Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following லக்ஷ்மி சரவணகுமார்.
Showing 1-15 of 15
“ஒவ்வொரு மனிதரோடும் நாம் ஏற்படுத்திக் கொள்ளும் இடைவெளிதான் ஒருவேளை முதுமையா?”
― ரூஹ் [Rooh]
― ரூஹ் [Rooh]
“தேவையின் போது கடந்த காலத்தைய தவறுகளில் இருந்து தன்னைத் திருத்திக் கொண்டு ஒரு மனிதன் வாழ்வை நெறிப்படுத்துவதற்கு பெயர் அனுபவமென்றால், அன்வர் இப்பொழுது அனுபவசாலி.”
― ரூஹ் [Rooh]
― ரூஹ் [Rooh]
“பாதுகாப்பு முக்கியமெனில், கரையில் நில் பொக்கிஷம் வேண்டுமென்றால், கடலுக்குள் செல்.” - சூஃபி கவிஞர் சா’அதி.”
― ரூஹ் [Rooh]
― ரூஹ் [Rooh]
“ஒரு மனிதன் வாழ்ந்து கொண்டிருப்பதை விடவும் இச்சமூகத்திற்கு அவன் சொல்வதற்கென செய்திகளொன்றும் இல்லை.”
― உப்பு நாய்கள் [Uppu Naigal]
― உப்பு நாய்கள் [Uppu Naigal]
“அறிந்த எல்லாவற்றிலிருந்தும் துண்டித்துக் கொண்ட பிறகான மனிதர்களை மனம் பிறழ்ந்தவர்கள் என்று சொல்வது எப்படி சரியாகும்?”
― ரூஹ் [Rooh]
― ரூஹ் [Rooh]
“அள்ளிக்குடிக்க முடியுமென்பதற்காக மனிதன் கடலைக் குடித்துவிடத் துடிப்பது பேதமை.”
― ரூஹ் [Rooh]
― ரூஹ் [Rooh]
“தனது இடத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஒருவன் எதையும் செய்வான். அதிகாரமில்லாத மனிதன், அரை மனிதன். குன்றா வன்மமும் குரூரமும் மட்டும் அதிகாரத்தை நிலைநிறுத்திவிடாது. நயவஞ்சகமும் சூதும் பழக வேண்டும்.”
― உப்பு நாய்கள் [Uppu Naigal]
― உப்பு நாய்கள் [Uppu Naigal]
“நாம் யாராய் இருக்கிறோமென்பது நமது விருப்பத்திலும் இயல்பிலும் இருக்கிறது. தேவைகள் இதைத் தீர்மானிக்கத் துவங்குகிற நாளில் நாம் தொலைப்பது தன்மானத்தையல்ல, ஒரே ஒரு துளி சுயநேர்மையை. மனிதன் குறைந்தபட்ச சந்தோசத்தோடேனும் வாழவேண்டுமாயின் பாதுகாக்க வேண்டியது ஒன்று மட்டுந்தான். இருப்பதிலேயே எளிதாகக் கிடைக்கக் கூடியதும் அது ஒன்றுதான், சுயநேர்மை. நான் யாரைவிடவும் மேலானவனுமில்லை, கீழானவனுமில்லை. ஆனால் யாரைவிடவும் சுயநேர்மை கொண்டவன். ஏதோவொரு கனத்தில் மற்றவர்களை ஏமாற்றியிருக்கலாம். ஒருபோதும் என்னை ஏமாற்றிக் கொண்டிருந்ததில்லை”
― கொமோரா [Gomorrah]
― கொமோரா [Gomorrah]
“சாலைகள் மனிதர்களைக் கைவிடுவதில்லை. ஒதுங்குவதற்கான நிழலை மட்டுமல்ல, எல்லாத் திசையிலும் ஒரு மனிதனுக்கான கதவுகள் அடைக்கப்பட்ட பின்னாலும்கூட நம்பிக்கையோடு தேர்ந்தேடுக்கும் ஏதாவதொரு சாலையின் பயணம் வாழ்வை மாற்றப் போதுமானதாய் மாறிவிடுகிறது.”
― கொமோரா [Gomorrah]
― கொமோரா [Gomorrah]
“ஒவ்வொரு பொருளும் தன் ஸ்திதியிலேயே இருக்கவே ஆசைப்படுகிறது. ஒரு கல் எப்போதும் கல்லாகவேயிருக்க விரும்புகிறது. புலி, தானொரு புலியாயிருக்கவே ஆசைப்படுகிறது.’ - ஸ்பினோசா”
― உப்பு நாய்கள் [Uppu Naigal]
― உப்பு நாய்கள் [Uppu Naigal]
“வெறுப்பதை விடவும் ஒருவரை நேசித்தல் எளிது, தன்னால் நேசிக்கவே முடியாதென மனம் சொல்லும் போது அமைதியாக ஒதுங்கிச் செல்லுதல் அதனினும் எளிது.”
― ரூஹ் [Rooh]
― ரூஹ் [Rooh]
“பசியும் வறுமையும் தேவைகளும் தான் மனிதர்களை சக மனிதர்களோடு மிக எளிதில் பிணைத்துவிடுகிறது.”
― ரூஹ் [Rooh]
― ரூஹ் [Rooh]
“அவனுடைய ( மனிதன் ) பிடரி நரம்பை விடவும் நாம் ( இறைவன் ) அவனுக்கு நெருக்கமாய் இருக்கிறோம்.”
― ரூஹ் [Rooh]
― ரூஹ் [Rooh]
“ஏன் யாரென்று தெரியாத மனிதனை வெறுக்க வேண்டும்?”
― ரூஹ் [Rooh]
― ரூஹ் [Rooh]
“மன்னிக்கத் தகுதியற்ற மனிதர்களை சகித்துக்கொண்டு வாழ்வது மாதிரியான மன அவஸ்த்தியில் புழங்கிச் சாகத்தேவையில்லை என்னும் எண்ணமே அவனை முழுமையானவனாய் உணரச் செய்தது.”
― கொமோரா [Gomorrah]
― கொமோரா [Gomorrah]

![ரூஹ் [Rooh] ரூஹ் [Rooh]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1573231752l/48733450._SX98_.jpg)
![கொமோரா [Gomorrah] கொமோரா [Gomorrah]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1515862656l/37926837._SX98_.jpg)

![கானகன் [Kaanagan] கானகன் [Kaanagan]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1567870688l/50923234._SX98_SY160_.jpg)