தலையில் முல்லைப்பூ சூடிக்கொண்டுபிறந்த வீட்டைவிட்டு வெளியேறிபதினைந்து வருடங்கள் ஆகிவிட்டனயாருக்கும் சொல்லாமல்அந்த வீட்டை அண்ணனுக்கு எழுதிக்கொடுத்த பிறகுகடுத்த முகத்துடன் வருடத்திற்கு ஒன்றோ இரண்டோ தடவை மட்டும்அவசரகதியில் போயிருக்கிறேன்மாற்றுத் துணிகளும் துவட்டும் துண்டும்அமுக்கி வைத்து நிறைந்திருக்கும் வயர்கூடையைமாடிப்படியில்தான் திணித்து வைப்பேன்வழக்கம் போல், இரவு குளித்துவிட்டு வந்துகூச்சல் போடும் குழந்தைகளுக்குஇரவுணவு பரிமாறத் தொடங்கும்அவசர நேரத்தில் கரண்டு போகும்நான் இதுவரை பார்த்தேயிராததுர்நாற்றம் பரப்பும்அந்தச் சிறு வண்டு அப்போதுசரியாக என் பின்கழுத்தில்பறந்து வந்து உட்காரும்.
காலச்சுவடு – ஜூலை 2024
The post பிறந்த வீட்டில் – அம்முதீபா first appeared on சுஜா.
Published on September 24, 2024 03:40