மணற்கேணி [Manarkeni] Quotes
மணற்கேணி [Manarkeni]
by
Yuvan Chandrasekar23 ratings, 4.30 average rating, 1 review
மணற்கேணி [Manarkeni] Quotes
Showing 1-19 of 19
“வனவாசம் முடிந்து திரும்பிவந்து ராமர் பட்டாபிஷேகம் செய்து கொள்கிறார். அவர் குழந்தையாகத் தெருவில் விளையாடிய காலங்களில் கையில் எடுத்துக் கொஞ்சிய முதியவன் அரசவைக்குள் வருகிறான். ‘அடே ராமா, திரும்பி வந்தயாடா அப்பனே’ என்று ஆதங்கமாகத் தழுவிக்கொள்கிறான். கந்தையும் கசங்கலுமாக வந்த வறியவன் அரசனை அணைத்துக் கொள்வதைப் பார்த்து சபை முகஞ்சுளிக்கிறது. ராமர் சொன்னாராம், ‘இந்தப் பெரியவர் வந்ததாகப்பட்டது, அமரராகிவிட்ட பிதா மகாராஜாவே வந்து ஆசீர்வாதம் செய்த மாதிரி சந்துஷ்டியாக இருக்கிறது’ என்று.”
― மணற்கேணி [Manarkeni]
― மணற்கேணி [Manarkeni]
“ஹோரைன்னு ஒண்ணு இருக்கு பாலு. அதைப் பொறுத்துத்தான் ஜாதகம் அமையும். எல்லார் ரத்தமும் செகப்புத்தான். அதுக்காக யார் ரத்தத்தையும் யாருக்கும் ஏத்திற முடியுமா? எத்தனை க்ரூப் இருக்கு?”
― மணற்கேணி [Manarkeni]
― மணற்கேணி [Manarkeni]
“மொத்தத்தில் நான் சொல்ல வருவது, சக மனிதர்களுடன் பழகுவதற்குப் பதில், அவர்களை வேவு பார்க்கிறவனாக சிறுகச்சிறுக மாறிவிட்டேன் என்பதுதான்.”
― மணற்கேணி [Manarkeni]
― மணற்கேணி [Manarkeni]
“மனிதச் செயல்பாடுகள் அனைத்துமே எளிமையான தர்க்கத்துக்குள் அடங்கிவிடுகின்றன என்பது எனது நம்பிக்கை.”
― மணற்கேணி [Manarkeni]
― மணற்கேணி [Manarkeni]
“அவர் சொல்லிக்கொடுத்த நூறுக்குக் குறையாத சுலோகங்களில் ‘நகரேஷு காஞ்சி நாரீஷு ரம்பா புஷ்பேஷு ஜாதி புருஷேஷு விஷ்ணு’ என்ற சுலோகமும் ஞாபகம் வந்தது.”
― மணற்கேணி [Manarkeni]
― மணற்கேணி [Manarkeni]
“ரத்தினங்களின் பெருமையே அவை அளவில் சிறிசாக இருப்பதுதானே. தோசைக் கல் அளவுக்கா இருக்கும் வைரம்?”
― மணற்கேணி [Manarkeni]
― மணற்கேணி [Manarkeni]
“தனியாகத் திரிந்தாலொழிய நாம் விரும்பும் உயரத்தை எட்ட முடியாது என்றும், எட்டாத உயரங்களைக் கனவு கண்டபடியே இருப்பவர்களுக்குத்தான் அதில் பாதியாவது சித்திக்கும்”
― மணற்கேணி [Manarkeni]
― மணற்கேணி [Manarkeni]
“சோதனைகள் தாண்டி சாதனை புரிவீர்...முன்னேர் வழியில் பின்னேர் போகும்... பாடப் பாட ராகம் மூட மூட ரோகம்... வேணுமின்னா வேரிலும் காய்க்கும், வேணாமின்னாக் கிளையிலும் காய்க்காது... நல்ல நாளிலேயே நாழிப்பால் கறக்காத பசு கன்னுக்குட்டி செத்தன்னிக்கு என்ன செய்யும்...”
― மணற்கேணி [Manarkeni]
― மணற்கேணி [Manarkeni]
“தமிழில் மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் ஸ்தனம் என்றும், நவீன கால எழுத்தாளர்கள் மார்பகம் என்றும் சற்றுத் தமிழார்வம் உள்ளவர்கள் முன்னழகு என்றும் நாசூக்காக வர்ணிப்பதைப் படித்து வளர்ந்தவன் நான்.”
― மணற்கேணி [Manarkeni]
― மணற்கேணி [Manarkeni]
“நீ வெளுத்ததெல்லாம் பால்னு நினைக்கிறே. எல்லாரையும் நம்பிடுறே. ஒரு ஆளைப் பார்த்தோம்னா, அவனுடைய உடம்பெ ஒரு கண்ணால பார்க்கணும். இன்னொரு கண் அவனெ சூசகமா அளக்கணும். அதற்கப்புறம்தான் பேச்சே. இப்பிடிக் குழந்தையா இருக்கயே. சும்ம்ம்மா புஸ்தகமாப் படிச்சுத் தள்ளினாப் போதுமா?”
― மணற்கேணி [Manarkeni]
― மணற்கேணி [Manarkeni]
“ஆனால் மஹாராஜா என்று வந்ததுக்கப்புறம் பெற்ற மகன் சிறையில் அடைப்பது சகஜம்தானே என்று எனக்குப் பட்டது.”
― மணற்கேணி [Manarkeni]
― மணற்கேணி [Manarkeni]
“இந்தியாவின் தேசியப் பூச்சி என்று ஒன்றை நியமித்தால், கொசுவுக்கும் ஈக்கும் பெரும் போட்டி நிலவும் என்று தோன்றுகிறது.”
― மணற்கேணி [Manarkeni]
― மணற்கேணி [Manarkeni]
“பொருந்தாக் காலத்தில் வந்து பிறந்து விட்டேன். பாரதி காலத்தில் ரயில் முன்பதிவுக்கு இவ்வளவு வரிசை நின்றிருக்குமா? அல்லது அக்பர் காலத்திய வழிபட்டு ஸ்தலத்தில் குண்டுவெடித்து அப்பாவிகள் சாக நேர்ந்திருக்குமா?”
― மணற்கேணி [Manarkeni]
― மணற்கேணி [Manarkeni]
“அவளுக்கு நேர்ந்ததைப் பார்வையாளர்கள் தங்கள் யூகத்தில் கிட்டத்தட்டப் பூர்த்தி செய்துகொண்ட தருணத்தில் கதாநாயகன் வந்து சேர்வான்.”
― மணற்கேணி [Manarkeni]
― மணற்கேணி [Manarkeni]
“எட்டடி பாய்கிற தாய்க்கு பதினாறாடி பாய்கிற குட்டி பிறக்கத்தானே செய்யும்”
― மணற்கேணி [Manarkeni]
― மணற்கேணி [Manarkeni]
“இந்தக் கடிதம் கண்டதும் தந்திபோல் பதில் வரவும்”
― மணற்கேணி [Manarkeni]
― மணற்கேணி [Manarkeni]
“சனியன் ஊர் ஊராப் போறதில்லையா, என்னத்தையோ கத்துண்டு வந்திருக்கு.”
― மணற்கேணி [Manarkeni]
― மணற்கேணி [Manarkeni]
“பாம்பு கடிக்கணுமுண்டா சென்ம சாபம் இருக்கணும். சும்மா போறவுக வாரவுகளையெல்லாம் கடிக்கிறதுக்கு அதென்னா மனுசப் பெறவியா?”
― மணற்கேணி [Manarkeni]
― மணற்கேணி [Manarkeni]
“லோகத்துலே முழுக்க நல்லவாளும் இல்லே, முழுக்கக் கெட்டவாளும் இல்லே.”
― மணற்கேணி [Manarkeni]
― மணற்கேணி [Manarkeni]
