Goodreads helps you follow your favorite authors. Be the first to learn about new releases!
Start by following தொ. பரமசிவன்.
Showing 1-30 of 110
“ஆண்டாளின் நாச்சியார் திருமொழிப் பாடல்களே உடல்சார் இன்பத்தை வெளிப்படையாகப் பேச முற்பட்டன. ஆனால், நாட்டின் அதிகாரம் அரசனிடத்தில் இருப்பதைப்போல வீட்டின் அதிகாரத்தை ஆணின் கையில் ஒப்படைப்பதை ஏற்றுக் கொள்ளும் வகையில் பெண்ணின் உளவியல் வடிவமைக்கப்பட்டது.”
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
“வேர்களை இழந்தவர்களிடம்தான் குரூரம் அதிகமாக இருக்கும்.”
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
“பண்பாட்டுத் தளத்தில் பக்தி இயக்கம் கைக்கொண்ட வேறு சில உத்திகளையும் இங்கே கவனிக்க வேண்டும். அவற்றுள் ஒன்று, மக்கள் தொகையில் சரிபாதியான பெண்மக்களைத் தன்பக்கம் திருப்பிக்கொண்டது. ஆணாதிக்க உணர்வுடைய துறவு நெறிக்கு எதிரான பெண்களின் உணர்வுகளைக் குடும்பம் என்ற அமைப்பை முன்னிறுத்தி பக்தி இயக்கம் பயன்படுத்திக் கொண்டது.”
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
“ஒரு பேரரசு உருவாகின்றபோது அதற்குச் சார்பான தத்துவ அமைப்பொன்றும் உருவாக வேண்டும். ஆயுத பலத்தின் வழியாகப் பெற்ற அதிகாரமும் உடைமைகளும், சமூகத்தை மேல்கீழ் அடுக்குகளாகப் பிரித்து வைக்கும். பாதிக்கப்பட்ட மக்கட் சமூகம் இந்தப் பிரிவினைகளை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளுமாறு மறுதரப்பில் சமயம் சார்ந்த சிந்தனை ஒன்று சமூக உளவியலை வடிவமைத்தாக வேண்டும். சோழ அரசு ஒரு பேரரசாக உருவாகும்போது அந்தப் பணியினைத் தமிழ்நாட்டில் சைவ சமயம் திறம்படச் செய்தது என்பதனைப் பேரா.க.கைலாசபதி”
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
“இதைத்தான்”
― Manjal Mahimai
― Manjal Mahimai
“கருப்பசாமி சன்னிதியில், வழக்குகளில் சத்தியப் பிரமாணம் செய்வது வழக்கமாகவுள்ளது. இதன்படிப் பிரமாணம் செய்பவர் சத்திய வாக்கை ‘வாங்கிய பணத்தை நான் கொடுத்துவிட்டேன்’, ‘திருடப்பட்ட பொருளை நான் எடுக்கவில்லை’ என்பதுபோல சொல்லி, சந்தனக்கதவு வழியாக உள்நுழைந்து, பதினெட்டுப் படிகளையும் தாண்டிக் கோபுரவாசற் கதவு வழியாக வெளிவருதல் வேண்டும். ‘இத்தெய்வத்தின் முன் ஒருவரும் பொய் சொல்லவும் துணிய மட்டார்கள். ஆகையால் பெரிய வழக்குகள், வியாஜ்ஜியங்கள் முதலியவற்றில் உண்மையறிய, வியாஜ்ஜியக்காரர்களைக் கோர்ட்டார் கடைசி நேரத்தில்கூட இக்கருப்பணசாமி சன்னிதியில் பிரமாணம் செய்யச்சொல்லி உண்மையைக் கண்டுபிடித்துக்கொள்வார்கள்’ என்று கோயில் வரலாறு விளக்குகிறது.”
― அழகர் கோயில்
― அழகர் கோயில்
“சிறு பொருளையேனும் தானே ஆக்கிக் கொள்கிற அந்தக் கலாச்சாரம் இப்போது அடிபட்டுப் போய்விட்டது.”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“விழாக்களம் என்பதன் முன்னால் புதிய மணலைப் பரப்புவதாகும். ‘தருமணல் ஞெமிரிய திருநகர் முற்றம்’ என்று நெடுநல்வாடை இந்த வழக்கத்தைக்”
― Manjal Mahimai
― Manjal Mahimai
“ஈஸ்வரனது இருப்பை மறுத்துவிட்ட காரணத்தால் சமண - பௌத்தர்கள் கழுவாயினை உலகியலுக்கு உரியதாக ஆக்கி வைத்திருந்தனர். ஆனால் அதைத்”
― Ithuvae Sananaayagam
― Ithuvae Sananaayagam
“அறிவு என்பது எழுத்து மூலம் சார்ந்ததாகக் கருதக் கூடாது. அப்படிக் கருத வைத்தது ஐரோப்பிய மெய்காண் முறைமை. அதனால்தான் ஐரோப்பியர், எழுதத் தெரியாதவனெல்லாம் முட்டாள் என்று சொன்னார்கள். எழுதத் தெரியாத நம்”
― Manjal Mahimai
― Manjal Mahimai
“சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்கு இருந்த இடமே விசித்திரம். 1857-ல் தொடங்கிய பல்கலைக்கழகத்தில் 1914 வரைக்கும் தமிழ் பாடத்திட்டக் குழுவே கிடையாது. முதன்முதலாகத் தமிழில் பாடம் வந்ததும் 1929-ல்தான். ஆக ஒரு”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“சமணக் கோயில்களையும் பௌத்தக் கோயில்களையும் வைணவர் கைப்பற்றும் போது முதலில் நரசிங்கமூர்த்தியை அமைப்பது வழக்கம்”
―
―
“பாயசம் வழங்கப்படுவதுகூட சங்க கால உணவு மரபின்
தொடர்ச்சிதான். அதனை ‘உளுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை’ என்று சங்க இலக்கியம் குறிப்பிடும்.”
― Manjal Mahimai
தொடர்ச்சிதான். அதனை ‘உளுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவை’ என்று சங்க இலக்கியம் குறிப்பிடும்.”
― Manjal Mahimai
“பால் பலவூறுக பகடு பல சிறக்க’ என்ற ஐங்குறு நூற்றின் வாழ்த்துப் பாடலை வாசித்துக்கொண்டிருக்கும் நள்ளிரவுப் பொழுதில் இராப்பாடி அந்த வாழ்த்தினைப் ‘பட்டி பெருக பால்பானை பொங்க’ என்று தன்னுடைய மொழியில் தெருவெல்லாம் வழங்கிக்கொண்டு போகிறான்.”
― Manjal Mahimai
― Manjal Mahimai
“பூசுமஞ்சளில் புகழ் பெற்றது ‘விறலி
மஞ்சள்’ ஆகும். விறல் என்றால் முகம். விறலி என்றால் முகபாவங்கள் காட்டி நடிக்கிற நடனமாடுகிற பெண்ணைக் குறிக்கும். அன்று கூத்தாடிப் பெண்கள் அன்றைய விளக்கொளியில் நாட்டியமாடினர். அவர்களது முகம் துடிப்பாகத் தெரிய மஞ்சள் அரைத்து முகத்தில் பூசிக்கொண்டனர். விறலியர் மட்டும் பூசிய மஞ்சளைக் காலப்போக்கில் குடும்பப் பெண்களும் பூசத் தொடங்கினர். விறலியரை மதியாத நம் சமூகம் விறலி மஞ்சளை மட்டும் கொண்டாடத் தொடங்கியது; இன்றும் கொண்டாடி வருகிறது. விறலி மலை என்பதுதான் இன்று விராலிமலை என்று ஆனது என்பது கூடுதல் செய்தியாகும்.”

“என்பது, வேர்களுக்குத் தரும் மரியாதை ஆகும். கண்ணுக்குப் புலப்படாத வேர்களே உயிர்க்கூட்டத்தைத் தாங்கிப் பிடித்துக்கொண்டிருக்கின்றன. வெட்டுப்பட்ட”
― Manjal Mahimai
― Manjal Mahimai
“வேர்களைப்பற்றிய அறிவு என்பது, விஞ்ஞானத்தின் ஒரு பகுதிதான். பண்டைக்காலத் தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்வது ஐரோப்பியக் கொடும்பிடியிலிருந்து இத்தருணத்தில் நம்மை விடுவிக்க உதவும் என்பது இடதுசாரி ஆய்வாளர்களின் நம்பிக்கையாகும்.”
― Ithuvae Sananaayagam
― Ithuvae Sananaayagam
“சர்.வில்லியம் ஜோன்ஸ் (இந்தப் பெயரை”
― இந்து தேசியம் [Hindu Desiyam]
― இந்து தேசியம் [Hindu Desiyam]
“கோலம் என்பது ஏன் பெண்களுக்கு மட்டுமே உரிய கலை, சடங்கியல் வெளிப்பாடாக அமைகின்றது என்பது எஞ்சிநிற்கும் கேள்வியாகும். மனிதகுல வரலாற்றில் தொடக்க காலத்தில் பெண்களே பூசாரிகளாக இருந்துள்ளனர் என்பது மானிடவியல் காட்டும்
உண்மையாகும். சங்க இலக்கியங்களில்”
― Manjal Mahimai
உண்மையாகும். சங்க இலக்கியங்களில்”
― Manjal Mahimai
“வைதீகம் இங்கே பார்ப்பனியத்தின் காவல் கோட்பாடாக மட்டுமே இருந்தது. வருணாசிரமமே (விசயநகரப் பேரரசர்களால்) இங்கே இந்துத்துவத் திற்குக் கால்கோள் இட்டது என்பதே வரலாற்று உண்மை.”
― Ithuvae Sananaayagam
― Ithuvae Sananaayagam
“பிறப்பு வழிப்பட்ட மேலாண்மையைக் கோயில்களின் மூலமாக தக்க வைத்துக்கொள்கிற வரைக்கும் ஆன்மிக அதிகாரத்தையும், அதன் மூலம் அரசியல் அதிகாரத்தையும் உயர்சாதி தக்க வைத்துக்கொண்டிருக்கிறது.”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“இக்கோயிலில் காணப்பெறும் கல்வெட்டுக்களில் இக்கோயிலின் தோற்றம் குறித்து அறிவதற்கான சான்று(கள்) ஏதும் இல்லை. இலக்கியச் சான்றுகளை நோக்குமிடத்து, பரிபாடலில் புலவர் இளம்பெருவழுதியார், இம்மலையில் திருமாலும் பலராமனும் இணைத்து வழிபடப்பெற்ற செய்தியினைக் கூறுகின்றார். ஆனால் இத்தலம் குறித்தெழுந்த ஆழ்வார்களின் பாசுரங்களில் இங்கு பலராம வழிபாடு நிகழ்ந்த செய்தியோ குறிப்புகளோ காணப்படவில்லை. ஆழ்வார்களின் காலத்தில் இங்கு பலராம வழிபாடு மறைந்துவிட்டது போலும். எனவே இளம்பெருவழுதியாரின் பரிபாடல் ஆழ்வார்களின் காலத்திற்கு முற்பட்டது எனக் கொள்ளத்தகும். அப்பாடலில் இக்கோயிலின் தோற்றம் குறித்த செய்தி ஏதும் காணப்படவில்லை.”
― அழகர் கோயில்
― அழகர் கோயில்
“வைணவப் பகைவனாக விளங்கிய இரணியனை அழிப்பதே நரசிம்ம அவதாரத்தின் நோக்கமாகும். எனவே புறமதத்தவர்களை எதிர்க்க முற்படும் போதெல்லாம், நரசிம்மமூர்த்தத்தினை வைணவர் நிறுவி வழிபடுவது பொருத்தமுடையதே. அழகர் கோயிலிலும் நரசிம்ம வழிபாடு தனித்தன்மையுடன் விளங்குவதன் காரணம் புறமத எதிர்ப்பே என்று கொள்ளலாம்.”
― அழகர் கோயில்
― அழகர் கோயில்
“இதேமாதிரி கிராமத் தெய்வங்கள் இன்பத்தை மட்டுமே கொடுக்கக்கூடிய தெய்வங்கள் அல்ல.”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“அதைவிட்டு கோவிலுக்கும் மக்களுக்கும் உள்ள உறவைப் பற்றிச் சொல்லப்படவில்லை. என்னுடைய ஆய்வு முழுக்க முழுக்க அதிலேயே மையம் கொண்டது.”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“திருக்கானப்போர் இன்று சிவகங்கை வட்டத்தில் காளையார் கோயில் என்ற பெயரோடு விளங்குகிறது.”
― அழகர் கோயில்
― அழகர் கோயில்
“தொழில், சுதந்திர அட்டவணையும், கோயில் வரலாறும் குறிப்பிடாத ஒரு திருவிழா ஆடி அமாவாசையாகும். பெருவாரியான கிராமத்து மக்கள் இத்திருவிழாவில் கலந்துகொள்வதை ஆய்வாளர் மூன்றாண்டுகளாகத் (1977, 78, 79) தொடர்ந்து காண முடிந்தது.
இத்திருவிழா இக்கோயில் இறைவனுக்காக எடுக்கப்படும் திருவிழா அன்று; கோயில் பிராமணப் பணியாளர்க்கும் இதில் தொடர்பில்லை. இது கோயில் கோபுரவாசலில் உள்ள பதினெட்டாம்படிக் கருப்பசாமிக்குரிய திருவிழாவாகும். கருப்பசாமியாகக் கருதப்பெறும் இரட்டைக் கதவுக்கு இந்நாளில் சந்தனம் பூசப்பெறுகிறது. இச்சன்னிதியில் கருப்பசாமிக்குச் சிலையுருவம் இல்லை. சந்தனம் பூசப்பெறும் இக்கதவிலேயே கருப்பசாமி உறைவதாகக் கருதி மக்கள் வணங்குகின்றனர். இந்தக் கதவுகளை நாட்டி வைத்ததாகக் கருதப்படும் குடும்பத்தினர் ஆடி அமாவாசையன்று சந்தனக்குடம் கொண்டுவந்து இக்கதவுகளுக்குச் சந்தனம் பூசுகின்றனர். எனவே இத்திருவிழா இக்கோயில் இறைவனான அழகரின் திருவிழாவாக அல்லாமல், கருப்பசாமியின் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது. சந்தனம் பூசும் உரிமையுடைய குடும்பத்தினர் கோனார் சாதியினராவர். இத்திருவிழா கோயில் ஆட்சி மரபில் சேரவில்லை. எனவே மேற்குறித்த இரு நூல்களும் இதனைக் குறிக்கவில்லை.”

“பெரியாரின் ஆய்வுமுறைக்கு நெருக்கமானது.”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
“தமிழ்நாட்டில் சித்தர் இயக்கம் மூன்று நிலைகளில் கால் கொண்டது. வேத எதிர்ப்பு, கோயில் எதிர்ப்பு என்பவையே அந்த மூன்றுமாகும். ‘‘சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே! வேர்த்து இரைப்பு வந்தபோது வேதம் வந்து உதவுமோ’’ (13) ‘‘மீனிறைச்சி தின்றதில்லை அன்றும் மின்றும் வேதியர் மீனருக்கும் நீரலோ மூழ்வதும் குடிப்பதும்’’ (157)”
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
― சமயங்களின் அரசியல் [Samayangalin Arasiyal]
“மதம் மாற அனுமதித்தது மாதிரி, சாதி மாற ஏன் இந்திய அரசியல் சட்டம் அனுமதிக்கவில்லை? சாதி காரணமான மேல், கீழ் என்கிற அடக்குமுறையை ஏன் அது பேணிப் பாதுகாக்கிறது?”
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்
― சாதி என்பது குரூரமான எதார்த்தம்

![பண்பாட்டு அசைவுகள் [Panpattu Asaivugal] பண்பாட்டு அசைவுகள் [Panpattu Asaivugal]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1665037291l/18371455._SX98_.jpg)
![தெய்வம் என்பதோர்... [Teyvam Enpatoor] தெய்வம் என்பதோர்... [Teyvam Enpatoor]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1482775240l/33596834._SX98_.jpg)