Kudavayil Balasubramanian
Born
in India
September 22, 1948
Genre
|
தஞ்சாவூர்
—
published
1995
|
|
|
தஞ்சைப் பெருவுடையார் கோயில் இராசராசேச்சரம்: கோயில் நுட்பம்
|
|
|
இராஜராஜேச்சரம் [Rajarajecharam]
—
published
2010
|
|
|
முப்பது கட்டுரைகள்
|
|
|
நந்திபுரம் - [Nandhipuram]
|
|
|
கலையியல் ரசனைக் கட்டுரைகள்
—
published
2014
|
|
|
Tiruvarur Thirukoil
|
|
|
கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்
|
|
|
தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில்
—
published
2013
|
|
|
தஞ்சைப் பெரிய கோயில்
|
|
“பங்காரு காமாட்சியம்மன் கோயில்:
மேலராஜவீதியின் மேல்சிறகில் உள்ள இக்கோயில் காமாட்சி அம்மனுக்காகக் பிரதாபசிம்மர் ஆட்சிக்காலத்தில் எடுக்கப் பெற்றதாகும். பங்காரு என்னும் தெலுங்குச் சொல் பொன் அல்லது தங்கம் எனப் பொருள்படும். காஞ்சி காமாட்சியம்மன் ஆலயத்தில் வழிபாட்டிலிருந்த உற்சவத் திருமேனியான காமாட்சி விக்ரகத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கச் சில அந்தணர்கள் மறைத்துக் கொண்டுவந்ததாகவும், வரும் வழியில் பல இன்னல்களை அனுபவித்தும், உடையார்பாளையம் ஜமீன்தாரிடம் அடைக்கலம் பெற்றும், கடைசியாகத் தஞ்சைக்குக் கொண்டு வந்து மராட்டிய மன்னர்களின் அரவணைப்போடு காப்பாற்றியதாகவும் கூறுவர். பல்லாண்டுகள் தஞ்சையிலேயே இத்திருமேனி இருந்துவிட்டதால் காஞ்சி காமகோடி மடத்துச் சங்கராச்சாரியாரின் அருளாணைப்படி மராட்டிய அரச குடும்பத்தால் இங்கேயே கோயில் கட்டிப் பிரதிட்டை செய்யப்பெற்றதாகவும் மரபுச் செய்தியாகக் கூறிவருகின்றனர்.
முதலில் பிரதாபசிம்மராலும், பின்னர் துளஜா மன்னராலும், 1874இல் காமாட்சிபாயி சாகிப்பும் திருப்பணிகள் செய்து அறக்கொடைகள் நல்கியுள்ளனர். இவற்றை இக்கோயிலுள்ள மராட்டி மொழிக் கல்வெட்டுகள் விளக்குகின்றன. 1842இல் பச்சையப்ப முதலியார் மாலைக்காலப் பூஜைக்காக அளித்த அறக்கொடை பற்றிய ஒரு தமிழ்க் கல்வெட்டு உள்ளது. 1895இல் புகைப்படக்காரர் ஒருவரின் மனைவியான மீனாட்சி அம்மாள் என்பவரால் மகாமண்டப வடக்கு வாயில் கட்டப்பெற்றது. அதன் நிலைக்காலில் அவ்வம்மையாரின் உருவச்சிலையும், கல்வெட்டும் இருப்பதோடு, புகைப்படக்கருவியின் கல்வெட்டு (காமரா) வரைபடம் ஒன்றும் உள்ளது.
இக்கோயில் காஞ்சி காமகோடி பீடத்தால் நிருவகிக்கப் பெறுகின்றது.”
― தஞ்சாவூர்

“தற்போது காணப்பெறும் பெரிய இடபமும், இடப மண்டமும் தஞ்சையை ஆட்சி செய்த நாயக்க மன்னன் அச்சுதப்பன் காலத்தியப் படைப்புகளாகும். இவை போன்றே அம்மன் திருக்கோயில் பாண்டிய மன்னன் ஒருவனாலும், கந்தக்கோட்டம், மல்லப்ப நாயக்கர் மண்டபம், மூர்த்தி அம்மன் மண்டபம் ஆகியவை செவ்வப்ப நாயக்கர் காலத்திலும், கணபதி ஆலயம் மராட்டியர் காலத்திலும் கட்டப்பெற்றவையாகும்.
காஞ்சி கயிலாசநாதர் கோயில், தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், திருபுவன வீரேச்சரம் ஆகிய திருக்கோயில்களின் பத அமைப்பு, கோயில் கட்டுமானம் ஆகியவற்றைத் தஞ்சைப் பெரிய கோயிலோடு ஒப்பிட்டு நோக்கும்போது இக்கோயிலுக்குரிய இடப மண்டபம், பலிபீடம் ஆகியவை பண்டு அக்கோயில் எடுக்கப்பெற்ற காலத்தில் இராஜராஜன் திருவாயிலுக்கும், கேரளாந்தகன் திருவாயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில்தான் இருந்திருத்தல் வேண்டும் என உறுதியாகக் கொள்ளமுடிகிறது. முன்பு இவ்விடத்தில் இடம்பெற்றிருந்த இராஜராஜேச்சரத்துச் சோழர்கால நந்தி தற்போது தென்புறத் திருச்சுற்று மாளிகையில் இடம்பெற்றுத் திகழ்கின்றது. இவற்றைத் தொகுத்து நோக்கும்போது இராஜராஜேச்சரத்தின் முதற் பிராகாரத்தில் சண்டீசர் ஆலயம் தவிர வேறு எந்த ஒரு கட்டுமானமும் இல்லாமல் இருந்தது என்பது உறுதியாகின்றது.”
― இராஜராஜேச்சரம் [Rajarajecharam]

“தற்போது தஞ்சையின் நடுநாயகமாகத் திகழும் அரண்மனை நாயக்க மன்னர்கள் கட்டியதேயாகும். பின் வந்த மராட்டியர் இதனை மேலும் பொலிவுடையதாகச் செய்தனர்.”
― தஞ்சாவூர்
― தஞ்சாவூர்
Is this you? Let us know. If not, help out and invite Kudavayil to Goodreads.