C.Vetrivel Salaiyakkurichy
“சமர் புரிகிறேன்” எனத் தெரிவித்தாள். அப்பொழுது இளங்கோசன், “கோசர் அரசன் ஒரு பெண்ணை எதிர்த்து வீழ்த்தினான் என்ற அவப்பெயரை ஒருநாளும் பெறமாட்டான் பெண்ணே!” என அவன் கூறிக் கொண்டிருந்த போதே குறுக்கிட்ட அன்னி மிஞிலியின் தந்தை, “எவரையும் அவரது உருவத்தைக் கண்டு எடைபோட வேண்டாம் அரசே. என் மகனுக்கு போர்த் தொழிலைக் கற்றுக் கொடுத்தவன் நான். என் கரத்தில் வலிமை இன்னும் இருக்கிறது. தாங்கள் குறித்த அதே நாளில் நானே தங்களை எதிர்கொள்கிறேன்” எனத் தெரிவிக்க கூட்டத்தில் சிறு சலசலப்பு நிலவியது. இளங்கோசன், “எனது கட்டளையைப் போன்றே பறை அறிவிக்கப்படட்டும். இந்தக் கிழவனுக்குப் பதில் வேறு எவராவது சமர் செய்ய வந்தால் நான் போரிடுகிறேன். இல்லையேல், நான் நியமிக்கும் ஒருவன் இந்தக் கிழவனுடன் போர் செய்வான். நாளைய மறுநாள் காலை முதல் சாமத்தில் செண்டுப்”
― Venvel Senni - 3
― Venvel Senni - 3
Is this you? Let us know. If not, help out and invite C.Vetrivel to Goodreads.





