நீர்ப்பறவைகளின் தியானம் [Neerparavaigalin Dhyanam] Quotes
நீர்ப்பறவைகளின் தியானம் [Neerparavaigalin Dhyanam]
by
Yuvan Chandrasekar6 ratings, 4.50 average rating, 1 review
நீர்ப்பறவைகளின் தியானம் [Neerparavaigalin Dhyanam] Quotes
Showing 1-3 of 3
“முந்தின நாள் இரவில் சில உற்பாதங்கள் தோன்றின. வெகுநாட்களாக ஆகாயத்தில் உலவி வந்த வால்நட்சத்திரம் சடாரென்று உதிர்ந்தது. பார்வையற்ற காக்கை ஒன்று குடிலின் வாசலில் ஓயாமல் பிலாக்கணம் வைத்தது. அதை விரட்டியடிக்கும் விதமாக நாலைந்து கோட்டான்கள் விடாமல் அலறின. இரவு முழுவதும் மார்கழி மாதத்துக்கு சம்பந்தமேயற்ற வெக்கை நிலவியது. குடிலின் மூலையில் இருந்த எண்ணெய் விளக்கின் அருகே கொடியில் காய்ந்த வஸ்திரமொன்று காற்றுக்கு அசைந்து தீப்பற்றியது. இரவுச் சாப்பாட்டுக்காக அரண்மனையிலிருந்து வந்திருந்த அன்னத்தில் பல்லி விழுந்து இறந்து கிடந்தது. குடிலின் உத்தரத்தில் புதிதாகக் குடி வந்திருந்த மரப்பல்லி இரவு முழுவதும் துர்ச்சொல் உதிர்த்த வண்ணமிருந்தது. சிற்பி கைமறதியாய் வெற்றிலையில் தடவிய சுண்ணாம்பு அபரிமிதமாக அளவு கூடி வாய் வெந்து போயிற்று.”
― நீர்ப்பறவைகளின் தியானம் [Neerparavaigalin Dhyanam]
― நீர்ப்பறவைகளின் தியானம் [Neerparavaigalin Dhyanam]
“ஆண் மனம் மட்டும் ரகசியங்கள் அற்றதா என்ன? அல்லது, சொல்லப்படுவது மாதிரி, தைரியம் மட்டுமே நிரம்பியதா?”
― நீர்ப்பறவைகளின் தியானம் [Neerparavaigalin Dhyanam]
― நீர்ப்பறவைகளின் தியானம் [Neerparavaigalin Dhyanam]
“நல்லா இரு’ன்னு வாழ்த்துவானா, ‘நாசமாப் போகாமெ இரு’ன்னு வாழ்த்துறதா? சேந்து இருக்கட்டும்ன்னு வாழ்த்துறதுதானே? பிரியாம இருக்கணுமாம். கரிநாக்குப் பய. ஞாபகம் வருதாடா, சிலப்பதிகாரம்?...”
― நீர்ப்பறவைகளின் தியானம் [Neerparavaigalin Dhyanam]
― நீர்ப்பறவைகளின் தியானம் [Neerparavaigalin Dhyanam]