கிறதல்லவா? மண்ணும், சூரிய வெளிச்சமும், காற்றும், நீரும் சேர்ந்து அந்தச் செய்தியை வாசிக்கின்றன.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]
“பூர்வ ஜென்மத்துக்கு மனோ மார்க்கமாகப் பிரயாணம் செய்வது ரொம்பக் கஷ்டமான காரியம் என்று நினைக்கிறீர் அல்லவா? உண்மையில் அது அவ்வளவு கடினம் இல்லை. பின்புறமாகக் கைகளை ஊன்றி மதில் சுவரில் ஏறி உட்கார்வது போலத்தான். மதிலில் இருக்கும்போது மதில் தரையாகவும், தரை ஆழம் கொண்ட பள்ளமாகவும் ஆகிவிடுகிறதல்லவா? அதுமாதிரியே அனுபவமும் பிறழ்ந்துவிடும்.”
Yuvan Chandrasekar, குள்ளச் சித்தன் சரித்திரம் [Kulla Chithan Chariththiram]

« previous 1