புத்தகவெளியீட்டு விழா- புகைப்படங்கள்

டிசம்பர் 25 மாலை எனது புதிய புத்தகங்களின் வெளியீட்டுவிழா சிறப்பாக நடைபெற்றது. அரங்கு நிறைந்த கூட்டம். நிறைய இளைஞர்களைக் காண முடிந்தது மகிழ்ச்சி அளித்தது.

நிகழ்விற்குத் தலைமேற்று சிறப்பித்தார் தொழிலதிபர் அம்பாள் ஆர் முத்துமணி. அவர் தேர்ந்த இலக்கிய வாசகர். என் மீது அன்பு கொண்ட நண்பர்.

நிகழ்விற்கு காளிமார்க் நிறுவன உரிமையாளர் தனுஷ்கோடி அவர்களும் வருகை தந்து சிறப்பித்தார்.

கவளம் நூல் குறித்து சேரலாதன் சிறப்பான உரையை நிகழ்த்தினார். சிறுகதையின் பல்வேறு முனைகளைத் தொட்டு பேசியது அவரது ஆழ்ந்த வாசிப்பின் அடையாளமாக இருந்தது.

ஒளியின் கைகள் நூலைப் பற்றிய இளம்பரிதியின் பேச்சு அபாரம். ஓவியம் குறித்த அவரது தேடலும் பார்வையும் சிறப்பாக பேச்சில் வெளிப்பட்டது.

அது போலவே பாலபாரதி சிறார் இலக்கியத்தின் தற்காலப் போக்குகளை சுட்டிக்காட்டி எனது சிறார் நூலை அறிமுகம் செய்த விதமும் சிறப்பாக அமைந்திருந்தது

நிகழ்வின் துவக்கமாக கனியமுதன் பாரதியார் பாடலை இனிமையாகப் பாடி அரங்கை மகிழ்வித்தான். கனிக்கு எனது அன்பும் நன்றியும்.

புத்தகங்களைச் சிறப்பாக வடிவமைத்த எனது மகன் ஹரி பிரசாத் மற்றும் நூலை அழகாக அச்சிட்டுத் தந்த நூல்வனம் மணிகண்டன். தேசாந்திரி பதிப்பகத்தின் மேலாளர் அன்புகரன். உதவியாளர் கண்ணகி. நிகழ்வைத் தொகுத்து வழங்கிய முரளி. விழாவிற்குத் துணை நின்ற சண்முகம், அகரமுதல்வன், கபிலா காமராஜ். ஸ்ருதி டிவி கபிலன், ஆகியோருக்கு மனம் நிறைந்த நன்றி.

நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த டாக்டர் பரணி. நண்பர் சண்முகசுந்தரம், மொழிபெயர்ப்பாளர் ஹேம்ஸ். ஜென் ராம், உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

எனது அழைப்பை ஏற்று நிகழ்விற்கு வருகை தந்த எழுத்தாளர்கள். பத்திரிக்கையாளர்கள். திரைத்துறை நண்பர்கள், இலக்கிய வாசகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனம் நிறைந்த அன்பும் நன்றியும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2024 23:02
No comments have been added yet.


S. Ramakrishnan's Blog

S. Ramakrishnan
S. Ramakrishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow S. Ramakrishnan's blog with rss.