Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following S. Ramakrishnan.

S. Ramakrishnan S. Ramakrishnan > Quotes

 

 (?)
Quotes are added by the Goodreads community and are not verified by Goodreads. (Learn more)
Showing 1-30 of 53
“வெற்றி பெற்றவனை விட தோற்றவனிடம் தான் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் போல் இருக்கிறது .. காரணம் - வெற்றி விளையாட்டை பெருமை கொள்ள செய்கிறது, தோல்வி விளையாட்டை புரிந்துகொள்ள செய்கிறது.. எல்லா விளையாட்டு வீரர்களும் ஒரு முறையாவது தோற்றவர்கள்தானே ..”
S.Ramakrishnan
“ உலகம் முழுவதும் வீடுகள் இருக்கின்றன. எல்லா வீடுகளிலும் ஜன்னல்கள் இருக்கின்றன. எல்லா ஜன்னலுக்கு பின்னும் ஒரு சிறுவனோ சிறுமியோ உலகை வியப்பு கலையாமல் பார்த்து கொண்டேயிருக்கிறார்கள் ” - (ஜன்னல் வழியான உலகு)”
S.Ramakrishnan
“இது நாள் வரை நகரையும் பாண்டவர்களையும் பற்றிப் பீடித்திருந்த ஆசைதான் நாய் உருவம் கொண்டு அவர்கள் மின் வந்திருக்கிறது என்பதைக் கண்டான். சதா விழிப்புற்றபடி அலைந்து கொண்டிருக்கும் வேட்கையென்னும் அந்த நாய் உருவினைக் கண்டபடியிருந்த அவனும் பிறகு தன் கண்களை மூடிக் கொண்டு விட்டான்.”
S. Ramakrishnan, உப பாண்டவம் [Uba pandavam]
“நான் திகைப்புற்று கண் திறந்தபோது படகு நதியில் போய்க் கொண்டிருந்தது. அஸ்தினாபுரத்திற்கு என்னை கூட்டிச்செல்ல ஏற்றி கொண்ட மனிதன் துடுப்பிட்டவாறே இருந்தான். அவன் இப்பொழுது வாலிபனை போல தோற்றம் கொண்டிருந்தான். எனக்கு தடுமாற்றமாய் இருந்தது.

"நீ கிருஷ்ண துவைபான வியாஸனா?"

ஆம் என்று தலையசைத்தான். அப்பொழுது தான் கவனித்தேன். படகை நதி கரைக்கு செலுத்தாமல் நதியின் திசையில் செலுத்திக்கொண்டிருக்கிறான் என. நாங்கள் நதிவழியில் வெகு தூரம் வந்துவிட்டோம். எதுவும் திட்டமாக அறிந்துக்கொள்ள முடியவில்லை. அவனிடம் நான் கேட்டேன்,

"நாம் எங்கே செல்கிறோம்?"

"துவக்கத்திற்கு".

இதன் துவக்கத்திற்கு என்றோ, அது எங்கிருக்கிறது என்றோ, அவன் சொல்லவோ நான் கேட்கவோ இல்லை. நதி செல்லும் திசையிலேயே படகு சென்றுக்கொண்டிருந்தது.”
S. Ramakrishnan, உப பாண்டவம் [Uba pandavam]
“உலகம் எண்ணிக்கையற்ற கதவுகள் கொண்டது.”
S. Ramakrishnan, ஆதலினால் [Aadhalinaal]
“யானையைப் பார்த்து வியப்படைவர்களில் ஒருவர் கூட எறும்பைப் பார்த்து வியப்படைவது கிடையாது. ஆனால் யானை எந்த அளவு வியப்பானதோ அதே அளவு எறும்பும் வியப்பானதே!”
S. Ramakrishnan, ஆதலினால் [Aadhalinaal]
“கிருஷ்ணை யாருமற்ற தன் அறையில் அழுதுகொண்டிருந்தாள். அவளுக்கு தன் புத்திரர்களை விடவும், கணவர்களை விடவும், பிரியத்திற்கு உரியவனாக கிருஷ்ணன் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியவில்லை. திரௌபதி உறவின் வரம்புகளுக்குள் கிருஷ்ணனை வைத்துக்கொள்ளவில்லை. அவன் கிருஷ்ணன். அதுவே போதுமானதாய் இருந்தது.”
S. Ramakrishnan, உப பாண்டவம் [Uba pandavam]
“நம் காலத்தில் அழகு என்பது விற்பனை தந்திரம் மட்டுமே. நிரந்தர அழகு என்ற ஒன்றை இன்று யாரும் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை. அழகு அகத்துடன் தொடர்பு கொண்டதாக இதுவரை கருதி வந்த எண்ணம் இன்று நுகர்வு பண்பாட்டால் மாற்றப்பட்டிருக்கிறது. அழகும் உன்னதமும் பிரிக்க பட்டுவிட்டன. அழகு என்பதைக் கவர்ச்சி என்ற பொருளிலே இன்று பயன்படுத்துகிறார்கள்.”
S.Ramakrishnan
“ருசி நாக்கில் படிந்தவுடன் அது நினைவாகிவிடுகிறது. நல்ல நினைவுகள் ஒரு நாளும் அழிவதேயில்லை. எத்தனை வயதானாலும் நல்ல சாப்பாட்டிற்கு ஏங்குவது அந்த நினைவால் தான்.
பசியைக் கடந்து செல்பவர்களின் கைகளுக்குத் தான் ருசி சாத்தியப்படும் போலும்.”
S. Ramakrishnan, கர்னலின் நாற்காலி
“பழந்தமிழ் ஆய்வாளர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, ‘‘இன்றைய ஜெராக்ஸ் எனும் நகலெடுப்பு போல, இருநூறு வருடங்களுக்கு முன்பாக, ஒரு ஏட்டிலிருந்து நகல் எடுத்து இன்னொரு ஏட்டில் எழுதித் தருவதற்கென்று ஆட்கள் இருந்தார்கள். அவர்கள் வசித்த தெருவுக்கு எழுத்துக்காரத் தெரு என்று பெயர். அப்படி நகல் எடுத்து எழுதுபவர், தான் பிரதி எடுத்த ஏட்டின் கடைசிப் பாடலுக்குக் கீழே தனது முத்திரையாக, தனது பணியானது தமிழுக்குத் தொண்டு செய்யும் அடியார்க்கு செய்யும் சிறு ஊழியம் என்று ஒப்பமிட்டு, அதன் கீழே தனது பெயரையும், ஊரையும் தெரிவிக்கும் முறை இருந்தது’’ என்றார்.”
s.ramakrishnan, தேசாந்திரி [Desandri]
“காட்டு நெருப்பைப் போலிருந்தாள் மாதிரி. அவள் மத்ர நாட்டுப் பெண்களைப் போலவே தன் பூப்பின் காலத்தில் அடி எடுத்து வைத்தே இச்சைகளின் அரும்புகள் உடலில் மொக்கு விடுவதை அறிந்திருந்தாள்.”
S. Ramakrishnan, உப பாண்டவம் [Uba pandavam]
“மண்புழுக்கள்கூட தன் உடலை இழுத்து இழுத்துக்கொண்டு ஓர் இடம்விட்டு மற்றோர் இடம் ஊர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. மனிதர்கள் மட்டும்தான், தன் இருப்பிடத்துக்கு வெளியே உலகம் இல்லை என்று நினைக்கிறார்கள்.”
s.ramakrishnan, Maraikkappatta India
“உலகில் மாறாத இயக்கங்களில் ஒன்று எறும்பின் அலைச்சல்.”
S. Ramakrishnan, ஆதலினால் [Aadhalinaal]
“வேம்பின் காற்று எங்கிருந்தோ மழையைக் கொண்டுவந்தது. வேம்புதான் அவர்களைக் காப்பாற்றியது.
வேப்பங்காற்றின் சிலுசிலுப்பால் மழை கரிசல் பூமியில் இறங்கியது. அந்த நன்றியை மறக்காமல் தானோ என்னவோ வேம்பில்லாத கரிசல் கிராமங்களேயில்லை. ஊருக்கு நூறு மரங்களுக்கும் மேலிருந்தன.
வேம்புதான் கரிசலின் அடையாளம். வேம்பில்லாத ஊர்களே இல்லை. வெக்கையில் அம்மை உடல் கொப்பளிக்கும் போது வேம்புதான் மருந்தாகிறது. வேம்பைத் தாய் என்று கருதினார்கள். வேம்பின் கொழுந்தைப் பிடுங்கி வாயிலிட்டு அதன் கசப்பை ருசித்து வளர்ந்தவர்கள் என்பதாலே வாழ்வின் கஷ்டங்களை, கசப்பான அனுபவங்களை அவர்கள் இயல்பாகவே ஏற்றுக் கொண்டார்கள்.”
S. Ramakrishnan, சஞ்சாரம் [Sancharam]
“சிலசமயம் நாதஸ்வரம் இசைத்துக் கொண்டிருக்கும்போது அவனுக்கு ஈரவேஷ்டி காற்றில் உலர்வதுபோல மனது மெல்ல எடையற்றுப்போவதை உணர்ந்திருக்கிறான். சிலசமயம் குளத்தில் மூழ்கிச் சென்று தரைமண் எடுப்பதுபோல மூச்சுத் திணறச்செய்வதாக இருக்கும். சில நேரம் உடல் எங்கும் கண்கள் முளைத்துவிட்டது போலவும் தோன்றும்.
வாசிப்பில் ஆழ்ந்துவிட்டால் உடலே இல்லாமல் போய்விடுகிறது என்பதை பக்கிரி நன்றாக உணர்ந்து கொண்டிருந்தான். அந்த உணர்ச்சியை அடையும்போது ஏற்படும் ஆனந்தம் அளவில்லாதது. தன்னிடம் இருந்து வெளிப்படுவது வெறும் நாதமில்லை, அது ஒரு மணம், பூவிலிருந்து மணம் கசிவது போல மனிதர்களுக்குள்ளும் மணமிருக்கவே செய்கிறது, அதை மலரச் செய்வது, வாசனையைக் கமழவிடுவதுதான் இசையா?
ஒரு நாள் மோகனம் வாசித்துக் கொண்டிருக்கும்போது சட்டென மனதில் இறந்துபோன அம்மாவின் முகம் தோன்றி மறைவதை உணர்ந்தான். இவ்வளவு சந்தோசமான ராகத்தை வாசித்துக் கொண்டிருக்கையில் மனம் ஏன் என்றோ இறந்துபோய்விட்ட அம்மாவின் மீதான துயரத்தைப் பீறிடச் செய்கிறது. மனம் சந்தோஷத்தை முழுமையாக உணர்வதற்குத் துயரம் தேவையானது தானா. அவனுக்குப் புரியவில்லை. ஆனால் துக்கம் பாரம் ஏறுவதாகயிருந்தது.
அந்த உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவன் மோகனத்தில் சஞ்சாரம் பண்ணிக்கொண்டிருந்தான். தனது துக்கம் இசையின் வழியே கரைந்து கேட்பவர்களின் மனதை ஈரமாக்கியதை உணரந்தபடியே அவன் மோகனம் வாசித்து முடித்தான்.”
S. Ramakrishnan, சஞ்சாரம் [Sancharam]
“ஆகஸ்ட் 15-ம் தேதி அஷ்டமி என்பதால் அன்று சுதந்திரம் பெறக்கூடாது. ஆகஸ்ட் 17-ம் தேதி சுதந்திரம் பெற வேண்டும் என்று ஜோதிடர்கள், நேருவைச் சந்தித்து வலியுறுத்தினர். தனக்கு அதில் நம்பிக்கை இல்லை என்று நேரு மறுத்துவிட்டார். ஆனாலும், கடைசி வரை அஷ்டமி அன்று சுதந்திரம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து இருக்கின்றன.”
s.ramakrishnan, Maraikkappatta India
“விதையைத் துப்பி எறிவது மிகச் சுலபம். ஆனால் விதையிலிருந்து ஒரு விருட்சத்தை உண்டாக்கிக் காட்டுவது மிகப்பெரிய செயல் என்று சொல்வான்.”
S. Ramakrishnan, ஆதலினால் [Aadhalinaal]
“எல்லா வெற்றிகளும் சந்தோஷங்களும் துயரங்களும் வெறும் நினைவுகளாக மட்டுமே மிஞ்சியிருக்கிறது என்பது எவ்வளவு வேதனையானது. இவ்வளவுதானா மனித வாழ்க்கை ?”
s ramakrishnan, இடக்கை [Idakkkai ]
“தனித்துவமான குறுங்தைகள் மற்றும் சிறுகதைகளை அகஸ்டோ மான்டெரோசோ எழுதியிருக்கிறார். இவரது இன்னொரு கதையில் தவளை ஒன்று தான் தவளை தானா எனச் சந்தேகம் கொள்கிறது. இதனை உறுதிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறது. இதற்கு மற்றவர்களின் ஒப்புதல் தேவை என்பதை உணருகிறது. அவர்களைக் கவர கவர்ச்சியாக அலங்காரம் செய்து கொள்கிறது. தான் தவளை என்பதை எப்படி உணர வைப்பது என அதற்குத் தெரியவில்லை. முடிவில் தன்னையே உண்ணத் தருகிறது. அப்போது தவளைக்கால் போலவே இல்லை. மிகவும் சுவையாக இருக்கிறது என அவர்கள் புகழுகிறார்கள். தவளை தனது அங்கீகாரத்தைப் பெறுகிறது.

ஒரு தவளை ஏன் பிறரது அங்கீகாரத்திற்காக ஏங்குகிறது. அது தவளை தான் என்ற நம்பிக்கையை ஏன் இழந்து போனது. இந்தக் கேள்விகள் எழுந்தவுடன் இது தவளையைப் பற்றிய கதையில்லை என்பது புரிந்து விடுகிறது.

மனிதர்களின் பிரச்சனையைத் தவளைகளின் பிரச்சனையாக மாற்றியிருக்கிறார். அங்கீகாரத்திற்காக மனிதர்கள் மேற்கொள்ளும் எத்தனங்கள், அபத்தமான செயல்பாடுகளைக் கேலி செய்கிறார்.”
S. Ramakrishnan
“இப்படி ஒவ்வொரு நாளும் நம் வாழ்வோடு நூற்றுக் கணக்கானவர்களின் வாழ்வு பின்னப்பட்டிருக்கிறது.அவர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் ஒரு மனிதருக்குக் கூட நன்றி சொல்வதில்லை.”
S. Ramakrishnan, ஆதலினால் [Aadhalinaal]
“பங்காளதேஷ் உருவாவதற்கு ஆதரவுக் கரம் நீட்டிய இந்தியா, ஈழத் தமிழ் மக்கள் விஷயத்தில் மட்டும் கைகட்டி மௌனம் சாதிப்பதுதான் கவலைக்குரியது.”
s.ramakrishnan, Maraikkappatta India
“தொலைவிலிருந்த காட்டில் நெருப்பு பற்றிக்கொண்டு ஊர்ந்து கொண்டிருந்தது. காற்றின் வேகத்தால் அது சுழன்று சுழன்று சப்தித்து வீசியது. நெருப்பின் ஒரு கிளை தனியே பிரிந்து பீஷ்மரின் முன் வந்து நின்றது. அவர் அலைவுறும் நெருப்பினைக் கண்டார். நெருப்பு அவரிடம் கேட்டது,

‘காற்றால் நான் தொடர்ந்து அலைக்கழிக்கப்பட்டு நடுக்கமேறிக் கொண்டே இருக்கிறேன். சலனமற்ற இடத்தைக் காட்டக்கூடாதா?’

பீஷ்மர் சொன்னார்.

‘ஒரு ஸ்திரீயின் மனக் குகையில் ஆசையென பிரவேசித்து விடு. பின் உனக்கு சலனமில்லை. அழிவுமில்லை. சுடர்ந்து கொண்டேயிருப்பாய்.”
S. Ramakrishnan, உப பாண்டவம் [Uba pandavam]
“நண்பர் கேட்டார்,
“அமெரிக்காவிலிருந்து அங்குப் போய்ச்சேர எவ்வளவு நாட்களானது”
ஜோன்ஸ் சொன்னார்,
“இங்கிருந்து சான்டரெம் வரை ஒன்பது மணி நேர விமான பயணம். பின்பு அங்கேயிருந்து படகில் ஆறு மணி நேரப்பயணம். ஒரு படித்துறையில் இறங்கி அங்கே ஜீப்பினை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தேவையான பொருட்களுடன் இன்னொரு ஐந்து மணி நேர பயணம். ஜகீராசிங்கா என்ற இடத்தில் பழங்குடிகள் வசிக்கிறார்கள். அங்கே போவதற்குப் பழங்குடி மக்களில் எவரேனும் நம்மைக் காட்டினுள் அழைத்துப் போக வேண்டும். அது வரை ஒரு பாலத்தில் காத்திருக்க வேண்டும்”
“எவ்வளவு நேரம்” எனக்கேட்டார் நண்பர்
“சில நாட்கள் அல்லது சில வருஷங்கள்” என்று அமைதியாகச் சொன்னார் ஜோன்ஸ்.
“பழங்குடி மக்கள் அழைத்துப் போக ஒத்துக் கொண்டுவிட்டால் எவ்வளவு நேரம் காட்டினுள் பயணிக்க வேண்டும்” எனக்கேட்டார் அந்த நண்பர்.
“அது மழையின் கையில் இருக்கிறது. மழை நம்மை அனுமதித்தால் இரண்டு நாட்களில் காட்டினுள் போய்விடலாம். அனுமதிக்காவிட்டால் வழியிலே சாக வேண்டியது தான்.”
“அவ்வளவு சிரமமா” என வருத்தப்பட்டபடியே நண்பர் கேட்டார்.
“ஜகீராசிங்காவில் எவ்வளவு காலம் ஆய்வு செய்தீர்கள்”
“பழங்குடியின் மொழியை அறிந்து கொள்ள மூன்று ஆண்டுகள். அவர்கள் மௌனத்தை அறிந்து கொள்ள முப்பது ஆண்டுகள் போதவில்லை”.
“ஏன் அவர்கள் மொழியில் காலத்தைக் குறிக்கும் சொற்கள் இல்லை”
“காலமும் எண்ணிக்கையும் அதிகாரத்தின் அடையாளம். எல்லையில்லாத ஒரே காட்டில் வேறு வேறு இடங்களில் வசிப்பது போலவே முடிவற்ற ஒரே காலம் இருப்பதாகக் கருதுகிறார்கள். காலத்தைப் பிரிக்காவிட்டால் நம் இருப்பு தண்ணீரைப் போலாகிவிடும். தண்ணீருக்குக் கடந்தகாலமில்லை. எதிர்காலமில்லை”
S. Ramakrishnan, கர்னலின் நாற்காலி
“காடு அழியும்போது கொள்ளும் ரௌத்திரம் மிகவும் வலிமையானது.”
S. Ramakrishnan, யாமம் [Yamam]
tags: fire, rage
“உலகை முழுமையாக நேசிப்பவன் அசடனாகவே கருதப்படுவான் என்று சொல்லும் தஸ்தாயெவ்ஸ்கி, தன்னை அறிந்தவன் மற்றவர்களின் பரிகாசத்தை ஒரு போதும் கண்டுகொள்வதில்லை என்றும் விளக்கிகாட்டுகிறார்.”
S. Ramakrishnan
“யாருமில்லை என்ற வெற்று வெளியில் தனித்த பீஷ்மரின் முன்பாக காற்று சுற்றி அலைந்தபடி அவர் உடலின் மீதேறிச் சிகையைக் கலைத்தது. அவர் காற்றின் மிருதுவை அறிந்தவராக அதன் நெருக்கத்தோடு எதையோ பேச முற்பட்டவரைப் போல கேட்டார்.

‘நீ எதைக் கேட்க விரும்புகிறாய் காற்றே?’

காற்று அந்த மனிதனை வலம் சுற்றியபடியே கேட்டது.

‘இத்தனை அலைக்கழிப்பும் வேகமும் கொண்ட என் இயல்பு எப்போதுதான் சாந்தி கொள்ளும்…’

காற்றின் கேள்வியை அறிந்த அவர் மனம் விழித்துக்கொண்டபடியே பதில் தந்தது.

‘காற்று என்பது கரைகளற்ற நதி, நீ ஓடிக்கொண்டேயிருக்கிறாய். உனது கண்கள்தான் உலகியலின் ரகசிய ஈர்ப்பு. உன் இயக்கத்தின் சூட்சும தாதுக்கள்தான் இயக்கத்தின் உயிர்ச்சத்தாகின்றன. நீ ஒரு சாட்சியாகின்றாய். கடந்து போனவைகளின் நடப்பின் எதிர் நாட்களின் சாட்சியாகிறாய். முடிவற்ற சுழல் நதியான உனக்கு இயக்கமே சாந்தி. அலைக்கழிப்பே அமைதி. காற்றே.. நீ அலைய விதிக்கப்பட்டவன். துயரவான்.’

அவர் குரலின் மிருதுவையும் தன்னில் ஏந்தியபடி காற்று தனது துக்கத்தினை அவிழவிட்டபடி கடந்து போய்க் கொண்டே இருந்தது.”
S. Ramakrishnan, உப பாண்டவம் [Uba pandavam]
“மனிதர்கள் இயற்கையைப் புரிந்துகொள்ள தவறியதோடு இயற்கையிடமிருந்து கற்றுக்கொள்ளவும் தவறியிருக்கிறார்கள்.”
S. Ramakrishnan, ஆதலினால் [Aadhalinaal]
“நம்மை இந்தப் பிரபஞ்சத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவர் ஏதோ ஒரு மருத்துவச்சியோ அல்லது பெண் மருத்துவரோதான். நம் உடலில் அவரது விரல்களின் ஸ்பரிசம் கண்ணுக்குத் தெரியாமல் படிந்திருக்கிறது.”
S. Ramakrishnan, ஆதலினால் [Aadhalinaal]
“நம் எல்லோரின் மனதிலும் பால்ய வயதின் ஏதோவொரு புகைப்படம் அழிவற்று தொங்கிக் கொண்டிருக்கிறது. அந்தப் புகைப்படத்துடன் ரகசியமாக உரையாடுகிறோம். எதிர்காலக் கனவுகளைப் பகிர்ந்து கொள்கிறோம். சோர்வடையும் போது உத்வேகம் கொள்கிறோம்.
சிரிப்பை மறந்த சிறார்களின் புகைப்படங்கள் இந்த உலகிற்கு எதையோ சொல்கின்றன. புகைப்படத்தின் எடை என்பது அதிலிருக்கும் சந்தோஷத்தின் பொருட்டே அமைகிறது என்கிறார்கள்.
புகைப்படம் நம்மோடு பேசும் மொழி நாம் மட்டுமே அறிந்தது. ரகசியமானது. ஆறுதல் தரக்கூடியது.
உலகம் அதைப் பொருட்படுத்துவதேயில்லை.”
S. Ramakrishnan, கர்னலின் நாற்காலி
“ஒருவகையில், புத்தகங்களை வைக்க இடமில்லாத நெருக்கடிதான் புத்தகம் படிப்பதைக் காப்பாற்றி வைத்திருக்கிறது என்பேன். வீட்டில் மிகப் பெரிய நாலகங்களை அமைத்தவர்கள் அதன்பிறகு படிப்பதையே விட்ட கதையை நான் அறிவேன். நெருக்கடியான இடத்திற்குள் மறைத்தும் ஒளித்தும் சண்டையிட்டும் சேகரிக்கப்பட்ட புத்தகங்களே நம்மை மறுபடி வாசிக்கத் தூண்டுகின்றன.”
S. Ramakrishnan, இன்றில்லை எனினும் [Indrillai Eninum]

« previous 1
All Quotes | Add A Quote