Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following Vannanilavan.
Showing 1-12 of 12
“மனிதர்களுக்கு அன்பு என்கிற பெரிய வஸ்து அளிக்கப்பட்டிருக்கிறது. மனிதனை நெருங்குகிறதுக்கு எவ்விதத் தடையுமில்லை. எவ்வளவோ இழந்தாலும் பெறுகிறதற்கும் ஏதாவது இருந்துகொண்டேதான் இருக்கிறதென்று நினைக்கிறேன். ஸ்ரீ சுந்தர ராமசாமி சொன்னது மாதிரி, 'எதையாவது இழந்துதான் எதையாவது பெறுகிறோம்' என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப்படுகிறது.”
― கடல்புரத்தில்
― கடல்புரத்தில்
“அபிப்பிராயங்கள் என்பது நாமே உணர்ந்து, அறிந்து ஏற்படுத்திக் கொள்வது மட்டுமல்ல. நாம் நெருங்கிப் பழகும் மனிதர்களாலும் நமது அபிப்பிராயங்கள் அல்லது ‘இமேஜ்’ உருவாக்கப்படுகின்றன.”
― மறக்க முடியாத மனிதர்கள்: தொகுதி - 2
― மறக்க முடியாத மனிதர்கள்: தொகுதி - 2
“ஸ்நேகிதம் என்றால் அது அவ்வளவு பெரியது. அதற்கு வயசு என்ற ஒன்று உண்டா என்ன?”
― கடல்புரத்தில்
― கடல்புரத்தில்
“கடல் இரைச்சல் 'சோ'வென்று மழை பெய்கிறது மாதிரி கேட்டுக்கொண்டிருந்தது. அந்தச் சத்தத்திலேதான் பிறந்தார்கள்; வளர்ந்தார்கள்; செத்துப்போனார்கள். கடல் அம்மை அவர்கள் வழிபடுகிற மரியாளுக்கும் சேசுவுக்கும் சமம்”
― கடல்புரத்தில்
― கடல்புரத்தில்
“எவ்வளவுதான் துயரமான சம்பவங்கள் நடந்தாலும் அதையே நினைத்துக் கொண்டிருக்க முடியுமா என்ன? அடுத்தடுத்து நிகழ்வதற்காக எவ்வளவோ விஷயங்கள் காத்திருக்கின்றன.”
― கம்பா நதி: நாவல்
― கம்பா நதி: நாவல்
“மழையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மழைக்குள் பேச எதுவுமே இல்லை. யாரும் மழை பெய்கிறபோது பேசுகிறதே இல்லை. மழை பெய்கிற சத்தம் எல்லோரையும் பேசவிடாமல் அடக்கிவிடுகிறது. கோமதியும் தான் அவனிடம் புதிதாக என்ன பேசிவிடப் போகிறாள். ஏற்கனவே பேசினது போலத்தான் இனிமேலும் கூட எப்போதும் பேசமுடியும்.. ‘நான் உன்னைப் பார்க்க வேண்டும். பார்வை அயர்ச்சி தரவில்லை. மீண்டும், மீண்டும் நான் சந்திக்கும் அன்றாடக் காரியங்களும், அல்பமான தின அலுவல்களும் இமைப்பொழுதில் என்னை சலிப்பிற்கு இட்டுச் சென்றுவிடுகின்றன. எதுவும் புதிய ஒளியைத்தர முயற்சிக்கவில்லை. ஆனாலும் பேசுவதிலும் நான் கேட்பதிலும் என்ன இருக்கிறது. அடிக்கடி சந்தித்துக் கொள்வோம். அமைதியாகச் சந்தித்துக்கொள்வது பற்றி நான் உனக்குச் சொல்லித்தர முடியும். இதெல்லாம் யாரும் உன் வீட்டிலும், என் வீட்டிலும் விரும்புவதில்லை. நீண்ட பெருமூச்சுக்களை விட்டுக்கொண்டு உன்னை இமைக்காமல் பார்த்தால் என் துன்பங்களை மறக்கமுடிகிறது. இது தவிர, இந்த சின்ன வயசில் படும் துன்பத்தை மாற்ற வேறு வழி தெரியவில்லை.”
― கம்பாநதி
― கம்பாநதி
“நல்லவேளையாக மனித வாழ்க்கை அசையாத ஒன்றாக இல்லை. எப்படியோ ஆச்சரியப்படுகிற விதமாய் அது நகரத் தெரிந்து வைத்திருக்கிறது. இது ஒரு பெரிய விஷயம்தான்.”
― கம்பா நதி: நாவல்
― கம்பா நதி: நாவல்
“கடலிலிருந்து கூட்டங்கூட்டமாக மேகங்கள் மேற்கே சென்றுகொண்டிருந்தன. யாரோ எய்த வர்ண அம்பைப் போல வானவில் மேகங்களைக் கிழித்துப் புறப்பட்டிருந்தது.”
― கடல்புரத்தில்
― கடல்புரத்தில்
“அந்தக் கடல் ரஞ்சியைப் போல, தரகனாரைப்போல, வாத்தியைப் போல் வெகு அபூர்வமானது. அது தன் எழுச்சி மிக்க அலைகளால் எல்லோருக்கும் தன்னுடைய ஆசீர்வாதத்தைச் சொல்லுகிறது. அந்த ஆரவாரத்தில் மகிழ்ச்சியைத் தவிர வேறு ஒன்றுமில்லை.”
― கடல்புரத்தில்
― கடல்புரத்தில்
“கண்களுக்கு முதுமையே வராதா? இவ்வளவு”
― எஸ்தர்: சிறுகதை (1974)
― எஸ்தர்: சிறுகதை (1974)
“சீட்டு விளையாட்டில் பேச்சு என்பது ஒரு விசித்திரமான அம்சம். விளையாட்டுக்கு நடுவே பேசுகிறவன் அக்கறையோடு பேசுகிறானா, கேட்கிறவன் அக்கறையோடு கேட்கிறானா, என்பதை யாராலும் முடிவு செய்யவே முடியாது.”
― கம்பா நதி: நாவல்
― கம்பா நதி: நாவல்
“மழைக்குள் பேச எதுவுமே இல்லை. யாரும் மழை பெய்கிறபோது பேசுகிறதே இல்லை. மழை பெய்கிற சத்தம் எல்லோரையும் பேசவிடாமல் அடக்கி விடுகிறது.”
― கம்பா நதி: நாவல்
― கம்பா நதி: நாவல்


![ரெயினீஸ் ஐயர் தெரு [Reinees Iyer Theru] ரெயினீஸ் ஐயர் தெரு [Reinees Iyer Theru]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1480652233l/33224446._SX98_.jpg)

