ஜேகே's Blog

June 27, 2025

அம்மாளாச்சி கொடியேற்றம்



பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன்.
இரவு உங்க என்ன சாப்பாடு?

மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா?

அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?மேலும் வாசிக்க »
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 27, 2025 04:23

June 23, 2025

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம்’ கதை வாசிக்கப்படுகிறது.

இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது.நிகழ்வு அறிவித்தல்_______________அன்புக்குரியவர்களே!அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 23, 2025 03:54

June 15, 2025

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா



‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 15, 2025 03:45

June 13, 2025

என் தலைக்கு மேல் சரக்கொன்றை


டெல்சுலா ஆவ் எழுதிய Laburnum For My Head என்கின்ற ஆங்கில நூலை எம். ஏ. சுசீலா தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். டெம்சுலா அசாமில் பிறந்த நாகர் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். இந்திய உபகண்டத்தின் அசாம், நாகாலாந்து போன்ற வடகிழக்குப் பிராந்தியங்களின் காடும் மலையும் சூழ்ந்த நிலத்துக் குடிகளின் பல்வேறு வாழ்வுச் சிக்கல்களையும் போராட்டங்களையும் ஒரு சிறுகதைத் தொகுப்பின் எல்லைகளுக்குள் நின்று பேசக்கூடிய புத்தகம் இந்த ‘என் தலைக்கு மேல் சரக்கொன்றை’.

தொகுப்பின் முதற் சிறுகதை ‘என் தலைக்கு மேல் சரக்கொன்றை’. கொன்றை...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 13, 2025 03:10

June 11, 2025

அந்தி மழை பொழிகிறது


அந்தி மழை பொழிகிறது. ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது.

ஒரு பார்வையற்றவனுக்கு எப்படித் தன் காதலியின் முகம் மழைத்துளிகளில் தெரியமுடியும் எனப் பலர் இப்பாடலை எள்ளி நகையாடுகிறார்கள். ஆனால் இவ்வரிகளை அவ்வாறான நேர்கோட்டு அர்த்தத்தில் அணுகக்கூடாது என்று நினைக்கிறேன்.பகல் முழுதும் வெயில் சுட்டுக்கிடக்கும் காலத்தில் அந்திப்பொழுது இதத்தினைக் கொணரும். அந்த இதத்தோடு மழையும் சேரும்போது அதன் உணர்வே அலாதியானது. அந்திப்போழுது ஆதலால் மறுநாள் சூரியன் எழும்வரை இரவெல்லாம் நீடிக்கக்கூடிய இதம் அது.இப்போது பார்வைப...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 11, 2025 03:07

June 7, 2025

வரலாற்றின் புனைவு


உண்மை சொல்லப்படும்போதே புனைவாக மாற ஆரம்பிக்கிறது என்ற வாசகத்தை வரலாற்றை அறியும்போதெல்லாம் நமக்கு நாமே நினைவூட்டவேண்டியிருக்கிறது. சொல்லப்படும் கணத்திலேயே புனைவாக மாறக்கூடிய ஒன்று, பல நூற்றாண்டுகள் தாண்டி நம் கையில் வந்து சேரும்போது எப்படி மாறியிருக்கும்? அதுதான் வரலாறு. ஒரு வண்ணாத்திப்பூச்சியைப் பார்க்கையில், சில நாட்களுக்கு முன்னர்தான் அது வெறும் புழுவாக மரக்கிளையில் நெளிந்துகொண்டிருக்கிறது என்று சொல்லமுடியுமா? அதுபோலத்தான் வரலாறும். Metamorphosis என்ற வார்த்தைக்கு மிகச்சிறந்த உதாரணமே வரலாறாகத்...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 07, 2025 03:05

May 26, 2025

கலைஞர்களின் சொர்க்கம்



மொன்மார்த் (Montmartre) என்பது பாரிசின் மையத்திலிருந்து சற்றுத்தள்ளியிருக்கும் சிறு மலைப்பகுதியாகும். நவீனத்துவத்தின் முக்கிய பல கலைஞர்களான வான்ங்கோ, பிக்காசோ போன்றவர்களின் புகலிடமாக இந்த ஊர் திகழ்ந்திருக்கிறது. பாரிஸ் நகரத்தின் அன்றாடங்களிலிருந்து சற்று வேறான, பொதுப் புத்தியிலிருந்து விலகிய கலையுள்ளங்களை ஊக்குவிக்கும் நகரமாக மொன்மார்த் நூற்றாண்டுகளுக்கு மேலாகவே இருந்துள்ளது. பாரீசைப்போன்றில்லாமல் இங்குதான் எந்த எதிர்பார்ப்புகளுமில்லாமல் மனிதர்கள் தன்னோடு நட்போடு பழகியதாக வான்ங்கோ குறிப்பிட்டிரு...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 26, 2025 07:00

April 28, 2025

பிரியாவின் கதை



Home to Biloela என்ற நூலைச் சென்ற வாரம் ஒலிப்புத்தகமாகக் கேட்டு முடித்தேன்.
சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் தஞ்சக்கோரிக்கை தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு சிப்பிலியாடப்பட்ட பிரியா நடேசலிங்கம் குடும்பத்தின் கதையைப் பலரும் அறிந்திருப்பார்கள். அவர்களின் துன்பகரமான பயணத்தை ரெபேக்கா ஹோல்டு, நிரோமி டி சொய்சா போன்றவர்களின் உதவியோடு பிரியா முழுமையாக இந்நூலில் பதிவு செய்துள்ளார். பிரியாவின் பார்வையில் பிரதானமாக நகரும் இந்நூலில் அஞ்செலா, ரொபின் அந்தக் குடும்பத்தின் போராட்டத்துக்கு உறுதுணையாக இர...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 28, 2025 04:40

December 8, 2024

வரலாற்றின் சாட்சியம்

                                              

இறுதி யுத்தக் காலத்தில் நம் மக்களுக்கு அளப்பரிய மருத்துவ சேவையாற்றிய வரதராஜாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் “Untold truth of Tamil genocide” என்ற நூலை வாசித்து அதனைப்பற்றிய சிறு அறிமுகத்தைச் செய்யும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது.மேலும் வாசிக்க »
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 08, 2024 12:57

November 26, 2024

பெலிசிற்றா


நான் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் அத்தியாயம் ஒன்று அகழ் இணைய இதழில் வெளியாகியுள்ளது.

மேலும் வாசிக்க »
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 26, 2024 13:39