பகடையாட்டம் [Pagadaiyattam] Quotes
பகடையாட்டம் [Pagadaiyattam]
by
Yuvan Chandrasekar31 ratings, 4.06 average rating, 2 reviews
பகடையாட்டம் [Pagadaiyattam] Quotes
Showing 1-30 of 37
“அதிகாரத்தின் ஒவ்வொரு சொட்டுலேயும் அதீதமான ஒரு ருசி இருக்கு...”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“ஜனனம் போலவே இயல்பானது கொல்லும் தொழில். மிருக ராசிகள் கொலைத் தொழில் பழகுவது தமது குருதியின் ஓட்டத்திலிருந்தே. உணவுக்காகவும், தற்காத்துக் கொள்ளவும், பூமிப் பரப்பில் கொலைத் தொழில் நிகழாத பொழுதேயில்லை. ஆயினும், வன்மம் கருதிக் கொலைத் தொழில் பழகுவது, மனித ராசி மாத்திரமே.”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“திருஷ்டியும் ஸ்பரிஸமும் ஒன்றுக்கொன்று உடனடியானவை அல்ல. திருஷ்டியால் திருப்தியுறாது சரீரம். சர்வ லோக வியாபியின் சிருஷ்டியில் முதலாவதாக உருவானது சரீரம். கடைசியாய் உருவானது கண்கள்.”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“எதை அறுதியான அனுபவம் என்று கொள்ள?...”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“பறிக்கப்படும் போதுதான், சுதந்திரம் என்பது வெறும் சொல் அல்ல, முழுமையான ஒரு அந்தரங்க உணர்வு என்பது தெரியவருகிறது.”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“இப்போது வரையிலான எல்லாத் தருணங்களையும் இழந்து இழந்துதான் இந்தத் தருணத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறேன்...”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“நீங்கள் ஒரு புனுகுப் பூனை வளர்க்கிறீர்கள். எதற்காக? அதன் மலத்தின் சுகந்தத்துக்காக. பூனைக்குத்தான் அது மலம். உங்களுக்கு நறுமணப் பொருள்.”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“காய்களை வெட்டாமலும், வெட்டுக் கொடுக்காமலும் சதுரங்கம் ஆடுவது எப்படி....?...”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“சந்தேகம் என்பது தாயார். யோசிக்கும் மனமே தகப்பன். சந்தேகமும் யோசனையும் கலவிகொண்டு பெற்றெடுக்கும் கேள்விகளால் நிரம்பிவிடு மானிடனே. கேள்விக்கு விடைதேடும் வேட்கை இல்லையேல் நீ இருப்பதைக் கூட நீ அறிவதெங்ஙனம் எலும்பால் நிமிர்ந்த சதைக்கூழே.”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“பார்வைக்குத் தெரிகிற மனிதனும், பழக்கத்துக்குத் தெரிகிற மனிதனும் ஒன்றாயிருப்பது அபூர்வம்தானே?....”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“அதற்குத்தான் பெரியவர்கள் சொல்வார்கள், உவர் நீராக மழை பெய்கிறதாக எவனாவது சொன்னால், அதைக் காதால் கேட்காதே, நாக்கால் கேளு என்று.”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“நரிகளும் நாய்களும் முழங்கால் வரையிலான பகுதிகளைத் தின்னும். மரமேறக் கூடிய விலங்குகள், தலை மற்றும் புஜங்களை உண்ணும். நெஞ்சு முதல் தொடைகளின் இறுதிப் பகுதி வரை, காக்கை முதலான பறவையினங்கள் தின்று பசியாறும்.”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“உங்கள் உலகத்தில் துரோகங்களும் தண்டனைகளும் உண்டா?...”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“தேனடையில் தேனீக்கள் மட்டும்தான் வசிக்க முடியும். மைனாக்களுக்கு இடமில்லை.”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“சதுரங்க விதிகள் தெரியுமில்லையா நண்பனே. கறுப்புக் கட்டத்தில் இருக்கும் பிஷப் கறுப்புக் கட்டத்தில் மாத்திரம்தான் நகரவேண்டும். அதுமாதிரித்தான். நான் ஒரே நிறக் கட்டத்தில் நகர விதிக்கப்பட்டவன்.”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“பிரம்மச்சாரியை அரசனாகக் கொண்ட தேசமல்லவா இது? காமத்தை ரகசியமாகத்தான் கையாளும்.”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“சக மனிதர்களின் உணர்வுகளைச் சாப்பிடாமல் மனிதர்களால் உயிர் வாழவே முடியாது. அதிலும் கொஞ்சம் நுண் உணர்வு கொண்டவன் தன் சக மனிதன் என்றால் போதும், புரதம் மிகுந்த சாப்பாடு அது.”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“நெருக்கடியில் இருக்கும் மனத்துக்குத் தெரியும், முடிவற்றுத் தொடரும் அந்தகாரத்தில், வெளிச்சம் என்பது வெறும் குறுக்கீடு மட்டுமே என்று...”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“எதிர் நிலை இல்லாத போனால், தன்னிலையையே அறிய முடியாதவர்கள். முரண்களின் அடிப்படையில் தங்கள் அறிதல்முறையை வளர்த்துக்கொண்ட வெள்ளையர்கள். இரவும் பகலும் ஒன்றுக்கொன்று எதிர்நிலைகள் என்றுதான் அவர்களால் அறியமுடியும். ஒரே தொடர்நிலையின் இரு அங்கங்கள் அவை என்று தெரியாது அவர்களுக்கு...”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“ஒரு வேளை உணவுக்காக அலுமினியத் தட்டையும், தகரக் குவளையையும் ஏந்தி, வரிசையில் நிற்கும்போது உண்டாகும் கேவல உணர்ச்சியைச் சகித்துக்கொள்ள ஒருவனுக்குப் பெரும் தீரம் வேண்டும். உயிர்வாழ்வதன் மேல் அடங்காத ஆசை வேண்டும்.”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“தவறு கண்டுபிடிக்கப்பட்டு, தண்டனையும் அனுபவித்தபின், பரிவுக்காக மன்றாடும் குழந்தையின் முகம் போல.”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“உண்மையை நினைத்துக்கொள்ளாமல், பொய் சொல்ல முடியுமா என்ன?”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“உன்னைப்போலவே நானும் இருந்திருக்கலாம் நண்பனே. வெகுளியாகச் சிரித்துக்கொண்டு, தேசம் தேசமாகத் திரிந்துகொண்டு மனித வாடையிலிருந்து விலகி, சமூகத்தின் எதிரியாய் ஆகாமலே அதை விட்டு வெளியேறி...”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“கூண்டில் உயிர் தரித்திருப்பதைவிடவும் ஆகாயத்தில் பருந்துக்கு இரையாவதே மேல் என்று எண்ணும் சிறுபறவைபோல,”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“தன் சரீரத்தின் நுழைவாயில் வரை வந்து நின்று, உள் நுழையத் தயங்கிய மரணத்தை இரு கை நீட்டி வரவேற்று உபசரித்தவர் அவர்.”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“ருசியை மனப்பழக்கம் என்று கொள்ள வேண்டியதில்லை. அது ஒரு இயற்கை விந்நியாசமே என்று உரைத்தார். ருசி செயற்கையானது எனில், காய்களுக்கும் கனிகளுக்குமான வித்தியாசத்தை உண்டாக்குவது இயற்கையின் தொழிலாக எவ்வாறு இருக்க முடியும்”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“பஞ்சபூதங்களில் நெருப்பையும் நீரையும் உணவுத் தயாரிப்பில் நேரடியாகச் செயல்படுத்துவதன் மூலம் விலங்கினங்களுக்கும் மனித இனத்துக்குமான இடைவெளி அதிகரித்து விட்டதென்றும், இந்த ஒரே காரணத்தால் பிற ஜீவராசிகளை விடத் தான் உயர்ந்தது என்பதற்கான பிரமை மனித குலத்தின் மேல் தூசு போலப் படர்ந்துவிட்டது”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“பசிக்காதபோது விலங்கினங்கள் எதுவுமே புசிப்பதில்லை; மனித இனம் மட்டுமே எந்நேரத்திலும் உண்ணத் தயாராயிருக்கிறது”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“தன்னிச்சையாய் உதிரும் சருகுபோல, பறந்தவாறே பறவையிட்ட எச்சம்போல, இயல்பான காட்சியாய், கண்ணில் பட்டு விலகிய பாம்பும் தியானிக்கும் ஞானிபோல நின்றிருந்த ஓணானும் தனக்குள் இறுக மூடிக் கிடந்த கதவொன்றைத் திறந்துவிட்டதாக உணர்ந்தான்.”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
“பிரஜைகளைப் பொறுத்தமட்டில் அரசாங்கக் காரியங்கள் ரகசியமாகவும் மர்மமாகவும் இருப்பதுதான் நல்லது...”
― பகடையாட்டம் [Pagadaiyattam]
― பகடையாட்டம் [Pagadaiyattam]
